மடை வடுகுந்தா சிவன் கோயில்
வடுகுந்தா சிவன் கோயில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | ![]() |
மாநிலம்: | கேரளம் |
மாவட்டம்: | கண்ணூர் |
அமைவிடம்: | மடை |
கோயில் தகவல் | |
மூலவர்: | சிவன் |
சிறப்புத் திருவிழாக்கள்: | மகா சிவராத்திரி |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | கேரளக் கட்டிடக்கலை |
கோயில்களின் எண்ணிக்கை: | ஒன்று |

மடை வடுகுந்தா சிவன் கோயில், இந்தியாவில் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தின் மடை கிராமத்தில் தற்போது "மடை பாரா" என்று பொதுவாக அறியப்படுகின்ற பீடபூமி நிலத்தில் இடைக்காலத்தில் " கோலத்திரி " மன்னர்களால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. [1]
அமைவிடம்
[தொகு]இது கண்ணூருக்கு வடக்கில் 22 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கோலத்திரி இராச்சியம் என்பது 5 முதல் 8 ஆம் நூற்றாண்டு வரை "எழிமலை" பேரரசை ஆண்ட மூஷாக வம்சத்தின் உள்ளார்ந்த கிளை ஆகும். சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு அவர்களின் வம்சத்தைச் சேர்ந்த ஒரு கிளையினர் இடம்பெயர்ந்து எழிமலைக்கு தெற்கில் 4 கி.மீ. தொலைவில் மடையில் குடியேறினர். அவ்விடம் ஒரு முக்கியமான துறைமுகமாகவும், வர்த்தக மையமாகவும் இருந்தது. அவர்கள் அரண்மனைகளையும், கோயில்களையும் உருவாக்கி, தம் தலைமையகத்தை மடை பாரா என்ற இடத்தில் நிறுவினர். சிவபெருமானின் சுயம்பு எனப்படுகின்ற தெய்வீக சக்தி இருப்பதால் இக்கோயிலானது அதன் தென்மேற்கு மூலையில் உள்ள மடை பாறை மீது கட்டப்பட்டது.