மாக்சிம் லகார்டே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாக்சிம் லகார்டே
Maxime Lagarde
2021 ஆம் ஆண்டில் மாக்சிம் லாகார்டே
நாடுபிரான்சு
பிறப்பு16 மார்ச்சு 1994
நியோர்ட்டு, தியூக்சு-செவிரசு,பிரான்சு
பட்டம்கிராண்டுமாசுட்டர் (2013)
பிடே தரவுகோள்2638 (திசம்பர் 2021)
உச்சத் தரவுகோள்2659 (பிப்ரவரி 2020)
உச்சத் தரவரிசைஎண். 82 (பிப்ரவரி 2020)

மாக்சிம் லகார்டே (Maxime Lagarde) பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஒரு சதுரங்க விளையாட்டு வீரராவார். 1994 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 16 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். பிடே அமைப்பு 2013 ஆம் ஆண்டு இவருக்கு கிராண்டுமாசுட்டர் பட்டத்தை வழங்கியது. 2019 ஆம் ஆண்டு மாக்சிம் லகார்டே பிரான்சு நாட்டின் சதுரங்க வெற்றியாளர் பட்டத்தை வென்றார்.

சதுரங்க வாழ்க்கை[தொகு]

2011 ஆம் ஆண்டில் மாக்சிம் லகார்டே தனது பன்னாட்டு மாசுட்டர் சர்வதேச மாஸ்டர் பட்டத்தையும்[1] 2013 ஆம் ஆண்டில் தனது கிராண்டுமாசுட்டர் பட்டத்தையும் பெற்றார்.[2] 2021 ஆம் ஆண்டு ஆகத்து மாத நிலவரப்படி பிரான்சு நாட்டு சதுரங்க வீரர்களின் தரவரிசையில் மாக்சிம் லகார்டே 5 ஆவது இடத்தில் இருந்தார்.[3]

மாக்சிம் லகார்டே 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐசுலாந்து நாட்டில் நடைபெற்ற ரெய்காவிக் திறந்தநிலை போட்டியில் 7/9 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று[4] இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.[5] 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற பிரெஞ்சு சதுரங்க வெற்றியாளர் போட்டியை வென்றார். இப்போட்டியில் 6/9 (+4–1=4) என்ற புள்ளிகளுடன் வெற்றி பெற்று கூட்டு முதலிடத்தைப் பிடித்தார். மேலும் சமநிலை முறிவு ஆட்டத்தில் இலாரன்ட் பிரெசினெட்டை தோற்கடித்து பட்டத்தை வென்றார்.[6]

2020 ஆம் ஆண்டில் இலகார்டே 22 ஆவது டிரைசுட்டே சதுரங்கத் திருவிழாவை வென்றார்.[7]

மாக்சிம் லகார்டே 2023 ஆம் ஆண்டில் 2023 சதுரங்க உலகக் கோப்பை போட்டியில் போட்டியிட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 82nd FIDE Congress 2011, Krakow, 15-22 October, POL FIDE
  2. 2nd quarter Presidential Board Meeting 2013, 4-7 May, Baku, AZE FIDE
  3. "Federations Ranking - France". FIDE. August 2021. Archived from the original on 8 December 2017. பார்க்கப்பட்ட நாள் 4 March 2018.
  4. "GAMMA Reykjavik Open 2018 - Bobby Fischer Memorial: Lagarde Maxime". Chess Results. 15 March 2018.
  5. "GAMMA Reykjavik Open 2018 - Bobby Fischer Memorial". Chess Results. 15 March 2018.
  6. Khadilkar, Dhananjay (27 August 2019). "Lagarde, Guichard bag French national titles in thrilling finale". ChessBase.
  7. "The Week in Chess 1348". theweekinchess.com. பார்க்கப்பட்ட நாள் 2020-09-10.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாக்சிம்_லகார்டே&oldid=3793269" இலிருந்து மீள்விக்கப்பட்டது