மரியா வாசிலியேவ்னா சிலோவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மரியா வாசிலியேவ்னா சிலோவா (Maria Vasilyevna Zhilova) என்பவர் முதலாவது உருசிய தொழில்முறை வானியலாளர் ஆவார். இவரது காலம் 1870 முதல் 1934 வரையுள்ள காலமாகும். இவர் 1895 ஆம் ஆண்டு முதல் 1930 ஆம் ஆண்டு வரை புல்கோவோ வானாய்வகத்தில் வானியல் மற்றும் சுற்றுப்பாதை கணக்கீட்டாளராகப் பணியாற்றினார்[1][2]. வான இயக்கவியலில் பணியாற்றியதற்காக உருசிய வானியல் சங்கம் இவருக்கு 1905 ஆம் ஆண்டு ஒரு விருதை வழங்கி சிறப்பித்தது[1].

சூரியனைச் சுற்றிவரும் குறுங்கோள் 1255 சிலோவாவிற்கு இவரது பெயரே 1932 ஆம் ஆண்டில் சூட்டப்பட்டது[1]. இதேபோல வெள்ளி கிரகத்திலுள்ள கிண்ணக்குழியான சிலோவாவும் இவரது நினைவாகவே 1985 ஆம் ஆண்டு சூட்டப்பட்டது[3].

"உருசிய அறிவியலில் மகளிர் முகங்கள் என்ற மையக்கருத்தோடு நடத்தப்பட்ட 2017 ஆம் ஆண்டு மாநாட்டில் விவாதிக்கப்பட்ட பெண்களில் மரியா வாசிலியேவ்னா சிலோவாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இங்குதான் இவருக்கு முதல் தொழில்முறை பெண் வானியலாளர் என்ற சிறப்பு கிடைத்தது [4].

தேர்ந்தெடுக்கப்பட்ட வெளியீடுகள்[தொகு]

  • "Grossenbestimmung der Sterne im Sternhaufen 20 Vulpeculae". St. Petersb. Ac. Sci. Bull. 2: 243-51. 1895. [5]

மேற்கோள்கள்[தொகு]