மருத்துவ நுண்ணுயிரியியல் மற்றும் தொற்றுநோய்க்கான ஐரோப்பிய இதழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மருத்துவ நுண்ணுயிரியியல் மற்றும் தொற்றுநோய்க்கான ஐரோப்பிய இதழ் (European Journal of Clinical Microbiology & Infectious Diseases) என்பது மாதந்தோறும் வெளிவரும் ஒரு மருத்துவ மீள் ஆய்வு இதழ் ஆகும். இவ்விதழ் 1982-ல்  மருத்துவ நுண்ணுயிரியியல் சார்ந்த ஐரோப்பிய இதழ் என்ற பெயரில் வெளியிடப்பட்டது. 1987 முதல் தற்போதைய பெயரில் இவ்விதழ் வெளியிடப்பட்டு வருகிறது. இதன் முதல் பதிப்பாசிரியர் இலியா பிராவனி என்பவராவார். இதன் முதன்மைப் பதிப்பாளர் அலெக்ஸ் வான் பெல்க்கம். இந்த இதழ் ஸ்பிரிஞ்சர் அறிவியல் வணிக ஊடகத்தால் வெளியிடப்பட்டு வருகிறது.

"மேற்கோள் இதழின்" அறிக்கையின் படி, இந்த இதழானது 2013 ஆம் ஆண்டில் 2.544  தாக்கக்காரணியையும், "தொற்று நோய்கள்" பகுப்பில் 72 பத்திரிகைகளில் 37 ஆவது  தரவரிசையையும், "நுண்ணுயிரியல்" பகுப்பில் 119 பத்திரிகைகளில் 55வது தரவரிசையையும் பெற்றது.[1]

மேலும் படிக்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "Journals Ranked by Impact: Microbiology". 2013 Journal Citation Reports. Web of Science (Science ). Thomson Reuters. 2014. 

வெளி இணைப்புகள்[தொகு]