மது சிங் (மன்னன்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மது சிங்
இராஜா
பின்னையவர் பைரிசால்
வாரிசு
பைரிசால்
மரபு நாகவன்ஷி வம்சம்
பிறப்பு குக்ராகர்
இறப்பு 1599
சமயம் இந்து சமயம்

மது சிங் (Madhu Singh) மதுகர் ராய் என்றும் அழைக்கப்படும் இவர் ஆம் நூற்றாண்டில் சோட்டா நாக்பூரிலிருந்த ஓர் நாகவன்ஷி மன்னராவார். இவரது தலைநகரம் குக்ராகரில் இருந்தது.

1585 ஆம் ஆண்டில், முகலாயப் பேரரசர் அக்பரின் படைத்தளபதி ஷாபாஸ் கான் கம்போ குக்ராகர் மீது படையெடுத்தார். இவர் கைது செய்யப்பட்டு முகலாய அரசவைக்குக் கொண்டு செல்லப்பட்டார். பின்னர் கீழ்ப்படிதலை வெற்றிகரமாக நிரூபிப்பதன் மூலம் தனது சுதந்திரத்தைப் பெற்றார். 1591இல், ஒடிசாவின் குத்லுக் கான் லோஹானிக்கு எதிரான முகலாயப் போரில் பங்கேற்றார். கரக்பூரைச் சேர்ந்த சங்கிராம் சிங், கிதௌரின் புரான் மால், ரூப்நாரைன் சிசோடியா மற்றும் பலர் ராஜா மன் சிங்குடன் இணைந்தனர். காஷ்மீரின் முன்னாள் ஆட்சியாளரான யூசுப் ஷா சக், மது சிங் மற்றும் பலர் சார்கண்டு வழியாக ஒடிசாவிற்கு ஒரு படையை வழிநடத்தினர். இவர்கள் ஆப்கானியர்களை தோற்கடித்தனர். மேலும் சில கிளர்ச்சியாளர்களான நசிப் கான் மற்றும் ஜமால் கான், கட்லுவின் மகன்கள் மற்றும் ஜலால் கான் காஸ்கெல் ஆகியோர் கைது செய்யப்பட்டு அக்பரிடம் ஒப்படைக்கப்பட்டனர். [1] [2] [3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மது_சிங்_(மன்னன்)&oldid=3128499" இருந்து மீள்விக்கப்பட்டது