மதுமித்ரா (இயக்குநர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மதுமித்ரா
பிறப்புமதுமித்ரா சுந்தர்ராமன்
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிஇயக்குனர், எழுத்தாளர்
செயற்பாட்டுக்
காலம்
2008– தற்போது

மதுமித்ரா என்பவர் தமிழ்த் திரைப்பட இயக்குனராவார்.[1]

இவர் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னையில் பிறந்தவர். இந்தோனேசியாவில் வளர்ந்தார். பிறகு சிங்கப்பூரில் கல்லூரியில் படித்தார், மேல்படிப்பினை அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்சில் படித்தார்.[2]

சிங்கப்பூரில் இருந்த காலத்தில் நிறைய குறும்படங்களை தயாரித்தார். இவருக்கு பிபிசி சிங்கப்பூர் மாணவர் விருதை அளித்தது.[2] அமெரிக்காவில் கரீபியக் கடற்கொள்ளையர்கள் பற்றிய ஆவனப்படமெடுத்தார்.[2]

நடிகர் ஆர். பார்த்தீபன், சாயா சிங் நடிப்பில் வல்லமை தாராயோ என்ற திரைப்படத்தினை முதன்முதலாக எடுத்தார்.[3][4]

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் பணி மொழி குறிப்பு
இயக்குனர் எழுத்தாளர்
2008 வல்லமை தாராயோ Green tickY Green tickY தமிழ் சிறந்த குடும்பத் திரைப்படத்திற்கான தமிழக மாநில விருது
2010 கொல கொலயா முந்திரிக்கா Green tickY Green tickY தமிழ்
2015 மூணே மூணு வார்த்தை Green tickY Green tickY தமிழ்
2015 மூடு முக்கல்லோ செப்பாலண்டே Green tickY Green tickY தெலுங்கு

ஆதாரங்கள்[தொகு]

வேறு இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுமித்ரா_(இயக்குநர்)&oldid=3163281" இலிருந்து மீள்விக்கப்பட்டது