மாதா பவானியின் படிக்கிணறு
| மாதா பவானியின் படிக்கிணறு | |
|---|---|
மாதா பவானியின் படிக்கிணறு, 1866 | |
| அடிப்படைத் தகவல்கள் | |
| அமைவிடம் | அசார்வா, அகமதாபாது |
| புவியியல் ஆள்கூறுகள் | 23°02′40″N 72°36′25″E / 23.0443357°N 72.6068337°E |
| மாநிலம் | குசராத்து |
| மாநகராட்சி | அகமதாபாத் மாநகராட்சி |
| செயற்பாட்டு நிலை | செயல்பாட்டிலுள்ளது |
| பாரம்பரியகளமாக அறிவிக்கப்பட்டது | இது குசராத்து மாநில பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னம் ( N-GJ-23) |
மாதா பவானியின் படிக்கிணறு (Mata Bhavani's Stepwell) அல்லது மாதா பவானி நி வாவ் என்பது இந்தியாவின் குசராத்தின் அகமதாபாத்திலுள்ள அசார்வா பகுதியில் அமைந்துள்ள ஓர் படிக்கட்டுக் கிணறாகும்.
வரலாறும் கட்டிடக்கலையும்
[தொகு]மாதா பவானியின் படிக்கட்டு கிணறு 11ஆம் நூற்றாண்டில் குசராத்தில் சோலாங்கி வம்ச ஆட்சியின் போது கட்டப்பட்டது. இந்தியாவில் உள்ள படிக்கட்டுக் கிணறுகளின் ஆரம்பகால எடுத்துக்காட்டுகளில் இதுவும் ஒன்றாகும். ஒரு நீண்ட படிக்கட்டுகள் கிழக்கு-மேற்கு அச்சில் நிலைநிறுத்தப்பட்ட பல அடுக்கு திறந்த அறைகளின் வரிசையின் கீழ் நீருக்கு இட்டுச் செல்கின்றன. நெடுவரிசைகளும், அடைப்புக்குறிகளும் விட்டங்களின் விரிவான அலங்காரமும் படிகிணறுகள் எவ்வாறு கலையின் ஒரு வடிவமாக பயன்படுத்தப்பட்டது என்பதற்கு ஒரு முக்கிய எடுத்துக்காட்டு.[1] இந்து தெய்வமான பவானிக்கு மிகவும் பிற்காலத்தில் கட்டப்பட்ட சிறிய கோவில் கீழ் மண்டபத்தில் அமைந்துள்ளது. அதிலிருந்து படிக்கிணறு அதன் பெயரைப் பெற்றது. இது நவீன அகமதாபாது நகரத்தை நிறுவுவதற்கு முன்பு கட்டப்பட்டது.[2]
படிக்கட்டுக் கிணறு 46 மீட்டர் நீளமும் 5.1 மீட்டர் அகலமும் கொண்டது. இது மூன்று அடுக்களுடன் மூன்று மண்டபங்களையும் கொண்டுள்ளது. கிணற்றின் விட்டம் 4.8 மீட்டர் ஆகும்.[3]
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ Tadgell, Christopher (1990). The History of Architecture in India. London: Phaidon Press. ISBN 0-7148-2960-9.
- ↑ Gazetteer of the Bombay Presidency: Ahmedabad. Government Central Press. 1879. pp. 282–283.
- ↑ Shukla, Rakesh (24 June 2014). "ક્યારેક લોકોની તરસ છિપાવતા હતા ગુજરાતના આ જળ મંદિરો-માતા ભવાનીની વાવ". gujarati.oneindia.com (in குஜராத்தி). Retrieved 20 November 2016.