மாசுகாக்னைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாசுகாக்னைட்டு
Mascagnite
மாசுக்கக்னைட்டின் ஊசிவடிவ படிகங்கள் மற்றும் செதில்கள்
பொதுவானாவை
வகைசல்பேட்டு கனிமம்
வேதி வாய்பாடு(NH4)2SO4
இனங்காணல்
நிறம்நிறமற்றது,சாம்பல், மஞ்சள்.
படிக அமைப்புநேர்சாய்சதுரம்
பிளப்புதனித்துவம்/ {001} இல் சரியான பிளவு
முறிவுஒழுங்கற்றது
விகுவுத் தன்மைவெட்டலாம்
மோவின் அளவுகோல் வலிமை2 - 2 12
மிளிர்வுபளபளப்பும், மங்கல்
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகும், ஒளிகசியும்,ஒளிபுகாது
அடர்த்தி1.768 கி/செ.மீ3
மேற்கோள்கள்[1][2][3][4]

மாசுகாக்னைட்டு (Mascagnite) என்பது (NH4)2SO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். இதுவோர் அரிய அமோனியம் சல்பேட்டு கனிமமாகும். நேர்சாய்சதுரத் திட்டத்தில் இக்கனிமம் படிகமாகிறது. தொங்கு ஊசிப்பாறைகள் போல தோன்றும் இக்கனிம படிகங்கள் சரியான படிகப்பிளவை வெளிப்படுத்துகின்றன. மோவின் அளவுகோல் மதிப்பின் படி இதன்கடினத்தன்மை 2.5 மதிப்பைக் காட்டிலும் குறைவாகும். எனவே மொத்தத்தில் இது ஒரு மென்மையான கனிமம் ஆகும். நிறமற்று காணப்படும் மாசுகாக்னைட்டு நீரில் கரையும். இதன் ஒளியியல் பண்புகள் மாறுபடுகின்றன. தூய்மையான நிலையில் இப்படிகங்களில் ஒளிபுகும். சாம்பல் அல்லது மஞ்சள் நிற ஒளிபுகா படிகங்களும் அறியப்படுகின்றன.

விசுவியசு மலையின் நீராவித்துளைகளில். சுரங்கத் தீ சுவாலைகளுடன் சேர்ந்து மாசுகாக்னைட்டு காணப்பட்டது. இத்தாலிய உடற்கூறு வல்லுநர் பாலோவ் மாசுகாக்னி (1752-1815) முதன் முதலில் இதைக் கண்டறிந்த காரணத்தால் அவர் பெயர் கனிமத்திற்கு வைக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள் =[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாசுகாக்னைட்டு&oldid=2661053" இலிருந்து மீள்விக்கப்பட்டது