மந்தர் மதுக்கர் தேசுமுக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மந்தர் மதுக்கர் தேசுமுக்கு
Mandar Madhukar Deshmukh
பிறப்பு1974 (அகவை 49–50)
துறைமீநுண் தொழில்நுட்பம், இடைநிலைத் துகள்சார் இயற்பியல்
பணியிடங்கள்டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகம்
கல்வி கற்ற இடங்கள்பி.டெக் இந்திய தொழில்நுட்பக் கழகம் மும்பை
முனைவர் கோர்னெல் பல்கலைக்கழகம்
முனைவர் பட்டமேற்படிப்பு ஆர்வர்டு பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்பேராசிரியர் டி.சி. ரால்ப்
விருதுகள்சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது
பி.எம்.பிர்லா அறிவியல் பரிசு [1]
ஐபிஎம் ஆசிரியர் விருது [2]

மந்தர் மதுக்கர் தேசுமுக்கு (Mandar Madhukar Deshmukh) ஓர் இந்திய இயற்பியலாளர் ஆவார். மீநுண் தொழில்நுட்பம் மற்றும் இடைநிலைத் துகள்சார் இயற்பியல் பிரிவுகளில் இவர் நிபுணத்துவம் பெற்ற்ள்ளார். மும்பையிலுள்ள டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிகிறார். இந்தியாவின் உயரிய அறிவியல் விருதாகக் கருதப்படும் இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சாந்தி சுவரூப் பட்நாகர் பரிசு இயற்பியல் அறிவியல் பிரிவில் இவருக்கு 2015 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. [3] 1996 ஆம் ஆண்டு மும்பையின் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் பிடெக் பட்டமும், 2002 ஆம் ஆண்டு டிசி ரால்ப் வழிகாட்டுதலின் கீழ் கார்னெல் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு வருவதற்கு முன், ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் ஆங்குன் பார்க் குழுவில் முதுகலை ஆராய்ச்சியாளராக இருந்தார்.

இவரது மனைவி பிரீதா பந்தும் கார்னெல் பல்கலைக்கழகத்தில் இருந்து முனைவர் பட்டம் பெற்றவராவார். மும்பை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் இணை பேராசிரியராக உள்ளார். [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Deshmukh's home page". பார்க்கப்பட்ட நாள் 28 April 2019.
  2. "Deshmukh's home page". பார்க்கப்பட்ட நாள் 28 April 2019.
  3. "Brief Profile of the Awardee". Shanti Swarup Bhatnagar Prize. CSIR Human Resource Development Group, New Delhi. பார்க்கப்பட்ட நாள் 5 November 2015.
  4. "Prof. Prita Pant".

புற இணைப்புகள்[தொகு]