மந்தகிரந்தா சென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மந்தகிரந்தா சென்
பிறப்பு15 செப்டம்பர் 1972 (1972-09-15) (அகவை 51)
கொல்கத்தா, மேற்கு வங்காளம்
தொழில்எழுத்தாளர்
மொழிவங்காளம்
தேசியம்இந்தியர்
கல்விமேல்நிலைக் கல்வி
கல்வி நிலையம்பெருமாட்டி பிரபோர்ன் கல்லூரி
வகைகவிதை, நாடகம்
குறிப்பிடத்தக்க விருதுகள்
துணைவர்அரினிந்தம் முகோபாத்யாய்

மந்தகிரந்தா சென் (Mandakranta Sen; பிறப்பு 1972[1]) வங்காள மொழியின் இந்தியக் கவிஞர் ஆவார். இவர் 1999ஆம் ஆண்டில் தனது முதல் கவிதைப் புத்தகத்திற்காக ஆனந்த புரஸ்கார் விருதினை வென்ற இளையவர் ஆனார். 2004ஆம் ஆண்டில், கவிதைகளுக்கான சாகித்திய அகாதமியின் பொன்விழா விருது இவருக்கு வழங்கப்பட்டது.[2] இவர் ஒரு பாடலாசிரியர், இசையமைப்பாளர், புனைகதை எழுத்தாளர், நாடக ஆசிரியர் மற்றும் அட்டைப்பட வடிவமைப்பாளர் ஆவார். இவர் ஒரு முழுநேர எழுத்தாளராக மாற மருத்துவப் படிப்பை விட்டு வெளியேறினார்.[1]

இளமையும் கல்வியும்[தொகு]

மந்தக்ரந்தா 1972 செப்டம்பர் 15 அன்று கொல்கத்தா டோலிகஞ்சில் பிறந்தார். இவர் தனது இடைநிலைக் கல்வியை சகாவத் நினைவு அரசு. பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் முடித்தார். பின்னர் பெருமாட்டி பிரபோர்ன் கல்லூரியில் மேல்நிலைக் கல்வியினை முடித்து நீல் ரத்தன் சிர்கார் மருத்துவக் கல்லூரியில் இளநிலை மருத்துவம் மற்றும் அறுவையியல் படிக்கச் சென்றார், ஆனால் இறுதித் தேர்வுகளை முடிக்கும் முன்னரே வெளியேறினார். இதன்பிறகு இவர் இலக்கியத்திற்காகத் தன் வாழ்க்கையினை முழுமையாக அர்ப்பணித்தார்.[3]

இலக்கியப் படைப்புகள்[தொகு]

21ஆம் நூற்றாண்டின் வங்காளக் கவிதைகளில் மந்தக்ரந்தா ஒரு முக்கிய பங்காற்றி வருகிறார்.[4] இவர் ஒரு கவிஞராக நற்பெயரைப் பெற்றிருந்தாலும், கவிதை, நாவல், சிறுகதை மற்றும் கட்டுரைகள் போன்ற பல்வேறு இலக்கிய வகைகளில் வெற்றி பெற்றுள்ளார். பெண்களின் திருமணம் மற்றும் பாலியல் பிரச்சினைகள் குறித்து எழுதும் முன்னணி வங்காள எழுத்தாளர்களில் இவரும் ஒருவர்.[5] இவருடைய கவிதைகள் மூலம் இவர் ஒரு பெண்ணியவாதி எனக் கருதப்படுகின்றன.[6] இவருடைய படைப்புகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆங்கிலம் மற்றும் இந்தியிலிருந்தும் இவர் கவிதைகளையும் மொழிபெயர்த்துள்ளார். இவர் பாடலாசிரியர், இசையமைப்பாளர், வடிவமைப்பாளர் மற்றும் பத்திரிகை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.[7]

விருதுகள் மற்றும் அங்கீகாரம்[தொகு]

பெங்காலி கவிதைகளுக்கு இவர் செய்த பங்களிப்புகளுக்காக இளம் எழுத்தாளருக்கான சாகித்திய அகாதமி பொன்விழா விருது வழங்கப்பட்டுள்ளது.[8] ஆனந்த புரசுகார் (1999) கிருத்திபாசு புரசுகார் மற்றும் ஆகாசு பங்களா பர்ஷா சம்மன் உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார்.[9] சாகித்திய அகாதமி பத்திரிகைகளின் பங்களிப்பாளர்களில் இவரும் ஒருவர். [10] 27 வயதில் ஆனந்தா புரசுகார் விருதினை வென்ற இளையவர் ஆவார். இவர் ஜெர்மனியில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் கவிதைகளை வழங்கியுள்ளார்.[11]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Sen, Mandakranta (2002). Dalchhoot (1. saṃskaraṇa. ). Kolkata: Ananda. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8177561960. 
  2. "Sahitya Akademi Golden Jubilee Awards". Government of India Ministry of Culture. பார்க்கப்பட்ட நாள் 26 January 2022.
  3. "Mandakranta Sen Author Profile". பார்க்கப்பட்ட நாள் 27 January 2022.
  4. "One Language Many Voices : 21st Century Bengali Poetry". Indian Literature (Sahitya Akademi) 61 (2): 192. 2017. https://www.jstor.org/stable/26791214. பார்த்த நாள்: 27 January 2022. 
  5. "Conjugality & Sexual Economics in India". Feminist Studies 37 (1): 7-13. 2011. https://www.jstor.org/stable/23069880. பார்த்த நாள்: 27 January 2022. 
  6. "Mandakranta Sen's Feminist Poems : My Heart is an Unruly Girl". https://www.firstpost.com/living/my-heart-is-unruly-girl-review-mandakranta-sens-feminist-poems-are-clippings-of-womanhood-2909502.html. 
  7. "Mandakranta Sen - Poet Profile". Poetry International. பார்க்கப்பட்ட நாள் 27 January 2022.
  8. "Sahitya Akademi Awards Ceremony 2004". Government of India. பார்க்கப்பட்ட நாள் 27 January 2022.
  9. "Mandakranta Sen - Life & Works". பார்க்கப்பட்ட நாள் 27 January 2022.
  10. "Translators and Contributors to Sahitya Akademi Journal". Indian Literature (Sahitya Akademi) 49 (1): 199-204. https://www.jstor.org/stable/23346594. பார்த்த நாள்: 27 January 2022. 
  11. "Mandakranta Sen Literary Works". பார்க்கப்பட்ட நாள் 27 January 2022.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மந்தகிரந்தா_சென்&oldid=3915960" இலிருந்து மீள்விக்கப்பட்டது