உள்ளடக்கத்துக்குச் செல்

மானச சஞ்சர ரே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மானச சஞ்சர ரே என்று தொடங்கும் பாடல் பதினெட்டாவது நூற்றாண்டில் சதாசிவ பிரம்மேந்திரரால் சமசுகிருத மொழியில் இயற்றப்பட்ட ஒரு பிரபலமான கருநாடக இசை கீர்த்தனை ஆகும்.[1] [2] இது 28-வது மேளகர்த்தா ராகமாகிய ஹரிகாம்போஜியில் பிறந்த சியாமா ராகத்தில், ஆதி தாளத்துடன் பாடப்படுவது வழக்கம். ஹரிச்சந்திரா மலையாளத் திரைப்படத்தின் ஆத்மவித்யாலயமே பாடல் இந்தப் படைப்பைத் தழுவி எடுக்கப்பட்டது.

பாடல் வரிகள் மற்றும் பொருள்

[தொகு]
பாடல் வரிகள் பொருள்
பல்லவி மானஸ சஞ்சர ரே! பிரப்பணி
மானஸ சஞ்சர ரே!
மனமே, உன் தீர்த்தயாத்திரை பிரம்மத்தை நோக்கியே இருக்கட்டும்!
அனுபல்லவி மதசிகிபிஞ்சாலங்கிருதசிகுரே

மஹனீயகபோலவிஜிதமுகுரே

ஆனந்தபரவசத்தால் ஆடும் மயில்களின் இறகுகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ள பரப்பிரம்மத்தின் ஜடாமுடியே உனது தியான லட்சியம் ஆகட்டும். கண்ணாடியைவிட பிரகாசமான அந்த (பரப்பிரம்மத்தின்) கன்னங்களில் இருக்கட்டும் உனது கவனம்.
சரணம் ஸ்ரீ ரமணீகுச துர்க விஹாரே, சேவக ஜனமந்திரமந்தாரே
பரமஹம்ஸமுக சந்திரசகோரே
பரிபூரிதமுரளீரவதாரே
மகாலட்சுமியின் மார்பகங்களான கோட்டைகளுக்குள்ளே வலம் வரும், பக்தர்களுக்கு எளிதில் அடையக்கூடியவீட்டுமுற்றத்தின்
மந்தாரம் போல், பூரணசந்திரபிம்பத்தின் மீது செம்பகம் போல், அண்டமனைத்தையும் தனது புல்லாங்குழலிசை பிரவாகத்தால் நிரப்பும் பிரம்மத்தை நோக்கி அமையட்டும் உன் யாத்திரை.

மேற்கோள்கள்

[தொகு]
  1. மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா (1991). "சதாசிவ பிரம்மேந்திர கிருதிகள்" (இசை) (in சமசுகிருதம்).{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. "சங்கீத சுதா" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-10-02.

வெளியிணைப்புகள்

[தொகு]
  1. http://www.karnatik.com/c1059.shtml
  2. https://sanskritdocuments.org/doc_deities_misc/kIrtanAnisadAshivabrahmendra.pdf
  3. https://www.sacredyoga.in/Some%20compositions%20of%20Sadashiva%20Brahmendra.pdf
"https://ta.wikipedia.org/w/index.php?title=மானச_சஞ்சர_ரே&oldid=3809800" இலிருந்து மீள்விக்கப்பட்டது