மணல் பலகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓவியமாக வரையப்பட்ட அபாக்சுன் -ஓவியர்:டேரியசு[1]

மணல் பலகை (Sand table) என்பது மாதிரியமைத்தலுக்கும் கல்வி நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படும் ஒரு சாதனமாகும். பலகையில் மணல் பரப்பப்பட்டு அதன்மீது தேவையான செயல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் முன்னோடி, துவக்ககால கிரேக்க மாணவர்களால் பயன்படுத்தப்பட்ட வரிப்பள்ளங்களும் எண்ணிகளும் கொண்ட "எண்ணும் பலகை"யாக (abax) இருக்கலாம். தற்காலத்தில் மணற்பலகைகள் இராணுவத் திட்டங்களுக்கான நிலவமைப்பு மாதிகளுக்கும் போர்விளையாட்டுகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. ஒரு மணல் மேசை ஆரம்பக் கட்டங்களில் கற்பித்தல் மற்றும் சிறப்பான தேவைகளுக்கு குழந்தைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.[2][3]

இராணுவத் திட்டமிடலுக்காகவும், புலம்பெயர்ந்தோர் குடியிருப்புக்காகவும் பயன்படுகிறது. 1890 ஆண்டு கனடாவின் ராயல் இராணுவக் கல்லூரியில் இராணுவப் பயிற்சிகளைக் கற்பிப்பதற்காக மணல் பலகை அறை அமைக்கப்பட்டது.[4] இன்று இம்மணல் பலகைகள் மெய்நிகராகவும் வழக்கமான மணல்பலகையாவும் பயன்படுத்தப்படுகிறது.


அபாக்சு[தொகு]

எழுதுவதற்கும் வடிவியல் மற்றும் கணக்கீடு போன்ற செயற்பாடுகளுக்காவும் பொதுவாகப் மாணவர்களால், குறிப்பாக கிரேக்கத்தில் பயன்படுத்தப்படும் மணல் கொண்ட ஒரு பலகை அபாக்சு ஆகும்.[5]

அபாக்சு, எண் சட்டத்தின் முன்னோடியாகும். பின்னர் எண்ணுவதற்காக மணிகளும் எண்கணித இட மதிப்பிற்காக குச்சிகளும் சேர்க்கபட்டன. அபாக்சு மற்றும் எண் சட்டம் இரண்டிற்குமான வேறுபாடுகள் தெளிவாக வரையறுக்கப்படவில்லை.[6] மேலும் இன்றைய காலத்தில், எண் சட்டம் என்பது தண்டுகளும் மணிகளுங்கொண்ட ஒரு சட்டமாகத்தான் விவரிக்கப்படுகிறதேயொழிய அதனுடன் மணல் பலகையின் வரையறை இணைக்கப்படுவதில்லை.[7]

மணல் மேசை சில பலகை விளையாட்டுகளுக்கு முன்னோடியாக இருந்திருக்கலாம். ("அபாக்சு அல்லது எண்சட்டம் என்ற வார்த்தைகள், காணக்கீட்டுப் பலகைகள் (எண்ணிகளுடன்), விளையாட்டுப் பலகைகள் (அதன் துணைத்துண்டுகளுடன்) இரண்டையும் குறிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம், ...").[8] அபாக்சு என்ற சொல்லானது "மணல் பலகை" என்பதற்கான பழைய கிரேக்க மொழிச் சொல்வழி வந்த சொல்லாகும்.[9]

குபார்[தொகு]

அரபு மொழியில் மணல் அல்லது தூசி என்ற பொருள்கொண்ட சொல் "குபார்" ஆகும் வடமேற்கு ஆப்பிரிக்கா மற்றும் ஐபீரிய மூவலந்தீவுகளில் குலார் பலகைகளில் பயன்படுத்தப்பட்ட இலக்கங்களின் சாயலில் மேற்கத்திய எண்ணுருக்கள் (பதின்ம இலக்கங்கள் 0–9) உருவாக்கப்பட்டதோடு, மேற்கு அரேபிய அல்லது குபார் பாணி எனவும் விவரிக்கப்பட்டது[10]

படங்கள்[தொகு]

குறிப்புகள் மற்றும் குறிப்புகள்[தொகு]

  1. Williams, Michael R. (1998). A history of computing technology (2nd ed., 2nd print. ). Los Alamitos, Calif.: IEEE Computer Soc.. பக். 56. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8186-7739-7. 
  2. Raines et al. 1992:101
  3. Wagner 1999:80
  4. Preston 'Canada`s RMC: A History of the Royal Military College' (University of Toronto Press, Toronto, 1969)
  5. Smith 1958:177–178
  6. Ifrah 2000:125–126 and others
  7. See American Heritage definition of "abacus" in External Links below
  8. Taylor 1879:28
  9. American Heritage:abacus
  10. O'Connor, J. J., and E. F. Robertson, The Arabic numeral system http://www-history.mcs.st-andrews.ac.uk/history/HistTopics/Arabic_numerals.html

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
மணல் பலகை
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மணல்_பலகை&oldid=3734761" இலிருந்து மீள்விக்கப்பட்டது