இடைநிலைத் துகள்சார் இயற்பியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இடைநிலைத் துகள்சார் இயற்பியல் (Mesoscopic Physics), பேரளவு பொருட்கள் முதல் சிறிய அளவு அல்லது அணுக்களின் அளவு வரையிலான துகள் அமைப்புகளைப் பற்றி விளக்குகிறது. இதன் அளவு பெரும்பாலும் சில நானோமீட்டரில் இருந்து 100 நா.மீ வரையில் இருக்கக்கூடியதால், இந்த அமைப்புகள் பேச்சு வழக்கில் இடைநிலைத் துகள்சார் கட்டகங்கள் (mesoscopic systems) அல்லது நானோ அமைப்புகள் (nanostructures) என கூறப்படுப்படுகிறது. இந்த வகை இடைநிலை துகள்சார் கட்டகங்களில் உள்ள மின்னணுக்கள் அலை போன்ற பண்புகளைக் கொண்டிருக்கிறது. ஆகையால் இது இதன் மாதிரிகளின் வடிவவியலை சார்ந்தே செயல்பாடுகளை அறியமுடியும். மின்னணுக்கள் அலை போன்ற நிலையுடையதாக இருப்பது அலைவுகளில் உள்ள மின்காந்த கதிரியக்கம் போன்று காணப்படுகிறது.

அலை போன்ற பண்புடைய மின்னணுவின் இடைநிலைக்கு உள்ள எல்லைகளை சில பான்மை நீளங்களால் விவரிக்கப்படுகிறது. இந்த பான்மை நீளங்களை மிஞ்சிய திடப்பொருளின் மின்னணுக்கள் அலை போன்ற இடைநிலை பண்பினை அடைகிறது. இந்த அளவுவானது பெரிதாகி பன்மடங்கு பான்மை நீளங்களைத் தாண்டினால் அதன் பேரளவு எல்லைகளையும் இந்த இடைநிலைத் துகள்சார் இயற்பியல் பாடம் விளக்குகிறது.

பான்மை நீளங்கள்[தொகு]

டி பிராக்லி அலைநீளம்[தொகு]

இது துளிம இயக்கவியலில் பரீட்சைமான ஒரு நீளம் ஆகும். ஒரு உந்தம் p கொண்ட மின்னணுவிற்கு, டி பிராக்லி அலைநீளம் கொடுக்கும் அலைநீளத்துடைய அலை அமையப்பெறும்.