மருத்துவ இயற்பியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மருத்துவ இயற்பியல் (Medical Physics) என்பது இயற்பியலின் கோட்பாடுகளும் தத்துவங்களும் மருத்துவத் துறையில் எவ்வாறெல்லாம் பயன்படுகிறது என்பதனை விரிவாக ஆராயும் அறிவியல் பகுதியாகும். நாடி பார்த்து நோயினை அறிதல், உடல் வெப்ப நிலையினைத் தொட்டு அறிதல், கண்களைப் பார்த்து நாக்கினைப் பார்த்து நோயினைத் தெரிந்து கொள்வது என்பன போன்ற பல நிகழ்வுகளும் இயற்பியலை அடிப்படையாகக கொண்டதே. இன்று எக்சு கதிர்கள், காமாக் கதிர்கள், கதிரியக்கம், காந்த ஒத்ததிர்வு படமுறை, மீயொலி போன்ற பல இயற்பியல் காரணிகள் மருத்துவத் துறையில் பயன்பாட்டில் உள்ளன. இவை யாவும் இயற்பியலை அடிப்படையாகக் கொண்டுள்ளன. கை, கால், தாடை இவைகளின் இயக்கமும் இயற்பியல் கோட்பாட்டால் விளக்கமுடியும். இத்துறை தனி அறிவியல் துறையாக இன்று வளர்ந்து இருக்கிறது.

மிக நுட்பமான பல கருவிகள் PET, SPECT, CYBERKNIFE அனைத்தும் இயற்பியலும் தொழில்நுட்பமும் இணைந்து உருவாக்கிய கருவிகளாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மருத்துவ_இயற்பியல்&oldid=1431683" இலிருந்து மீள்விக்கப்பட்டது