மடிவாளா மசிதேவா
மடிவாளா மசிதேவா | |
---|---|
மடிவாள மாசிதேவா சிலை | |
பிறப்பு | திவாரா ஹிப்பாரி கிராமம்,சிந்தகி தாலுகா,விஜயபுரா மாவட்டம்,கர்நாடகா |
இறப்பு | உலவி கரிமனா ஆறுகில் முர்கோட், பெல்ககவி மாவட்டம். |
வாழ்க்கைத் துணை | மஹாமனே |
மடிவாளா மசிதேவா (அல்லது) மடிவாள மாசிதேவா(Madivala Machideva) (1120 -1130AD) இவர் கன்னட மாநிலத்தின் ஒரு தலை சிறந்த வீரனாகவும் மற்றும் கடவுளாகவும் இருந்துள்ளார்.இவர் திவாரா அருகிலுள்ள,சிந்தகி என்னும் வட்டத்தில் பீஜப்பூர் கர்நாடகாவில் பிறந்தார்.இவர் பிறந்த இந்த நகரம் கடவுள் காளிதேவரின் நகரமாக கூறப்பட்டது [1]
தோற்றம்
[தொகு]மசிதேவா அவர்கள் பர்வதப்பா மற்றும் சுஜனனி தம்பதி இனருக்கு மகனாக கர்நாடகா மாநிலத்தில் பிறந்தார்.இவர்கள் சிவன் வழி வந்தவர்கள் என்று கூறப்படுகிறது. லிங்காயத் மதத்தை பரப்பிய பசவர் அவர்களின் அரசவையில் சலவை தொழில் புரிந்து வந்தார் பாரம்பரிய வழியாக,மசிதேவா பசவரை விட இருபது ஆண்டுகள் முன்னாடி தோன்றியவர் என்றும் வரலாறு உள்ளது.
இறைபனி
[தொகு]ஹிப்பாராகிரி என்னும் ஊரில் ஒரு கோவில் இருந்துள்ளது,அந்த கோவிலில் கைலாஷ் சாமி என்னும் கடவுளை பிரதிஷத்தை செய்தனர்,அக்கோவில் ஊருக்கு வெளியில் இருந்தது,அக்கோவிலுக்கு அருகில் ஒரு குளம் இருந்துள்ளது,அந்த கடவுளின் பெயரால் அந்த ஊருக்கும் அப்பெயர் சூட்டப்பட்டது.அக்குளத்தில் இருந்துகொண்டு அக்கோவிலுக்கு இறைபணி செய்து வந்தார் மசிதேவா.இவர் இறை பக்தியை கண்டு பசவர்,பிரபுதேவா,அக்கமடா போன்ற மாமனிதர்கள் இவரை கண்டு வியந்தனர்.ஆனால் இந்த கோவில் மசிதேவா வின் தாய்,தந்தையை கொண்டே பிரதிபலிக்கப்பட்டது என்பதை தெரியாமலே மசிதேவா அக்கோவிலுக்கு இறை பனி செய்து வந்தார்.பின்பு ஹிப்பாராகிரி யை விட்டு விலகி சென்று சிவசரணாக்களின் தந்தை "கல்யானவை" சந்திக்க நினைத்தார்,ஆகையால் ஹிப்பாராகிரி கும்,கல்யாணவிற்கும் இடையில் ஒரு பெரிய ஆறு இருந்தது அந்த ஆற்றின் பெயர் "பீமா",பெரும்பாலான மனிதர்கள் அதை கடக்க அஞ்சுவார்கள் ஏன் என்றால் அந்த ஆறு சகதி மற்றும் முள்களும் நிறைந்தது,ஆனாலும் கல்யானவை சந்திக்க வேண்டும் என்ற முடிவோடு,தன் மன தைரியம் கொண்டும் அந்த ஆற்றை நீந்தியே கடந்தார்.
பிஜில்லாவுடன் சந்திப்பு
[தொகு]ஒரு நாள் அரசவையில் மன்னரின் வருகைக்காக அமைச்சர்கள் மற்றும் மந்திரிகள் நின்று கொண்டிருந்தனர் மன்னர் பிஜிலா அரசவைக்குள் சென்றார்,அப்போது ஒவ்வொரு மந்திரிகளை பார்த்து அமர சொன்னார்,அப்போது கடைசியாக நின்று கொண்டிருந்த பசவா வை பார்த்து ஒரு சிந்தனை தோன்றியது, அதை பசவா விடம் கேட்டார் உன் ஆடை மட்டும் மிக வெண்மையாகவும், தூய்மையாகுவும் இருப்பதற்கு காரணம் என்ன என்று கேட்டுள்ளார்.அதற்கு பசவா இதற்கு காரணம் மசிதேவா என்று கூறியுள்ளார்,அதற்கு மன்னர் என் ஆடைகளையும் சலவை செய்து தரும்படி கூறினார்,அதற்கு பசவா அவர் அதை செய்யமாட்டார் என்று கூறியுள்ளார்,இதை கேட்ட மன்னர் க்கு சிறிது கோபம் வந்துள்ளது,அடுத்து மன்னர் "மன்னரின் கட்டளையை மதிக்காவிடில் தக்க தண்டனை காத்துக்கொண்டிருக்கிறது". ஆகையால்,மசிதேவா வை என் துணிகளை சலவை செய்ய அழைத்து வா என்று கூறினர், அதற்கு பசவா அவர் சிவ சரணாக்களுக்கு தொண்டு செய்பவர்,உங்களை போன்ற அதிகார குரல் கூறுபவர்களுக்கும், பொற்காசுகளை ஈட்டுபவர்களுக்கும் அவர் பணியமாட்டார் என கூறினார். இதை கேட்ட மன்னருக்கு கோபம் இன்னும் அதிகரிக்கவே அவரது படை வீரர்களை அழைத்து மசிதேவா வை எங்கு பார்த்தாலும் அழைத்து வரும்படி உத்திரவு விட்டார். இந்த தகவல் அனைத்து மக்களுக்கும் தெரியவந்தது,முக்கியமாக சிவ தொண்டு ஆற்றுபவர்களுக்கும்,ஒரு நாள் மசிதேவா வை தேடி செல்லும் பாதையில் மசிதேவா ஒரு கையில் துணி மூட்டையும்,மற்றொரு புறம் பளபளக்கும் வாளையும் ஏந்திய படி குலத்திற்கு சென்றார்,அதை கண்ட மன்னரின் படைகள் ஒளிந்தனர்.பின்பு அவர் கையில் இருக்கும் பளபளக்கும் வாளை கண்டு அஞ்சி பின் வாங்கினார்.இதை கேட்ட மன்னர் அவமானம் அடைந்தார்,மசிதேவா குளத்தில் இருக்கும் போது யானை யை வைத்து அவரை கொன்று விடுங்கள் என்று அவருடைய படை வீரர்களுக்கு உத்தரவுவிட்டார், அதன் படி அவர்களும் மசிதேவா இருக்கும் குலத்திற்கு அருகில் யானை யை ஓட செய்தனர், இதனை அறிந்த மசிதேவா யானை தன் அருகில் வரும் நேரத்தில் திரும்பி தன் வாளை சுழற்றியுள்ளார், வாளின் சீற்றதை கண்ட யானை மசிதேவா முன் மண்டியிட்டு தன் கரங்களை உயர்த்தி தலை வணங்கியது. இதை கண்ட வீரர்கள் திகைத்தனர், அதை அப்படியே மன்னரிடம் கூறினார், இதை கேட்ட மன்னர் தன்னுடைய இரண்டாவது முயற்சியும் தோல்வியில் முடிந்தது என்று எண்ணி அவமானம் அடைந்தார். இதன் இடையில் "மஞ்சணாஸ்" பிரிவை சேர்ந்தவர்களும் மன்னரிடத்தில் அப்பிரச்சனையை மேலும் வளர்த்தனர். இதனால் மனமுடைந்தார் மன்னர். அப்போது அரசவைக்கு பசவர் நுழைந்தார், என்ன நடந்தது என்பதை மற்ற மன்னர்களிடம் கேட்டு தெரிந்தார், அந்த சமையத்தில் மன்னர் எனக்கொரு கதை கூறு என்று பசவா விடம் கேட்டார்,அப்போது பசவா சிவசரணாஸ் இன் கொள்கைகளையும்,மசிதேவா வின் குணத்தையும் பற்றி மன்னரிடம் விவரித்தார்.இதை கேட்ட மன்னரின் மனது குளிர்ந்தது. உடனே என்னை மசிதேவா இருக்கும் இடத்திற்கு அழைத்து செல் என்று கட்டளை இட்டார்.உடனே மசிதேவாவை சந்தித்து என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறினார்,அதோடு மட்டுமல்லாமல் சிவசரணாஸ் விடமும் மன்னிப்பு கேட்டார்.இதை அறிந்த "வைதகாஸ்" பிரிவை சேர்ந்தவர்கள் சற்று பொறாமை கொண்டனர். மேலும் அவர்கள் மன்னருக்கும்,மசிதேவா கும் இருக்கும் நல்லுறவை களைத்து விட வேண்டும் என்று எண்ணினர் அதற்காக அந்த ஊர் மற்றும் அரசவைக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வரும் மது அடிமையை,மசிதேவா தூண்டுதல் பெயரில் இது நடக்கிறது என்று குறி வந்தனர்.இதை போன்று தொடர்ந்து மசிதேவா விற்கு எதிராக பல தவறான கருத்துகளை பரப்பி வந்தனர்.
மசிதேவாவால் கிடைத்த உயிர்
[தொகு]நியூலி சந்தியா மற்றும் அவருடைய மனைவி காயகாஸ் என்னும் சிவனின் இனத்தை சேர்ந்தவர்கள்,சந்தியா கல்யாணவின் பெருமையை அறிந்து கல்யானவை சந்திக்க வேண்டும் என்று சென்றார்,சிவசரணாக்களும் அவருடைய இறை பணியை கண்டு கல்யாணவில் ஏற்று கொண்டனர்,சந்தியா தினமும் காட்டுப்பகுதியில் உள்ள புற்களை அறுத்து அதை கயறு போல் பின்னி சிவசரணாகலிடம் வழக்கமாக விற்று வந்தார்,ஒரு நாள் அக்கயிர்களை போடுவதற்கு ஒரு கூடையை செய்வதற்கு காட்டிற்கு சென்றார்,ஒவ்வொரு மரங்களாக வெட்டி கொண்டிருந்தார்,அப்போது அவருடைய காலிற்கு அடியில் உள்ள சிறிய மர பட்டையினால்,ஒரு பெரிய மர கட்டையில் விழுந்தார் அது அவருடைய நெஞ்சில் மிக பெரிய காயத்தை ஏற்படுத்தியது,அவர் வலியால் துடித்தார் இருப்பினும் அவ்வழியை பொறுப்படுத்தாமல் சிவசரணாகலிடம் குறித்த நேரத்தில் கயிறை கொடுக்க வேண்டும் என எண்ணி நடக்க ஆரம்பித்தார்,இதனால் அவருடைய நெஞ்சில் ரத்தம் வழிந்தது இதை கண்ட ஒருவர் அவரிடம் இதை தெரிவித்தார்,அதை அவர் பெரிதாக எண்ணவில்லை,சற்று தூரம் செல்லவே அவர் மயக்கம் அடைந்து விழுந்தார்,அப்போது குலத்திற்கு அருகில் இருந்த மசிதேவா வை கண்ட அவர் அழைத்தார் மசிதேவா அவர் நெஞ்சில் இருந்த சிறிய கட்டையை அகற்றினர்,தனக்கு தெரிந்த மூலிகை மருந்துகளை வைத்து அவரின் காயத்தை ஆற்றினார்,பின்பு அவருடைய வீட்டில் அவரை சேர்த்தார்,சந்தியாவின் காயத்தை அறிந்த பசவா அவர் மாண்டுவிட்டார் என எண்ணி அவருடைய வீட்டிற்கு விரைந்தார்,அங்கு அவர் உயிருடன் இருக்கவே,நான் உயிர் பிழைக்க காரணம் மசிதேவா என்றும் அவரே எங்கள் கடவுள் எனவும் கூறி சந்தியா மற்றும் அவருடைய மனைவி கண்ணீர் விட்டனர்.
மசிதேவாவின் போர் குணம்
[தொகு]சிவசரணாஸ்கள் வேற்று குலத்தை சேர்ந்த ஹராலயா மற்றும் மதுவருசா ஆகியோருக்கு திருமணம் செய்து வைத்தனர். இதனை வைதக்கஸ் மிகவும் எதிர்த்தனர்,என்ன செய்வது என அறியாமல் மன்னரிடத்தில் அதை தெரியப்படுத்தினர்,இதை கேட்ட மன்னர் மிகவும் ஆத்திரமடைந்து தன் வீரர்களை அழைத்து ஒரு செயலை செய்ய கூறினார்,யானையின் கால்களில் ஹராலயா மற்றும் மதுவருசா கட்டப்பட்டு ஊர் முழுவதும் இழுத்து செல்லப்பட்டது,பின்பு அவர்கள் கொடூரமான முறையில் மாண்டனர். இதனை அறிந்த பாதி சிவசரணாஸ் சின்ன பசவன்,அக்கம்டா ஆகியோருடன் தஞ்சம் புகுந்தனர், ஆனால் மசிதேவா மட்டுமே மிகவும் துணிச்சலாக பிஜிலா அரசை எதிர்கிறார்,அவர் மட்டும் அவர் குழு மட்டுமே கல்யானவை விட்டு அஞ்சி செல்லவில்லை
மசிதேவாவின் தியாகம்
[தொகு]மசிதேவா வின் போர் குணத்தையும், அவரின் விடா புடி யும் அறிந்த மன்னர் மிகவும் ஆத்திரமடைந்து மசிதேவா வை எப்படியாவது மாய்த்து விட வேண்டும் என்று கூறினார், ஆகையால் பிஜில்லாவின் மகன் "சோய்தேவா"வின் கீழ் ஒரு படை மசிதேவாவை கொல்ல சென்றது,தந்தை மசிதேவா கடினமான முறையில் அவர்களை எதிர்த்து கதாநாயகனான முறையில் மாய்ந்தார். இவர் சிவசரணாஸ் இன மக்களுக்காக போராடினர் என்பது குறிப்பிடத்தக்கது, பெல்லகம் என்னும் மாவட்டத்தில் கொட்டாச்சி என்னுமிடத்தில் கொல்லப்பட்டார், அவ்விடத்தில் சிவசரணாஸ் மட்டும் இன்றி,பல்வேறு இனமக்கள் இவருக்கு அங்கு நினைவாலயம் அமைக்கபட்டது,மேலும் தந்தை மசிதேவா மறு இன திருமணம்,அரசர்களின் நில அபகரிப்பு,தீண்டாமை,வாய்தகஸ் அடக்குமுறை இவற்றிற்கு எதிராகவும் மக்களிடையே சமநிலைக்கு ஆதரவாகும் கடினமான முறையில் போராடினர். தந்தை மசிதேவா வின் மரணம் வீர மரணம்.மேலும் அவரை போன்ற சான்றோர்கள் பூமியில் பிறப்பது அரிது, ஆகையால் தான் பசவா, சின்ன பசவா, அக்கம்டா, பிரபுதேவா, போன்ற மாமனிதர்கள் அவரை போற்றி புகழ்ந்தனர், அவரின் வழிமுறைகளை தெரிந்த அனைத்து தர கன்னட மக்களும் அவரை வீரனாகவும், கடவுளாகவும் வணங்கி கொண்டிருக்கின்றனர்
விமான நிலையம்
[தொகு]டொமளுர் யில் இயங்கி வந்த விமான நிலையம் கர்நாடகா அரசாங்கத்தால் தற்போது மசிதேவா என்னும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.[2]
திரைப்படம்
[தொகு]மசிதேவா வின் வரலாறு அடங்கிய திரைப்படம் கன்னட நடிகர் சாய்குமார் நடிப்பில் வெளியிடப்பட்டது.யாரக்குறைய அனைத்து கன்னட திரை அரங்குகளிலும் படம் வெளியிடப்பட்டது.[3]
இதையும் காண்க
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- Colourful procession marks Madiwala Machideva Jayanti.
- Vachana in "VACHANA" English Version Translation by: O.L. Nagabhushana Swamy, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-81457-12-2, 2012, Pub: Basava Samithi, Basava Bhavana Benguluru 560001.
- Shivasharaneyaru, by: Shri Somashekhar Munavalli and Shri Siddhayya Puranik, 1994, Pub: Shree Basaveshwara Peetha, Karnataka University Dharwad-580003.
- Heaven of Equality, Transalted by: Dr. C. R.Yaravintelimath and Dr. M. M. Kalburgi, 2003, Pub: Shree Basaveshwara Peetha, Karnataka University Dharwad-580003
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://lingayatreligion.com/Sharanaru/Madivala_Machideva.htm
- ↑ http://timesofindia.indiatimes.com/city/bengaluru/New-name-for-Old-Airport-Road/articleshow/54386913.cms
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-09-08. பார்க்கப்பட்ட நாள் 2018-01-26.