மண்டு தேப்நாத்து
தனிநபர் தகவல் | |
---|---|
குடியுரிமை | இந்தியா |
வசிப்பிடம் | அகர்த்தலா, திரிபுரா, இந்தியா |
விளையாட்டு | |
விளையாட்டு | சீருடற்பயிற்சி விளையாட்டு |
மண்டு தேப்நாத்து (Mantu Debnath) இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் தலைநகரமான அகர்த்தலாவைச் சேர்ந்த ஒரு சீருடற்பயிற்சி விளையாட்டு வீரராவார். மோண்டு தேப்நாத் என்றும் இவர் பெயர் உச்சரிக்கப்படுகிறது. [1][2]
தேசிய அளவிலான போட்டிகளில் இவர் தங்கப் பதக்கங்கள் வென்றுள்ளார். [1] 1969 ஆம் ஆண்டு உருசியாவில் நடந்த அனைத்துலக சீருடற்பயிற்சிப் போட்டியில் வென்ற முதல் இந்திய சீருடற்பயிற்சி விளையாட்டு வீரர் என்ற சிறப்புக்குரியவர் என்ற பெருமையை தேப்நாத் பெற்றுள்ளார். [3][4]
சீருடற்பயிற்சி விளையாட்டில் இவர் செய்த சாதனைகளுக்காக இந்திய அரசாங்கம் 1975 ஆம் ஆண்டு மோண்டு தேப்நாத்திற்கு அருச்சுனா விருதை வழங்கி சிறப்பு சேர்த்தது. [1][5][6] சாம் லாலுக்குப் பின்னர் சீருடற்பயிற்சி விளையாட்டுக்காக அருச்சுனா விருது பெற்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. [6][5] திரிபுராவில் அருச்சுனா விருது பெற்ற முதலாவது நபர் மோண்டு தேபநாத் என்பது இவருக்குக் கிடைத்த கூடுதல் பெருமையாகும். [1][4] அரியானா மாநிலத்தைச் சேர்ந்த தலிப் சிங் தேப்நாத்திற்கு பயிற்சியாளராக இருந்தார். [5]
இவற்றையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 "Flipping through the pages of Tripura's gymnastics glory - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-07.
- ↑ "Battling odds to make name in sport". Deccan Herald (in ஆங்கிலம்). 2016-09-10. பார்க்கப்பட்ட நாள் 2020-08-07.
- ↑ "How a giant leap by Dipa Karmakar bolstered the aspirations of tiny Tripura - Sports News , Firstpost". Firstpost. 2016-04-26. பார்க்கப்பட்ட நாள் 2020-08-07.
- ↑ 4.0 4.1 "Leap to gold". The Indian Express (in ஆங்கிலம்). 2014-08-19. பார்க்கப்பட்ட நாள் 2020-08-07.
- ↑ 5.0 5.1 5.2 "Dipa revives gymnastics legacy in Tripura – Mysuru Today" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-07.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ 6.0 6.1 "Arjuna Award Winners 2020 | List of Previous Arjuna Awardees By Year". The Prize Winner (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-02-06. Archived from the original on 2020-08-15. பார்க்கப்பட்ட நாள் 2020-08-07.