மஞ்சள் தாங் மீன்
மஞ்சள் தாங் மீன் | |
---|---|
மஞ்சள் தாங் மீன் (சீப்ராசோமா பிளாவேசென்சு) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | அக்காந்தூரிபார்மிசு
|
குடும்பம்: | அக்காந்தூரிடே
|
பேரினம்: | சீப்ராசோமா
|
இனம்: | பிளாவ்சென்சு
|
இருசொற் பெயரீடு | |
சீப்ராசோமா பிளாவ்சென்சு பென்னெட், 1839 | |
வேறு பெயர்கள் | |
|
மஞ்சள் தாங் மீன் (Yellow tang - சீப்ரசோமா பிளாவ்சென்சு) என்பது அகந்தூரிடே குடும்பத்தைச் சேர்ந்த உவர் நீரில் வாழும் மீன் இனம் ஆகும். இவை மீன் தொட்டிகளில் வளர்க்கப்படும் பிரபலமான மீன் இனங்களில் ஒன்றாகும்.
வகைப்பாடு
[தொகு]1828 ஆம் ஆண்டு மஞ்சள் தாங் மீன்களை பற்றி முதன்முதலில் ஆங்கில இயற்கை ஆர்வலர் எட்வர்ட் டர்னர் பென்னட் என்பர் ஹவாய் தீவின் தொகுப்பில் இருந்து அகாந்துரஸ் ஃபிளேவ்ஸென்ஸ் என்று விவரித்தார். லத்தீனில் ஃபிளேவ்ஸென்ஸ் என்பது மஞ்சள் என்பதை குறிக்கும். இம்மீன்கள் சர்ஜன்மீன்களின் குடும்பத்தை சேர்ந்தவை.
உருவ அமைப்பு
[தொகு]முதிர்ந்த மீன்கள் 20 செ.மீ (7.9 அங்குலம்) நீளமாகவும், 1-2 செ.மீ (0.39–0.79 அங்குலம்) தடிப்மனாகவும் வளரக்கூடும். முதிர்ந்த பெண் மீனானது முதிர்ந்த ஆண் மீனை காட்டிலும் பெரிதாக வளரும். இவை மீன்கள் பிரகாசமான மஞ்சள் நிறத்தில் காணப்படும். இரவு நேரத்தில் மஞ்சள் நிறம் சற்று மங்குவதுடன் கிடைமட்டமாக இருக்கும் வெண்ணிற பட்டையுடன் பழுப்பு நிற இணைப்பு உருவாகிறது. பகல் நேரத்தில் அவை மீண்டும் பிரகாசமான மஞ்சள் நிறத்தை பெறும். ஆக்கிரமிப்பு குணமுடைய இம்மீன்கள் "இச்" எனப்படும் மீன் நோய்க்கு ஆளாகக்கூடியது. இவை தொட்டிகளில் உள்ள முருகைக் கற்களை சேதப்படுத்தக் கூடியவை. ஆண், பெண் மீன்கள் ஒரே மாதிரியாக இருப்பதுடன் இனவிருத்தியின் போது ஆண் மீன்கள் பளபளப்பாக காணப்படும். இவ்வியல்பால் அவற்றை அடையாளம் காணலாம்.[1]
உணவு
[தொகு]மஞ்சள் தாங் மீன்கள் கடலடியில் காணப்படும் பாசிகளையும் பிற கடல் தாவரங்களையும் உணவாக உட்கொள்ளும். சிறைப்பிடிக்கப்படும் மீன்களுக்கு இறைச்சி / மீன் சார்ந்த உணவுகள் அளிக்கப்படுகின்றன. தாவரங்களை உண்ணும் மீன்களுக்கு மாமிசம் மற்றும் தாவரம் கலந்த உணவுகள் பெரும்பாலும் தீங்கு விளைவிக்கலாம் என்று சில கடல் மீன்வளத் தொழில் வல்லுநர்கள் கருதுகின்றனர். மஞ்சள் தாங் மீன்கள் கடல் ஆமைகளின் ஓடுகளில் உள்ள பாசிகளை நீக்குகின்றது.
வாழிடம்
[தொகு]மஞ்சள் தாங் மீன்கள் பசிபிக் பெருங்கடலில் ஹவாயின் மேற்கேயும் மற்றும் யப்பானில் கிழக்கில் ஆழமற்ற திட்டுக்களில் வசிக்கின்றன. மீன் வளர்ப்பிற்கான மீன்கள் பிடிக்கப்படும் இடங்களில் ஹவாய் முக்கிய இடமாகும். இங்கு மீன்வளத் தொழிலுக்கு 70% வீதமான மஞ்சள் தாங் மீன்கள் கிடைக்கின்றன. மஞ்சள் தாங் மீன்கள் புளோரிடா சூழ உள்ள இடங்களில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அந்த இடங்கள் அவற்றின் பூர்வீகம் இடமாக கருதப்படவில்லை.[2]
மீன் தொட்டிகளில்
[தொகு]மஞ்சள் தாங் மீன்கள் உவர் நீர் மீன் தொட்டிகளில் பொதுவாக வளர்க்கப்படுகின்றன. இவை இயற்கையான இவற்றின் வாழிடங்களில் 20 செ.மீ (8 அங்குலங்கள்) வரையிலும் வளரக் கூடும். மீன் வளர்ப்புத் துறையில் 2 அங்குலம் முதல் 4 அங்குலம் வரையான வரம்பிலும் சில இனங்கள் 6 அங்குலம் நீளத்திலும் வளரும். இயற்கையான வாழிடங்களில் இவற்றின் ஆயுட்காலம் 30 ஆண்டுகளை தாண்டலாம்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Stan & Debbie Hauter (2019). "Learn All About the Yellow Tang Fish". The Spruce Pets (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-28.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help)CS1 maint: numeric names: authors list (link) - ↑ "Field Guide to the Nonindigenous Marine Fishes of Florida".
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help)[தொடர்பிழந்த இணைப்பு] - ↑ Claisse, J., McTee, S., & Parrish, J. (2008). Effects of age, size, and density on natural survival for an important coral reef fishery species, yellow tang, Zebrasoma flavescens. Coral Reefs, 28, 95-105.