மனோரஞ்சன் பட்டாச்சாரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மனோரஞ்சன் பட்டாச்சாரியா
Manoranjan Bhattacharya
பிறப்பு1910 (1910)
எரிகாடி, பரித்பூர் மாவட்டம், கிழக்கு வங்காளம் மற்றும் அசாம்
இறப்பு22 ஆகத்து 1932(1932-08-22) (அகவை 21–22)
பரிசால், பரித்பூர் மாவட்டம், வங்காள மாகாணம்
அரசியல் இயக்கம்இந்திய விடுதலை இயக்கம்

மனோரஞ்சன் பட்டாச்சார்யா (Manoranjan Bhattacharya) இந்திய சுதந்திர ஆர்வலரும் வங்காள புரட்சியாளரும் ஆவார்.

புரட்சிகர நடவடிக்கைகள்[தொகு]

பட்டாச்சார்யா கிழக்கு வங்காளம் மற்றும் அசாமின் பரித்பூர் மாவட்டத்தில் உள்ள எரிகாட்டியில் பிறந்தார். மதரிபூரின் புரட்சிகர மதரிபூர் குழுவில் சேர்ந்தார். பட்டாச்சார்யா மாணவராக இருந்தபோது, 1930 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதியன்று சிட்டகாங் ஆயுதக் களஞ்சியத் தாக்குதலில் பங்கேற்றார். 1932 [1] ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 14 ஆம் தேதி சமுகரியாவில் நடந்த தபால் பை கொள்ளைதான் இவரது கடைசி நடவடிக்கையாகும். கொள்ளையின் போது, பட்டாச்சார்யா ஒரு தபால் அலுவலக ஊழியர் இவருடன் சண்டையிட்டார் என்பதற்காக அவரை கொன்றார்,. [2] [3]

இறப்பு[தொகு]

பட்டாச்சார்யாவும் நான்கு புரட்சியாளர்களும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பரித்பூர் சிறையில் அடைக்கப்பட்டனர். பட்டாச்சார்யாவுக்கு 1932 ஆம் ஆண்டு மே 12 அன்று மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 1932 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 22 ஆம் தேதியன்று பரிசால் மாவட்ட சிறையில் பட்டாச்சார்யா தூக்கிலிடப்பட்டார் . மற்ற சக குற்றவாளிகளுக்கு பல்வேறு நீண்ட கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. VOL - I, P. N. CHOPRA (1969). Who's Who of Indian Martyrs. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788123021805. https://books.google.com/books?id=urqvDQAAQBAJ&q=Manoranjan+Bhattacharya+revolutionary&pg=PA1844. பார்த்த நாள்: December 7, 2017. 
  2. 2.0 2.1 Kali Charan Ghosh (2012). Chronological Dictionary of INDIA's Independence. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-86806-20-3. 
  3. Vol - I, Subodh C. Sengupta & anjali Basu (2002). Sansad Bangali Charitavidhan (Bengali). பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-85626-65-0.