உள்ளடக்கத்துக்குச் செல்

மர்வான் கென்சாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மர்வான் கென்சாரி
பிறப்புசனவரி 16, 1983 (1983-01-16) (அகவை 41)
த ஹியூக்ஸ், நெதர்லாந்து
பணிநடிகர், நகைச்சுவையாளர்
செயற்பாட்டுக்
காலம்
200 முதல் தற்போது வரை
வலைத்தளம்
www.marwankenzari.nl

மர்வான் கென்சாரி (Marwan Kenzari (பிறப்பு: ஜ1983 சவரி 16, இவர் ஓர்துனிசிய-டச்சு நடிரும் மற்றும் நகைச்சுவையாள்ருமாவார் இவர் டச்சு மற்றும் ஆங்கில மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஊல்ப் என்ற படத்தில் நடித்ததற்காக 2013ஆம் ஆண்டில் சிறந்த நடிகருக்கான கோல்டன் கால்ஃப் விருதினை வென்றார்.

வாழ்க்கை மற்றும் தொழில்

[தொகு]

கென்சாரி 1983 சனவரி 16 அன்று நெதர்லாந்தின் டென் ஹாக்கில் ஒரு தூனிசியக் குடும்பத்தில் பிறந்தார். இசைத்தொகுப்பான சிகாகோவின் டச்சு பதிப்பின் மூலம் இவர் ஒரு இளைஞனாக நடிக்கத் தொடங்கினார். [1] இவர் 2008 முதல் தனது சொந்தநாடான நெதர்லாந்தில் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். 2009 இல் கென்சாரி மாஸ்ட்ரிக்ட் நாடகக்கலையில் பட்டம் பெற்றார். 2013ஆம் ஆண்டில், ஊல்ப் (2013) என்றத்திரைப்படத்தில் நடித்ததற்காக நெதர்லாந்து திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான கோல்டன் கால்ஃப் விருதினை வென்றார். இந்த படம் உருசியத் திரைப்பட மொழிபெயர்ப்பாளர் ஆண்ட்ரி எஃப்ரெமோவ் என்பவரால் உருசிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு 2013 வோலோக்டா திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. 2014ஆம் ஆண்டில், பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் ஷூட்டிங் ஸ்டார்ஸ் விருதை வென்றார்.

கென்சாரி அரபு, டச்சு, பிரஞ்சு மற்றும் ஆங்கிலம் பேசுகிறார். [2] கோலைட் மற்றும் பென்-ஹர் என்ற ஆங்கில மொழி படங்களில் இவரைக் காணலாம் .

2019ஆம் ஆண்டில், வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் கற்பனைத் திரைப்படமான அலாவுதீன் என்பதில் கென்சாரி வில்லன் ஜாபராக நடித்திருந்தார் . [3] [4] மே 2019 இல், கென்சாரி தி ஓல்ட் கார்டின் நடிகர்களுடன் சேர்ந்தார். [5]

குறிப்புகள்

[தொகு]
  1. "International Star You Should Know: Marwan Kenzari". Variety. 2014-03-14. பார்க்கப்பட்ட நாள் 18 March 2015.
  2. "Marwan Kenzari, The Netherlands". Shooting Stars. Archived from the original on டிசம்பர் 20, 2014. பார்க்கப்பட்ட நாள் March 18, 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. Kroll, Justin (2017-08-04). "Disney's Live-Action 'Aladdin' Reboot Casts 'Mummy' Actor as Jafar". Variety. பார்க்கப்பட்ட நாள் August 4, 2017.
  4. "Disney's Aladdin remake has finally found its Jafar". https://www.independent.co.uk/arts-entertainment/films/news/disney-aladdin-jafar-live-action-remake-marwan-kenzari-nasim-pedrad-release-date-a7879141.html. 
  5. Kit, Borys (May 28, 2019). "Jafar Actor Marwan Kenzari Joins Charlize Theron in Action Thriller 'Old Guard' (Exclusive)". The Hollywood Reporter. பார்க்கப்பட்ட நாள் May 28, 2019.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மர்வான்_கென்சாரி&oldid=3712640" இலிருந்து மீள்விக்கப்பட்டது