மனோதர்மம் (கருநாடக இசை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மனோதர்மம் எனும் சொல், கருநாடக இசைத் துறையில் வழங்கப்பெறுவதாகும். ஒரு இசைக் கலைஞர், கச்சேரி நடந்துகொண்டிருக்கும்போது தனது படைப்புத்திறனை முன்னேற்பாடின்றி வெளிப்படுமாறு செய்தல் (improvisation) மனோதர்மம் என்றழைக்கப்படுகிறது. இந்த மனோதர்மம், இசையிலக்கணத்திற்கு (இராகம் மற்றும் தாளம்) உட்பட்டு இருக்கவேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விளக்கம்[தொகு]

'மனோதர்மா' எனும் சமசுகிருத சொல், 'மன ஒழுங்கமைவு' (order of the mind) எனப் பொருள்படும். இதனையே 'மனோதர்மம்' என தமிழில் குறிப்பிடுகிறார்கள்.

மனோதர்மத்தின் முக்கிய மூலகங்களாக நிரவல், கல்பனா சுவரம், இராக ஆலாபனை மற்றும் தனி ஆவர்த்தனம் உள்ளன. இராகம்-தானம்-பல்லவி எனும் இசைவடிவம், மனோதர்மத்தின் வெளிப்பாடாகும்.

வரலாறு[தொகு]

பழங்காலத்து கருநாடக இசைக் கலைஞர்கள், அவர்கள் எந்த இசைவடிவில் சிறந்து விளங்கினார்களோ அப்பெயரை அடைமொழியாகக்கொண்டு அழைக்கப்பட்டார்கள். உதாரணமாக 'பல்லவி' சேச ஐயர், 'அதான' அப்பையா, 'தோடி' சீதாராமையா போன்றோரைக் குறிப்பிடலாம். இவர்களில் சீதாராமையா, எட்டு முழு தினங்களுக்கு தொடர்ந்து தோடி இராகத்தைப் பாடியதாகச் சொல்லப்படுவதுண்டு.

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]