மனிதக் கணினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கணினியறையில் மனிதக் கணினிகள்

மாந்தக் கணினி அல்லது மனிதக் கணினி (human computer) என்ற சொற் பயன்பாடு மிக விரைவாக கணக்குகளை தீர்ப்பவரைக் குறிப்பிடுவதாக அமைந்துள்ளது. 17ஆம் நூற்றாண்டில் கணக்குப் போடுபவரை கணக்காளர் (கணினி) என அழைத்திருந்தனர். தற்போதைய மின்னியக்க கணினிகள் கண்டுபிடிக்கும் முன்னர் இவ்வாறு விரைவாக கணக்குகளைச் செய்வோர் பணியிலும் அமர்த்தப்பட்டனர். இவர்கள் கொடுக்கப்பட்ட விதிகளுக்கேற்ப கணக்கிட வேண்டும்; அவற்றிலிருந்து விலகக்கூடாது எனவும் கட்டளையிடப்பட்டனர். (டூரிங், 1950). இவர்கள் அணிகளாக பிரிக்கப்பட்டு மிகவும் நேரமெடுக்கும் கணக்குகளை தீர்க்குமாறு இணையாகப் பணியாற்றவும் பணிக்கப்பட்டனர்.

இருபதாம் நூற்றாண்டில் இச்சொல் பிறப்பிலேயே விரைவாக மனக்கணக்கு இடும் திறமை கொண்டோரை குறிப்பிடப் பயன்படுத்தப்படுகிறது. முதன்முதலாக மே 2, 1892இல் த நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் வெளியானது. ஐக்கிய அமெரிக்காவின் குடிசார் அரசுப்பணி ஆணையம் கீழ்வரும் விளம்பரத்தைக் கொடுத்திருந்தது:

"ஓர் கணினி தேவை. [...] தேர்வுக்கு இயற்கணிதம், திரிகோணமிதி மற்றும் வானியல் பாடங்களிலிருந்து வினாக்கள் இருக்கும்."

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மனிதக்_கணினி&oldid=3792051" இலிருந்து மீள்விக்கப்பட்டது