மத்தாயூ ஆர்ஃபிலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மத்தாயூ ஆர்ஃபிலா
Mathieu Orfila
Mathieu Joseph Bonaventure Orfila.jpg
பிறப்பு 24 ஏப்ரல் 1787
பிறப்பிடம் மினோர்க்கா, எசுப்பானியா
இறப்பு மார்ச் 12, 1853 (அகவை 65)
இறப்பிடம் பாரிசு, பிரான்சு
குடியுரிமை பிரான்சியர்
தேசியம் எசுப்பானியர்
துறை நச்சியல், வேதியியல்
கல்வி கற்ற இடங்கள் வலென்சியா பல்கலைக்கழகம்
பார்சிலோனா பல்கலைக்கழகம்
அறியப்படுவது நச்சியலைக் கண்டுபிடித்தவர்
தாக்கம் லூயி நிக்கொலா வாக்குலின்

மத்தாயு ஜோசப் போனாவென்சர் ஆர்ஃபிலா (Mathieu Joseph Bonaventure Orfila, காட்டலான் மொழி: Mateu Josep Bonaventura Orfila i Rotger, 24 ஏப்ரல் 1787 - 12 மார்ச் 1853) எசுப்பானிய நாட்டில் பிறந்த பிரெஞ்சு நச்சியல் மற்றும் வேதியியலாளர். இவரே நச்சியல் அறிவியலை நிறுவியவர்.

தடய நச்சுயியலில் இவரது பங்கு[தொகு]

பொதுவாக ஒரு கொலை அல்லது கொலை முயற்சியில் நஞ்சு பயன்படுத்தியது உறுதி செய்யபட்டால் அல்லது சந்தேகம் இருந்தால், ஒரு தடய நச்சியல் வல்லுநர் பெரும்பாலும் நஞ்சு உள்ளடக்கிய சடலம் மற்றும் உணவுப் பொருட்களை ஆய்வு செய்வார். ஆர்ஃபிலாவின் காலத்தில் பயன்படுத்தப்பட்ட முதன்மை நஞ்சு ஆர்சனிக் தனிம வகையாகும். அக்காலகட்டத்தில் ஆர்சனிக் இருப்பை சோதனை செய்ய எந்த நம்பகமான வழிகளும் இல்லை. ஆர்ஃபிலா தனது முதல் ஆய்வுக் கட்டுரையில் (Traité des poisons) ஆர்சனிக் இருப்பை சோதனை செய்து, அவற்றின் துல்லியத்தை அதிகரிக்க புதிய வழிமுறையை உருவாக்கி, பழைய முறைகளுக்கும் புத்துயிர் அளித்து, நஞ்சைப் பற்றிய புதிய நுட்பங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் வெளியிட்டு பெரிதும் சாதனை செய்தார்.

1840 ஆம் ஆண்டில், மேரி லபார்கே என்ற பெண்மணி அவரது கணவரை ஆர்சனிக் பயன்படுத்தி மர்மமான முறையில் கொலை செய்தார் என்று வழக்கு பதிவு செய்யப்பட்டது. அக்காலத்தில் ஆர்செனிக் கிடைப்பது சுலபமாக இருந்தாலும், கொல்லப்பட்ட நபரின் சடலத்தில் ஆர்செனிக் காணப்படவில்லை, ஆனால், அவர் சாப்பிட்ட உணவில் கண்டுபிடிக்கப்பட்டது. நீதிமன்றம் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஆர்ஃபிலா விசாரணை மேற்கொண்டார். ஆர்சனிக்கைக் கண்டறிய பயன்படுத்திய சோதனை, (மார்ஷ் சோதனை), தவறாக மேற்கொள்ளப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்தார் மற்றும் கொலை செய்யப்பட்டவரின் உடலில் உண்மையில் ஆர்சனிக் இருந்தது என்றும் கண்டுபிடித்து லபார்கே குற்றவாளி என்பதை உறுதிப்படுத்தினார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மத்தாயூ_ஆர்ஃபிலா&oldid=1451876" இருந்து மீள்விக்கப்பட்டது