மாத்துகுமள்ளி வித்யாசாகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாத்துகுமள்ளி வித்யாசாகர்
படிமம்:Mathukumalli vidyasagar.jpg
பிறப்பு29 செப்டம்பர் 1947 (1947-09-29) (அகவை 75)
குண்டூர், ஆந்திரப் பிரதேசம்]], இந்தியா
தேசியம் இந்தியா
துறைகட்டுப்பாட்டு முறைமை
கல்வி கற்ற இடங்கள்விஸ்கொன்சின் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்தாமஸ் ஜே. ஹிக்கின்ஸ்
முனைவர் பட்ட 
மாணவர்கள்
கிசிஸ்டன் மோரிஸ்
அறியப்படுவதுகட்டுப்பாட்டியலில் பங்களிப்பு

மாத்துகுமள்ளி வித்யாசாகர் (Mathukumalli Vidyasagar) (பிறப்பு செப்டம்பர் 29 1947) ஓர் முன்னணி கட்டுப்பாட்டியல் கொள்கையாளரும் அரச கழகத்தின் சக கூட்டாளாருமாவார்.[1] ஐதராபாத்தின் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் மின் பொறியியல் துறையில் பேராசிரியராக உள்ளார். முன்னதாக இவர் டல்லாஸில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் உயிரியல் அறிவியல் துறையின் தலைவராக இருந்தார். அதற்கு முன்னர் இவர் டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்) நிறுவனத்தில் நிர்வாக துணைத் தலைவராக இருந்தார். அங்கு இவர் மேம்பட்ட தொழில்நுட்ப மையத்திற்கு தலைமை தாங்கினார். முன்னதாக, பெங்களூரிலுள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பில் செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபாட்டிக்ஸ் (சிஐஆர்) மையத்தின் இயக்குநராக இருந்தார். இவர் பிரபல கணிதவியலாளர் மா. வெ.சுப்பாராவின் மகனாவார். 

இவரது எர்டெஸ் எண் இரண்டு மற்றும் இவரது ஐன்ஸ்டீன் எண் மூன்று.[2]

கல்வி[தொகு]

மேடிசனிலுள்ள விஸ்கொன்சின் பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுகலை, முனைவர் ஆகியவற்றை முடித்தார்.[3]

தொழில்[தொகு]

இவர் 1969 இல் மார்க்வெட் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார் [3]

விருதுகள்[தொகு]

வித்யாசாகர் பல விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றுள்ளார். அவற்றுள்:

 • 1983: "நேரியல் மற்றும் நேரியல் அல்லாத விநியோகிக்கப்பட்ட அமைப்புகளின் ஸ்திரத்தன்மை பகுப்பாய்விற்கான பங்களிப்புகளுக்காக" மின் மற்றும் மின்னணுவியல் பொறியியலாளர்களின், தனது 35 வயதில், இந்த விருதைப் பெற்ற இளையவர்களில் ஒருவரானார்.[4]
 • 1984: பொறியியல் கல்வியின் அமெரிக்கச் சங்கத்தின் பிரடெரிக் எம்மன்ஸ் டெர்மன் விருது.[5]
 • 2004: ஐஇஇஇ ஸ்பெக்ட்ரம் என்ற வளைதளம் இவரை நாற்பது "தொழில்நுட்ப குருக்களில்" ஒருவராக பட்டியலிட்டது.
 • 2008: ஐஇஇஇ கட்டுப்பாட்டியல் விருது.[6][7]
 • 2012: அரச கழகத்தின் சக கூட்டாளர் [8]
 • 2012: ரூஃபஸ் ஓல்டன்பர்கர் பதக்கம்
 • 2013: ஜான் ராகஸ்ஸினி கல்வி விருது, அமெரிக்க தானியங்கி கட்டுப்பாட்டு கழக்த்தின் - பாடப்புத்தகங்கள் மற்றும் ஆராய்ச்சிகளை வெளியிடுவதன் மூலம் தானியங்கி கட்டுப்பாட்டு கல்விக்கு சிறப்பான பங்களிப்புகளுக்காக வழங்கப்பட்டது.
 • 2015: ஜவகர்லால் நேரு அறிவியல் சக கூட்டாளர், இந்திய அரசு
 • 2017: சக கூட்டாளர், சர்வதேச தானியங்கி கட்டுப்பாட்டு கூட்டமைப்பு
 • 2017: விஸ்கான்சின் பல்கலைக்கழக மின் பொறியியல் துறையின் 125 வது ஆண்டு விழாவின் போது 125 "செல்வாக்குமிக்க மக்களில்" இவரது பெயர் பட்டியலிடப்பட்டது

மேற்கோள்கள்[தொகு]

 1. "Royal Society Fellowship Page". Royal Society. 23 April 2012 அன்று பார்க்கப்பட்டது.
 2. "Mathukumalli Vidyasagar - UT Dallas: CV". personal.utdallas.edu. 2020-05-28 அன்று பார்க்கப்பட்டது.
 3. 3.0 3.1 "Mathukumalli Vidyasagar - UT Dallas: CV". personal.utdallas.edu. 2020-05-28 அன்று பார்க்கப்பட்டது."Mathukumalli Vidyasagar - UT Dallas: CV". personal.utdallas.edu. Retrieved 28 May 2020.
 4. "Fellows - V". IEEE. 21 January 2011 அன்று பார்க்கப்பட்டது.
 5. "Past Frederick Emmons Terman Award Winners". American Society for Engineering Education. 2 April 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 21 January 2011 அன்று பார்க்கப்பட்டது.
 6. "IEEE Control Systems Award Recipients" (PDF). IEEE. 21 January 2011 அன்று பார்க்கப்பட்டது.
 7. "IEEE Control Systems Award". IEEE Control Systems Society. 29 December 2010 அன்று மூலம் பரணிடப்பட்டது. 21 January 2011 அன்று பார்க்கப்பட்டது.
 8. "Royal Society Fellowship Page". அரச கழகம். 23 April 2012 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]