மதுசூதன் தாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உத்கல் கவுரப்
மதுசூதன் தாசு
Madhusudan Das.jpg
பிறப்புகோபால்பல்லப்
ஏப்ரல் 28, 1848(1848-04-28)
சத்தியபாமாபூர், கட்டக், ஒடிசா, இந்தியா
இறப்புபெப்ரவரி 4, 1934(1934-02-04) (அகவை 85)
கட்டக், ஒடிசா, இந்தியா
இருப்பிடம்கட்டக்
தேசியம்இந்தியா
மற்ற பெயர்கள்மது பாபு
பணிவழக்கறிஞர்
அறியப்படுவதுகவிஞர், எழுத்தாளர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி, அமைச்சர்
அரசியல் இயக்கம்இந்திய விடுதலை இயக்கம்
சமயம்இந்து சமயம்
பெற்றோர்சௌத்ரி ரகுநாத் தாசு, பார்பதி தேவி
வாழ்க்கைத்
துணை
சவுடாமினி தேவி
பிள்ளைகள்சாய்லபலா தாசு
சுதான்சுபலா கசுரா

உத்கல கவுரப் மதுசூதன் தாசு (28 ஏப்ரல் 1848 - 4 பிப்ரவரி 1934) ஒடிசாவின் முதல் பட்டதாரியும் வழக்கறிஞரும் ஆவார். ஒடிசாவின் கட்டக் நகரிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சத்யபாமாபூர் என்னும் கிராமத்தில் 28 ஏப்ரல் 1848 அன்று பிறந்தார் மதுசூதன்[1]. இவரை குலபிருத்தா (ஆகப் பெரிய மனிதர்) என்றும் உத்கல் கவுரப் (உத்கலத்தின் பெருமை) என்றும் அழைப்பர். இவர் ஒரு புலவரும் விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார்.  

குடும்பம்[தொகு]

மதுசூதன் ஒரு சமீந்தாரி குடும்பத்தில் சௌத்ரி ரகுநாத் தாசு மற்றும் பார்பதி தேவி ஆகியோருக்கு மகனாக பிறந்தார். அவருக்குப் பெற்றோர் வழங்கிய பெயர் கோபிந்தபல்லப். பின்னர் அவர் பெயரை மதுசூதன் என்று மாற்றினர்.  மதுசூதன் இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்தார். அவரகள் சாய்லபலா தாசு மற்றும் சுதான்சுபலா கசரா. மூத்தவரான சாய்லபலா சிறந்த கல்வியியலாளர் ஆவார். கட்டக் நகரில் உள்ள சாய்லபலா பெண்கள் கல்லூரிக்கு அவரது பெயர் இட்டு சிறப்பிக்கப் பட்டுள்ளது[2]. இளையவரான சுதான்சுபலா பிரிட்டிசு இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர் ஆவார். 

இளமையும் கல்வியும்[தொகு]

மதுசூதன் துவக்கக் கல்விக்குப் பிறகு, கட்டக் மேல்நிலைப் பள்ளிக்குச் (இன்றைய ரேவன்சா கல்லூரியியல் பள்ளி) சென்றார். 1864ஆம் ஆண்டு நுழைவுத் தேர்வில் வென்று கல்கத்தா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். 1870ஆம் ஆண்டு இளநிலை கலை பட்டத்தை வெற்றிகரமாக முடித்து ஒடிசாவின் முதல் பட்டதாரி ஆனார்[3]. தொடர்ந்து அவர் 1873ஆம் ஆண்டு முதுநிலை கலை மற்றும் 1878ஆம் ஆண்டு சட்ட இளங்கலை படிப்புகளையும் முடித்து இவற்றை சாதித்த முதல் ஒடிசா மாணவர் ஆனார்.

தொழில்சார் வாழ்வு[தொகு]

1881ஆம் ஆண்டு கல்கத்தாவில் இருந்து திரும்பிய பிறகு வழக்கறிஞராய் தனது பணியைத் தொடங்கினார். அவருடைய திறமையால் மற்றோருக்கு உதவும் அளவு வருமானம் ஈட்ட முடிந்தது. ஒடிசாவிலும் இந்தியாவிலும் உள்ள வழக்கறிஞர்களுக்கு மதுசூதன் ஒரு முன்னோடியாய்த் திகழ்ந்தார். அவரது பிறந்த தினமான ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி ஒடிசாவில் வழக்கறிஞர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

அரசியல் வாழ்வு[தொகு]

மக்களால் 'மது பாபு' என்று அன்போடு அழைக்கப்பட்ட மதுசூதன், ஒடிசா மக்களின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்துக்காக பாடுபட்டார். ஒரு சிறந்த கவிஞராகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும், நாட்டுப் பற்றாளராகவும் விளங்கினார். அவர் தொடங்கிய உத்கல் சம்மிலானி என்ற இயக்கம் ஒடிசாவில் சமூக மற்றும் தொழில் புரட்சி ஏற்படக் காரணமாக இருந்தது. அவரது நெடிய அரசியல் போராட்டத்தால் சிதறி இருந்தா ஒடிசா மாநிலத்தை ஒன்றிணைத்து 1936ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் நாள் புதிய ஒடிசா மாநிலம் உருவாக்கப்பட்டது. இந்த நாளை ஆண்டுதோறும் மக்கள் ஒடிசா நாளாகக் கொண்டாடி வருகின்றனர்.

இலக்கிய பங்களிப்பு[தொகு]

ஒரு எழுத்தாளராகவும் கவிஞராகவும் மதுசூதனின் எழுத்துக்களில் நாட்டுப்பற்று மேலோங்கி இருந்தது. ஆங்கிலத்திலும் ஒடியாவிலும் அவர் எண்ணற்ற கட்டுரைகளையும் கவிதைகளையும் எழுதி உள்ளார். அவரது சிறந்த கவிதைகளில் சில "உத்கல் சனாதன்", "சதி இதிகாசு" மற்றும் "சனானிரா உத்கி". இவர் ஒடியா, பெங்காலி மற்றும் ஆங்கிலத்தில் சிறந்த பேச்சாளரும் ஆவார். 

இறப்பு[தொகு]

மதுசூதன் 4 பிப்ரவர் 1934 அன்று இயற்கை எய்தினார்[4].

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2014-03-03 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-04-29 அன்று பார்க்கப்பட்டது.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2018-12-26 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-04-29 அன்று பார்க்கப்பட்டது.
  3. https://books.google.com/books?id=J1SC33vLHZIC&pg=PA108
  4. http://www.telegraphindia.com/1120401/jsp/odisha/story_15320670.jsp#.UQ9_gWdP9tY
"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுசூதன்_தாசு&oldid=3566422" இருந்து மீள்விக்கப்பட்டது