மயூக் மகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரசியல் பேரணியில் மயூக் மகர்

மயூக் மகர் (Mayukh Mahar) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். உத்தரகாண்ட் மாநில சட்டமன்றத்தில் பித்தோராகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தற்போதைய பிரதிநிதியாக உள்ளார்.[1] உத்தராகண்ட மாநில அரசியலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராகச் செயல்பட்டார். பித்தோராகர் மாநில சட்டமன்ற தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இன ரீதியாக, இவர் ஒரு குமாவோனி மற்றும் ஒரு சத்திரிய இராசபுத்திரர் என அறியப்படுகிறார். . கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் முறையாக பித்தோராகர் தொகுதியில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில், பிரகாசு பந்திடம் தோல்வியடைந்தார். [2] அதன்பிறகு, 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற உத்தரகாண்ட் சட்டப் பேரவைத் தேர்தலில், பாரதிய சனதா கட்சியைச் சேர்ந்த சந்திர பந்தை தோற்கடித்து மீண்டும் ஆட்சிக்கு வந்தார். [3] நைனிட்டாலில் உள்ள குமாவுன் பல்கலைக்கழகத்தில் அரிவியலில் இளநிலை பட்டம் மற்றும் ஒரு முது கலைப் பட்டம் பெற்றுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mayukh Mahar(Indian National Congress(INC)):Constituency- PITHORAGARH(PITHORAGARH) - Affidavit Information of Candidate:". பார்க்கப்பட்ட நாள் 2022-03-30.
  2. "PRAKASH PANT Won with 32941 votes - 2017 Pithoragarh - Uttarakhand Assembly Election Winner, LIVE Results & Latest News: Election Dates, Polling Schedule, Election Results & Live Election Updates | India.com". பார்க்கப்பட்ட நாள் 2022-03-30.
  3. "Pithoragarh Election Result 2022 LIVE: Pithoragarh MLA Election Result & Vote Share - Oneindia". பார்க்கப்பட்ட நாள் 2022-03-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மயூக்_மகர்&oldid=3840402" இலிருந்து மீள்விக்கப்பட்டது