மல்கம் எக்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மால்கம்  X
Malcolm X in March 1964
Malcolm X in March 1964
பிறப்பு மால்கம் லிட்டில்
மே 19, 1925(1925-05-19)
நெப்ராஸ்கா,அமெரிக்கா
இறப்பு பெப்ரவரி 21, 1965(1965-02-21) (அகவை 39)
மான்ஹாட்டன்,அமெரிக்கா
இறப்பிற்கான
காரணம்
படுகொலை (multiple gunshots)
கல்லறை Ferncliff கல்லறை
மற்ற பெயர்கள் அல்ஹாஜ் மாலிக் சபாஸ்
(الحاجّ مالك الشباز)
பணி அமைச்சர் , ஆர்வலர்
அமைப்பு(கள்) இஸ்லாம் தேசம்,
முசுலீம் மசூதி
அரசியல் இயக்கம் கறுப்பு தேசியவாதம்
சமயம் இசுலாம்
பெற்றோர் இயர்ள் லிட்டில்
லூயிஸ் ஹெலன்
வாழ்க்கைத் துணை பெட்டி சபாஸ் (தி. 1958–1965) «start: (1958)–end+1: (1966)»"Marriage: பெட்டி சபாஸ் to மல்கம் எக்ஸ்" Location: (linkback://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D)
பிள்ளைகள் அட்டல்லா
கியுப்லா
இல்யாசா
கமீலா லுமும்பா
மலீகா
மலாக்
கையொப்பம்

மல்கம் எக்ஸ் (Malcolm X, மே 19, 1925 - பெப்ரவரி 21, 1965) ஒரு குறிப்பிடத்தக்க ஆபிரிக்க அமெரிக்கர். இவர் ஓர் அமெரிக்க முஸ்லிம் அமைச்சரும் இஸ்லாம் தேசத்தின் பேச்சாளராக இருந்தவருமாவார். 1964 இல் இஸ்லாம் தேசத்திலிருந்து விலகியபின் மக்காவுக்கு புனித ஹஜ் பயணம் சென்று ஒரு சுணி முஸ்லிம் ஆனார். 1965 இல் படுகொலை செய்யப்பட்டார்.

கருப்பின இயக்கம்[தொகு]

மல்கம் லிட்டில் என்பது இவரது இயற்பெயர். லிட்டில் என்பது அடிமைத்தனத்தைக் குறிப்பதால் அதைக் கைவிட்டு எக்சு எனத் தம் பெயரில் சேர்த்துக் கொண்டார். அமெரிக்க கருப்பின மக்களின் உரிமைகளுக்காகத் தம் பேச்சாற்றலால் பாடுபட்டார்.[1] இசுலாம் என்னும் மத அடிப்படையிலும் கருப்பின மக்கள் என்னும் இன அடிப்படையிலும் தம் இயக்கத்தைக் கட்டினார். அமெரிக்காவில் கருப்பின மக்களிடையே இசுலாம் சமயம் பரவ இவர் முக்கியவராக இருந்தார்.

மல்கம் எக்சு 1965 இல் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர் பதிப்பாகி வெளிவந்த அவரது தன் வரலாறு நூல், கருப்பின இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இப்புத்தகம் 1960-70 காலகட்டத்தில் கறுப்பின மக்கள் முன்னெடுத்த அதிகாரப் போராட்டத்திற்கு அடித்தளம் இட்டது.

1964 மார்ச்சு 26 ஆம் பக்கலில் மார்டின் லூதர் கிங் சூனியரை மல்கம் எக்சு சந்தித்தார். இருவரும் சமூக உரிமைகளுக்கான விவாதம் ஒன்றில் கலந்து கொண்டார்கள்.

இசுலாம் தேசம் அமைப்பைவிட்டு மல்கம் எக்சு விலகினார். முசுலீம் மசூதி என்பதைத் தோற்றுவித்தார். சன்னி முசுலீம் பிரிவில் தம்மை இணைத்துக் கொண்டார்.

1992 இல் மல்கம் எக்ஸ் என்ற திரைப்படம் வெளியானது. இது மல்கம் எக்சின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமாகும்.

தமிழக எழுத்தாளர் ரவிக்குமார் மால்கம் எக்ஸ் எனும் நூலைத் தொகுத்துள்ளார்.

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மல்கம்_எக்ஸ்&oldid=2232933" இருந்து மீள்விக்கப்பட்டது