உள்ளடக்கத்துக்குச் செல்

பவானி (இந்து தெய்வம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பவானி (Bhavani, மேலும் துளஜா, துரஜா, துவரிதா, அம்பா மற்றும் ஜகதாம்பா ) என்று அழைக்கப்படுபவர் இந்து சமய தெய்வமான பார்வதியின் அவதாரமாக கருதப்படுகிறார். இவர் மகாராட்டிரத்தில் வணங்கப்படும் துர்க்கையின் ஒரு வடிவம் ஆவார். மேலும் இவர் வடக்கு குஜராத், வடக்கு கர்நாடகம், மேற்கு ராஜஸ்தான் மற்றும் பஞ்சாபின் ராஜபுத்திரர்களால் வணங்கப்படுகிறார். பவானி என்ற பெயருக்கு "உயிரைக் கொடுப்பவர்" என்று பொருள் சொல்கின்றனர். அதாவது இயற்கையின் சக்தி அல்லது படைப்பு ஆற்றலின் ஆதாரம். இவர் தனது பக்தர்களுக்கு அருளை வழங்கும் ஒரு தாயாகக் கருதப்படுகிறார். மேலும் அசுரர்களைக் கொல்வதன் மூலம் நீதியை நிலைநாட்டுபவராக இடம் வகிக்கிறார். இறைவன் சிவன் போன்ற பவ, தேவி பார்வதி போன்ற பவானி .

மராட்டிய மன்னர் சிவாஜியின் பாதுகாப்புக்கான காவல் தெய்வமாக பவானி இருந்தார். பவானியின் மீது இவர் கொண்ட ஆழ்ந்த பக்தியில் இவர் தனது வாளான பவானி தல்வாரை இத்தெய்வத்துக்கே அர்ப்பணித்தார். பல மராத்திய நாட்டுப்புறக் கதைகள் பவானியைக் கொண்டாடுகின்றன. சிவாஜியின் தாயார் பவானியின் சிறந்த பக்தர் என்று கூறப்பட்டது. மகாராஷ்டிராவின் துல்ஜாப்பூர் நகரம் நவராத்திரியின் (செப்டம்பர் முதல் அக்டோபர் வரை) வருடாந்திர துல்ஜா பவானி கண்காட்சி நடக்கும் இடமாகும். மேலும் இது 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த துல்ஜா பவானி கோயிலின் மூலமாகும் . இந்த கோவிலில் கருங்கல்லால் செய்யப்பட்ட தேவியின் திரு உருவச் சிலையானது, ஒரு மீட்டர் (சுமார் 3 அடி) உயரமுடன், எட்டு கைகளில் ஆயுதங்களைக் கொண்டும் மற்றும் கொல்லப்பட்ட அரக்கன் மகிசாசூரனின் தலை ஆகியவற்றைக் கொண்டாக உள்ளன.  

[ மேற்கோள் தேவை ]

பவானியின் கோயில்கள்

[தொகு]

மகாராஷ்டிரத்தின் ,உஸ்மானாபாத் மாவட்டத்தில் துல்ஜாப்பூரில் உள்ள துல்ஜா பவானி கோயில் 51 சக்தி பீடங்களில் (புனித யாத்திரை தளங்களில்) ஒன்றாக கருதப்படுகிறது. இந்த கோயில் பொ.ச. 12 ஆம் நூற்றாண்டு காலக்கட்டத்தில் கட்டப்பட்டது. மற்றொரு துளஜா பவானி கோவிலானது கி.மி. 1537 மற்றும் கி.பி. 1540 க்கு இடைப்பட்ட காலத்தில் சிட்டர்கரில் கட்டப்பட்டது, [1] இது 18°00′41″N 76°07′32″E / 18.011386°N 76.125641°E / 18.011386; 76.125641 ஆய அமைந்துள்ளது

1970 களின் நடுப்பகுதியில், மும்பையின் கோரேகானில் குருவார்ய லெப்டினன்ட் ஸ்ரீ அன்னாஜி ஷெலாரால் பவானி மற்றும் பகவதி தெய்வங்களுக்கு கோயில் கட்டப்பட்டது. இந்த கோயில் பஹாடி பூய்கோட் கில்லா என்ற மலை உச்சியில் கட்டப்பட்டுள்ளது. இது ஒரு அழகான கோயிலாகவும், அமைதியும் மிகவும் சாந்தம் கொண்டதாகவும் உள்ளது. கோயில் பெரிய செம்மயிற்கொன்றை மரங்களால் சூழ்ந்துள்ளது. இந்த இடம் நகர சந்தடியில் இருந்து வெளியேறி அமைதியான சூழலில் இருக்க நல்ல இடமாகவும், தியானத்திற்கு ஏற்ற இடமாகவும் உள்ளது. முகவரி: ஸ்ரீ பவானி மாதா சேவா டிரஸ்ட், பஹாடி பூய்கோட் கில்லா, உன்னத் நகர் எண் 1, ஃபிலிமிஸ்தான் ஸ்டுடியோவுக்கு பின்னால், கோரேகான் மேற்கு, மும்பை.

வரலாறு

[தொகு]

மகாராஷ்டிரத்தின் நான்கு சக்தி பீடங்களில் தாய் தெய்வத்தின் வடிவத்தில் சக்தி வழிபாடு காணப்படுகிறது: பவானி என்ற பெயரில், துல்ஜாபூரில் அமர்ந்துள்ளார்; கோலாப்பூரில் மகாலட்சுமியாகவும் ; மகூரில் மகாமாயா ரேணுகாவாகவும்  ; மற்றும் சப்தஸ்ருங்கியில் ஜகதம்பா எனவும் உள்ளார். ஸ்ரீ பவானி அம்மான் என்ற பெயரில் தமிழ்நாடு (பெரியபாளையம்) மாநிலத்தில் வழிபடுகிறார். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மற்ற சக்தி கோயில்கள் அம்பேஜோகை மற்றும் ஆந்த் ஆகிய இடங்களில் உள்ளன .

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பவானி_(இந்து_தெய்வம்)&oldid=2906115" இலிருந்து மீள்விக்கப்பட்டது