மனித குரங்குகளின் புரட்சி
மனித குரங்குகளின் புரட்சி | |
---|---|
இயக்கம் | ரூபர்ட் வாட் |
மூலக்கதை | பிளானட் ஆஃப் தெ ஏப்ஸ் (புதினம்) |
இசை | பட்ரிக் டோயில் |
ஒளிப்பதிவு | ஆன்ட்ரூ லெஸ்ஸி |
விநியோகம் | 20 ஆம் செஞ்சுரி பாக்ஸ் |
வெளியீடு | ஆகத்து 5, 2011 |
ஓட்டம் | 110 நிமிடங்கள |
நாடு | அமெரிக்கா[1][2][3] |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $93 மில்லியன்[4] |
மொத்த வருவாய் | $481.8 மில்லியன் |
மனித குரங்குகளின் புரட்சி (Rise of the Planet of the Apes) என்பது 2011 ஆம் ஆண்டில் அமெரிக்க அறிவியல் புனைவு திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை ரூபர்ட் வைட்என்பவர் இயக்கியுள்ளார்.
ஜேம்ஸ் ஃபிரான்கோ, ஃப்ரெய்டா பிந்தோ, ஜான் லித்கோ, பிரையன் காஸ், டாம் ஃபெல்டன், டேவிட் ஓயலோவ் மற்றும் ஆண்டி செர்கிசு ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ரிக் ஜஃபா மற்றும் அம்ந்தா சில்வர் ஆகியோர் எழுதிய இதனை 20ஆம் சென்சுரி பாக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 1972 அம் ஆண்டு வெளிவந்த பிளானட் ஆஃப் தெ ஏப்ஸ் திரைப்படத்தைத் தழுவி இது எடுக்கப்பட்டது.
இந்தத் திரைப்படமானது ஆகஸ்டு 5, 2011 ஆம் ஆண்டில் வெளியானது. ரசிகர்கள் மற்றும் விமர்சக ரீதியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இது சிறந்த காட்சியமைப்பிற்காக அகாதமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. சிறந்த இயக்குனர், சிறந்த எழுத்தாளார் ஜஃபா மற்றும் சில்வர் ஆகிய விருதுகள் உட்பட 5 பிரிவுகளில் சனி விருதுக்கு (சடர்ன் விருது) பரிந்துரைக்கப்பட்டது. சிறந்த அறிவியல் புனைவு திரைப்படம், சிறந்த துணைக்கதாப்பாத்திரம் - செர்கிசு மற்றும் சிறந்த காட்சியமைப்புக்கான விருதுகளை வென்றது. இந்தப் படத்தின் தொடர்ச்சியாக மனிதக் குரங்குகளின் எழுச்சி சூலை 11, 2014 ஆம் ஆண்டிலும் அடுத்த பாகமான மனிதக் குரங்குகளின் போர் சூலை 14, 2017 ஆம் ஆண்டிலும் வெளியானது.
கதைச் சுருக்கம்
[தொகு]வில் ராட்மேன் ஒரு அறிவியலாளர். அவர் சான்பிரான்சிஸ்கோ உயிரித் தொழில்நுட்ப ஆய்வுக் கூடமான ஜெனிசிஸ் எனும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அந்த ஆய்வகத்தில் ஆல்சைமர் நோயினைக் குணப்படுத்தும் ஏ எல் இசட் -112 எனும் மருந்தைக் கண்டுபிடித்து சிம்பன்சிகளில் சோதனை செய்து பார்க்கின்றனர். அதனை வெளிச்சமான கண்கள் (பிரைட் ஐஸ்) எனும் பெயரைக்கொண்ட சிம்பன்சியில் பயன்படுத்துகின்றனர். அதன் அறிவானது சில நாட்களிலேயே மிக வேகமாக அதிகரிக்கிறது. ஆனால் அது வில்லினுடைய காட்சியளிப்பின்போது அங்கிருந்தவர்களைத் தாக்க முற்படும் போது அது சுட்டு வீழ்த்ப்படுகிறது. வில்லினுடைய முதலாளி ஸ்டீவன் ஜேகப்ஸ் உடனே இந்தத் திட்டத்தைக் கைவிடவேண்டும் எனவும் அனைத்துச் சிம்பன்சிகளையும் கொலை செய்யவும் ஆணையிடுகிறார். ஆனால் வில்லினுடைய உதவியாளர் ராபர்ட் ஃபிராங்க்ளின் அந்த சிம்ப்ன்சி தன்னுடைய குட்டியைக் காக்கவே அவர்களைத் தாக்க முற்பட்டதாக அதன் காரணத்தைக் கூறுகிறார். பிறகு வில் தனக்கு விருப்பமில்லாமல் புதிதாகப் பிறந்த சிம்பன்சியை தன்னுடன் வீட்டிற்கு எடுத்துச் செல்கிறார். அதற்கு சீஸர் எனப் பெயரிடுகிறார். அதன் தாயிடமிருந்த அதிகமான அறிவு மரபு ரீதியாக அதற்கும் வருகிறது அதன் மூலம் பலவற்றை மிக எளிதாகக் கற்கிறது. மூன்று ஆண்டுகள் கழித்து சீஸரை ஊசியிலை மரங்கள் உள்ள காடுகளுக்கு அழைத்துச் செல்கிறான், அதே வேலையில் தன்னுடைய தந்தையின் மறதிநோயைக்குணப்படுத்த ஒரு மருந்தைத் தயாரிக்கிறான். அதனை சீஸரின் மீது பரிசோதனை செய்து பார்க்கிறான். அந்த மருந்து வேலை செய்யத் தொடங்குகிறது.
ஐந்து வருடங்கள் கழித்து சீஸர் தான் யார் என்றும் எங்கிருந்து வந்தேன் என்பன பற்றி வில்லிடம் கேட்கிறது. ஒருநாள் வில்லினுடைய தந்தை மறதியாக வேறொருவரின் தானுந்தை இயக்க முற்படுகிறார். அதில் அண்டைவீட்டார் அவரைத் தாக்கமுற்படவே சீஸர் அவரைத் தாக்குகிறது. எனவே அது குரங்குகளுக்கான சிறையில் அடைக்கப்படுகிறது. அதன் பாதுகாப்பாளர் டாட்ஜ் லேண்டன் அந்தக் குரங்குகளிடம் மிகக் கடுமையாக நடந்துகொள்கிறார்.அதே சமயத்தில் தான் கண்டுபிடித்த மருந்து பற்றி தனது முதலாளியிடம் எடுத்துக் கூறி மீண்டும் அது பற்றி பரிசோதனை செய்ய அனுமதி கேட்கிறான். அவரும் அனுமதி தருகிறார் . கோபா எனும் சிம்பன்சிக்கு ஏ எல் இசட்-113 எனும் மருந்தை செலுத்துகின்றனர்.
ஒருநாள் சீசரை மீண்டும் கூண்டிற்குள் போக வேண்டுமென்று அதன் பாதுகாப்பளரான டாட்ஜ் லேண்டன் கட்டளையிடுகிறார். முதல்முறையாக சீஸர் முடியாது என கூச்சலிடுகிறது. பின் இருவருக்குமிடையே சண்டைநடக்கிறது அதில் சீஸர் வெற்றி பெற்று அங்கிருந்த மற்ற சிம்பன்சிகளையும் காப்பாற்றுகிறது. மேலும் ஜெனிசிஸ் சென்று அங்கு ஆய்விற்காக வைத்துள்ள சிம்பன்சிகளையும் காப்பாற்றுகிறது. பின் ஊசியிலை மரங்கள் உள்ள காட்டிற்குச் செல்கின்றன. வில் அங்குசென்று தன்னுடன் வருமாறு சீஸரிடம் கேட்கிறான் ஆனால் சீஸரோ இது தான் தனது வீடு என மனிதர்கள் போல் பேசுகிறது. இதனைப் புரிந்துகொண்ட வில் அங்கிருந்து செல்கிறான்.
இசை
[தொகு]இந்தத் திரைப்படத்தின் பின்னணி இசையானது பட்ரிக் டோயிலால் உருவாக்கப்பட்டு ஜேம்ஸ்ஷியர்மனால் ஹாலிவுட் படமனை சிம்பொனியில் நடத்தப்பட்டது.[5]
சான்றுகள்
[தொகு]- ↑ "LUMIERE: Rise of the Planet of the Apes". பார்க்கப்பட்ட நாள் March 28, 2016.
- ↑ "Rise of the Planet of the Apes". American Film Institute. பார்க்கப்பட்ட நாள் March 28, 2016.
- ↑ "Rise of the Planet of the Apes (2011)". AllMovie. பார்க்கப்பட்ட நாள் July 13, 2017.
- ↑ Kaufman, Amy (August 4, 2011). "Movie Projector: 'Apes' will rise above 'Change-Up' at box office". Los Angeles Times. பார்க்கப்பட்ட நாள் August 7, 2011.
- ↑ "Rise of the Planet of the Apes (Patrick Doyle)". Filmtracks. 2011-08-16. பார்க்கப்பட்ட நாள் 2012-03-25.