இந்தியாவில் சீருடல்பயிற்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இந்தியாவில் சீருடல்பயிற்சி
Gymnastics.jpg
Gymnastics in Delhi
நிருவாகக் குழுGymnastics Federation of India

இந்தியாவில் சீருடல்பயிற்சி: 2010 காமன்வெல்த் போட்டியின் பொழுது அஷிஸ்குமார் இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை சீருடல்பயிற்சியில் பெற்றுத்தந்தார்.[1] அப்பொழுது தான் இந்தியா சீருடல் பயிற்சியில் தனது காலடியை உலக அரங்கில் பதித்தது. ஆசிஸ்குமாரின் தலைமைப்பயிற்றுநர் ஒரு நாளிதழ்களுக்கு பேட்டியளிக்கும் பொழுது ஆகஸ்ட் 2009-ல்இந்தியாவில் சீருடல் பயிற்சி செய்வதற்கு எந்தவிதமான உபகரணங்களும் இல்லை. ஆசிஸ்குமார் 2010 ஆம் ஆண்டுவரை கடினமானதரையில்தான்  பயிற்சி செய்தார். பிறகு 20 வருடம் மிகவும் பழமையான உபகரணங்களைப் பெற்றோம். மேலும் இந்திய அணியை அக்டோபரில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு அனுப்பவில்லை.ஆகவே 2012-ல் நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெறவில்லை. 2014 காமன் வெல்த் போட்டியில் ஆசிஸ்குமாருடன் சேர்த்து பெண் சீருடல் போட்டியாளர்களும் சிறப்பாக செயல்பட்டார்கள். 2014 காமன்வெல்த் போட்டியில் தீபா கர்மாகர்,  வெண்கலப்பதக்கம் பெற்றார். இதுவே இந்தியா பெண்கள் பிரிவில் பெற்ற முதல் பதக்கமாகும். தீபா கர்மாகரின் இரண்டாவது முயற்சியின் பொழுது செய்யப்பட்ட புரூடோனாவா தாவல் அதிக புள்ளிகளைப் பெற்று தந்த்து. [2][3]


மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]