உள்ளடக்கத்துக்குச் செல்

மலை நாகணவாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலை நாகணவாய்
கருநாடக மாநிலக் காடுகளில்
உயிரியல் வகைப்பாடு
பேரினம்:
Gracula
இனம்:
indica

மலை நாகணவாய் [Southern hill myna (Gracula indica)] நாகணவாய் வகையைச் சார்ந்த ஒரு பறவையாகும். இது தென்மேற்கு இந்தியாவில் நீலமலையிலும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியிலும் இலங்கையிலும்[1] மட்டும் காணப்படுகிறது.

உடலமைப்பு

[தொகு]

இதன் உடல் நீளம் 23 முதல் 24 செ.மீ. வரை இருக்கும். தலைப்பகுதி மங்கிய கருப்பு நிறத்திலும், உடலும் இறக்கைகளும் பச்சையும் ஊதாவும் கலந்த கருப்பு நிறத்திலும் முதன்மை இறக்கைகளில் வெண்ணிறத் திட்டுக்களுடன் காணப்படும். செம்மஞ்சள் நிற அலகின் நுனி மஞ்சளாக இருக்கும். கால்களும் பாதங்களும் மஞ்சள் நிறத்துடன் காணப்படும்.

கள அடையாளங்கள்[2]

[தொகு]
  • இப்பறவையின் பரவலில் காணப்படாத இன்னொரு மலை நாகணவாயான Gr. religiosa-வை விட அளவில் சிறியதாகவும் இதன் அலகு அதனை விட மெல்லியதாகவும் இருக்கும். பிடரியின் தசைத் தொங்கல் தலையின் உச்சி வரை நீண்டிருக்கும். மேலும், கண்ணுக்குக் கீழே தசைத் தொங்கலின் இரு நாக்குகளும் ஓட்டுப் பகுதியில்லாமல் இருக்கும்[3][4]
  • இதன் அளவையொத்த, இதன் பரவலில் காணப்படும் இன்னொரு மலை நாகணவாயான இலங்கை நாகணவாயிற்கு (Gr. ptilogenys) இப்பறவையைப் போல கன்னங்களிலும் தலையுச்சியிலும் தசைத் தொங்கல் இருக்காது; மேலும், இலங்கை நாகணவாயிற்கு அலகின் அடிப்பகுதி கருப்பாக இருக்கும்[5].

மேற்கோள்கள்

[தொகு]
  1. "மலை நாகணவாயின் பரவல்". ebird.org. பார்க்கப்பட்ட நாள் 05 May 2021. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  2. Feare. C. & Craig. A. (1998). Starlings and Mynas. p. 146 (38)
  3. "சிறிய மலை நாகணவாய் (Gr. indica)". ebird.org. பார்க்கப்பட்ட நாள் 05 May 2021. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  4. "மலை நாகணவாய் (Gr. religiosa)". ebird.org. பார்க்கப்பட்ட நாள் 05 May 2021. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  5. "இலங்கை நாகணவாய் (Gr. ptilogenys)". ebird.org. பார்க்கப்பட்ட நாள் 05 May 2021. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  • Clements, J. F., T. S. Schulenberg, M. J. Iliff, B.L. Sullivan, C. L. Wood, and D. Roberson. 2013. The eBird/Clements checklist of birds of the world: Version 6.8. [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலை_நாகணவாய்&oldid=3756936" இலிருந்து மீள்விக்கப்பட்டது