உள்ளடக்கத்துக்குச் செல்

மறிமான் குழிமுயல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மறிமான் குழிமுயல்[1]
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
L. alleni
இருசொற் பெயரீடு
Lepus alleni
மியர்ன்ஸ், 1890
மறிமான் குழிமுயல் பரவல்

மறிமான் குழிமுயல் (ஆங்கிலப் பெயர்: Antelope Jackrabbit, அறிவியல் பெயர்: Lepus alleni), தென் அரிசோனா மற்றும் வடமேற்கு மெக்ஸிக்கோ ஆகியவற்றில் காணப்படும் ஒரு வட அமெரிக்க முயல் இனம் ஆகும். இந்த வரம்பில், அது உலர் பாலைவன பகுதிகளை ஆக்கிரமிக்கிறது. இந்த உயிரினம் லெபோரிடே குடும்பத்தில் லகோமோர்பா வரிசையின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஆண் மற்றும் பெண் மறிமான் குழிமுயல்கள் தோற்றத்தில் ஒத்ததாக உள்ளன.[3] இந்த இனம் நீண்ட, சுட்டிக்காட்டும் காதுகளுடன் மற்றும் தனித்துவமான உரோம வண்ணத்துடன் பெரியதாக இருக்கும். இது ஒரு வெள்ளை தொப்பை, வெளிர் சாம்பல் பக்கங்கள், ஒரு கருப்புப் பொறிகளுடைய முதுகு மற்றும் கழுத்து மற்றும் மார்பு மீது ஆரஞ்சு வண்ணத்துடன் காணப்படும். இது கருப்புவால் குழிமுயல் மற்றும் வெள்ளைப் பக்கவாட்டுக் குழிமுயல் ஆகியவற்றைப் போலவே காணப்படும். இது அந்தி நேரத்தில் மிகவும் சுறுசுறுப்பாக உள்ளது. இது இரவு நேரங்களில் விழித்திருக்கும் விலங்கு ஆகும். ஆனால் நிலைமைகள் சாதகமானதாக (அதிக மேகமூட்டத்துடன்) இருக்கும்போது பகலிலும் சுறுசுறுப்பாக இயங்கும். இது காக்டஸ்கள், மெஸ்குயிட் இலைகள் மற்றும் பிற தாவரங்களை உண்கிறது.[4]

விளக்கம்

[தொகு]
மறி மான் கழுதை குழி முயலை பற்றிய ஒரு ஓவியரின் சித்தரிப்பு.

முயல் பேரினமான லெபுஸ் உயிரினங்களிலேயே மறிமான் கழுதை குழி முயல் தான் மிகவும் பெரியது ஆகும்.[3] இதன் உடல் நீளம் 52 முதல் 58 சென்டிமீட்டர் (22 இன்ச்) இருக்கும். இதன் வால் 5 முதல் 10 சென்டிமீட்டர் (3 இன்ச்) நீளம் இருக்கும். இதன் முன்னங்கால்கள் 10 முதல் 20 சென்டிமீட்டர் (3.9 முதல் 7.9 இன்ச்) நீளம் இருக்கும். இதன் பின்னங்கால்கள் 20 முதல் 30 சென்டிமீட்டர் (7.9 முதல் 11.8 இஞ்ச்) நீளம் இருக்கும். மறி மான் கழுதை குழி முயலின் காதுகள் 14–17 சென்டிமீட்டர் (6 இஞ்ச்) நீளம் இருக்கும். இது 9 பவுண்டுகள் வரை எடை இருக்க கூடியது.[3] இந்த உயிரினத்தின் மண்டை ஓடு மிகப்பெரியதாகவும், முகம் நீளமாகவும் இருக்கும். இதன் காதுகள் மிகவும் நீளமாகவும் புள்ளி மற்றும் ஓரங்களில் வெள்ளை நிறமாகவும் இருக்கும். இதன் வால் இரட்டை நிறத்தில் இருக்கும். மேல் பகுதி கருப்பு நிறமாகவும், கீழ்ப்பகுதி வெளிறிய சாம்பல் நிறமாகவும் இருக்கும். மறிமான் கழுதை குழி முயலின் பக்கவாட்டு பகுதியானது வெளிர் சாம்பல் நிறத்திலும், கழுத்து மற்றும் மார்பு ஆரஞ்சு நிறத்திலும், முதுகு கருப்பு புள்ளிகளுடனும் காணப்படும்.[3]

உணவு

[தொகு]

மறிமான் கழுதை குழி முயலானது புற்கள் மற்றும் பிற இலை நிறைந்த தாவரங்களை உண்கிறது. கனிமங்கள் மற்றும் பிற சத்துக்களை எடுத்துக் கொள்ளும் ஒரு முயற்சியாக இந்த உயிரினங்கள் மண்ணை தோண்டுவதும் அதை உண்பதும் கண்டறியப்பட்டுள்ளது.[3]

உசாத்துணை

[தொகு]
  1. Hoffman, R.S.; Smith, A.T. (2005). "Order Lagomorpha". In Wilson, D.E.; Reeder, D.M (eds.). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. p. 195. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8018-8221-0. இணையக் கணினி நூலக மைய எண் 62265494. {{cite book}}: Invalid |ref=harv (help)
  2. Mexican Association for Conservation and Study of Lagomorphs (AMCELA); Romero Malpica, F.J.; Rangel Cordero, H. (2008). "Lepus alleni". செம்பட்டியல் (பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்) 2008: e.T41272A10410552. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T41272A10410552.en. http://www.iucnredlist.org/details/41272/0. பார்த்த நாள்: 27 December 2017. 
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 Best, Troy (1993). "Lepus alleni". Mammalian Species 424: 1–8. 
  4. Reid, Fiona (2006). Peterson Field Guide to Mammals of North America (Fourth ed.). New York: Houghton Mifflin Harcourt. pp. 357–358.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மறிமான்_குழிமுயல்&oldid=2684727" இலிருந்து மீள்விக்கப்பட்டது