மதினா பள்ளிவாசல், சில்லாங்
மதினா பள்ளிவாசல் | |
---|---|
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | சில்லாங்,மேகாலயா, இந்தியா |
சமயம் | இசுலாம் |
மதினா பள்ளிவாசல் (Madina Mosque),இந்தியாவின் மேகாலயா மாநிலத்தின் சில்லாங் நகரில் அமைந்துள்ளது.இந்தியாவில் கண்ணாடியில் மட்டும் கட்டப்பட்ட பள்ளிவாசல் மற்றும் வடகிழக்கு பிராந்தியத்தில் மிகப் பெரிய பள்ளிவாசல் ஆகும். மதீனா பள்ளிவாசலலின் கண்ணாடி குவிமாடம் மற்றும் கண்ணாடி கோபுரங்கள் அனைத்து அமைப்புகளும் பிரகாசமானது ஆகும்.[1]
அமைப்பு
[தொகு]மதீனாவில் பள்ளிவாசல் இந்தியாவின் அரிதான கட்டடக்கலையான கண்ணாடி ஒளிவிடும் அமைப்பில் உள்ளது.இது 121 அடி உயரம் மற்றும் 61 அடி அகலம் கொண்டது.நான்கு அடுக்கு மாடிகள் கொண்ட அமைப்பில் ஒரு அனாதை இல்லம்,ஒரு நூலகம் மற்றும் ஒரு இஸ்லாமிய இறையியல் நிறுவனம் உள்ளது.பள்ளிவாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள ஈத்கா பகுதியில் 8000 மக்கள் பிரார்த்தனை செய்யலாம்.[2] பள்ளிவாசலில் பெரிய தோட்டம் உள்ளது.மதீனாவில் பள்ளிவாசல் இஸ்லாமிய ஆய்வு மற்றும் ஆன்மீக மையம் மையமாக முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.[1]
பெண்கள் தொழுமிடம்
[தொகு]இப்பள்ளிவாசலில் சுமார் 2000 பெண்கள் தொழுகை நடத்த தனி இடம் உள்ளது.[1]