மஞ்சு பிரகாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மஞ்சு பிரகாசு
Manju Prakash
பீகார் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1990–2000
முன்னையவர்சிறீகாந்து பதக்
பின்னவர்சுகதா பாண்டே
தொகுதிபக்சர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1965 (அகவை 58–59)
அரசியல் கட்சி
துணைவர்இராம்தியோ வர்மா

மஞ்சு பிரகாசு (Manju Prakash) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இந்திய பொதுவுடைமைக் கட்சியைச் (மார்க்சியம்) சேர்ந்த இவர் பக்சர் சட்ட மன்றத் தொகுதியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பீகார் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார். [1] 1990 [2] மற்றும் 1995 ஆம் ஆண்டுகளில் [3] சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது கணவர் இராம்தியோ வர்மாவும் பிபூதிபூர் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று பீகார் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார். [1] [4] மஞ்சு பிரகாசு பீகார் மகளிர் ஆணையத்தின் தலைவராக பதவி வகித்துள்ளார். 2020 ஆண்டிற்குப் பின்னர் பொதுவுடைமைக் கட்சியின் மார்க்சியப் பிரிவிலிருந்து வெளியேறி இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) விடுதலை கட்சியில் சேர்ந்தார். இவரது தந்தை சோதி பிரகாசும் ஒரு பொதுவுடைமை கட்சி உறுப்பினராவார். தலித் தலைவராக இருந்த அவர் உயர் சாதியனரான இராய் இனத்தவரால் கொல்லப்பட்டார். [1]

தேர்தல் பதிவு[தொகு]

மஞ்சு பிரகாசு 1985, [5] 1990, 1995, 2000, [6] 2010 [7] ஆம் ஆண்டுகளில் பொதுவுடைமைக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தியும் மற்றும் 2020 ஆம் ஆண்டில் தனித்து சுயேட்சையாகவும் பிபூதிபூரில் பீகார் சட்டமன்றத் தேர்தலில் பங்கேற்றார். 1990 மற்றும் 1995 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் வெற்றி பெற்றார்.

குறிப்பிடத்தக்க தேர்தல் பதிவு
ஆண்டு பதிவான வாக்குகள் சதவிதம் மொத்த வாக்குகள் வெற்றி விளிம்பு
1990 [2] 19,522 23.20 84,139 1,058
1995 [3] 41,757 41.27 101,178 22,507

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Jha, Sachchidan (February 29, 2000). "New House to have three more women MLAs". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-13.
  2. 2.0 2.1 "Bihar 1990". Election Commission of India (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2020-11-13.
  3. 3.0 3.1 "Bihar 1995". Election Commission of India (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2020-11-13."Bihar 1995". Election Commission of India. Retrieved 13 November 2020.
  4. "बिहार चुनाव 2020: माकपा ने विभूतिपुर से छह बार विधायक रहे रामदेव वर्मा को पार्टी से निकाला". Dainik Jagran (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2020-11-13.
  5. "Bihar 1985". Election Commission of India (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2020-11-13.
  6. "Bihar 2000". Election Commission of India (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2020-11-13.
  7. "Bihar 2010". Election Commission of India (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2020-11-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சு_பிரகாசு&oldid=3785674" இலிருந்து மீள்விக்கப்பட்டது