மஞ்சர் குந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மஞ்சர் குந்து
Manjhar Kund
மஞ்சர் குந்து is located in பீகார்
மஞ்சர் குந்து
பீகாரில் அமைவிடம்
Map
அமைவிடம்சாசாரம், உரோத்தசு, பீகார், இந்தியா
ஆள்கூறு24°57′N 84°02′E / 24.95°N 84.03°E / 24.95; 84.03
ஏற்றம்110 m (360 அடி)

மஞ்சர் குந்து நீர்வீழ்ச்சி (Manjhar Kund waterfalls) இந்தியாவின் பீகார் மாநிலத்தில் அமைந்திருக்கும் ஒரு நீர்வீழ்ச்சியாகும். மஞ்சர் கே நீர்வீழ்ச்சி என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. ரோத்தாசு மாவட்டத்திலுள்ள தெக்ரி கிராமத்திற்கும் மாவட்டத்தின் தலைநகரமான சாசாராமுக்கும் இடையில் இந்நீர்வீழ்ச்சி இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் மிகச்சிறந்த நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாக மஞ்சர் குந்து நீர்வீழ்ச்சி கருதப்படுகிறது. வரலாற்றுச் சிறப்பு மிக்க சில நினைவிடங்களும் நீர்வீழ்ச்சிக்கு அருகில் உள்ளன.

திருவிழா[தொகு]

ரக்சா பந்தன் திருவிழாவின் போது மஞ்சர் குந்து நீர்வீழ்ச்சி பரபரப்பான சுற்றுலாத்தலமாக உயிர் பெறுகிறது. புனித திருவிழாவாக கருதப்படும் ரக்சா பந்தன் மிகுந்த ஆடம்பரமாகவும், அற்புதமாகவும் கொண்டாடப்படுகிறது. சகோதரிகள் சகோதர்ர்களின் கை மணிக்கட்டில் ராக்கி கயிற்றை கட்டி மகிழ்வதற்கு இந்த இடம் மிகவும் புனிதமானது என்று அம்மக்களால் கருதப்படுகிறது. குடும்பத்தினரிடையே பாரம்பரிய உறவுகளின் முக்கியத்துவம் குறித்த சிறப்புகளைப் பற்றி இத்திருவிழா பேசுகிறது.[1]

போக்குவரத்து வசதி[தொகு]

பீகாரின் தலைநகரான பாட்னாவுக்கு மிக அருகில் மஞ்சர் குந்து நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. சாசாரம்மில் ஓர் இரயில் நிலையம் உள்ளது. என்.எச் 2 என்ற தேசிய பெருநெடுஞ்சாலை இந்த நகரத்தின் வழியாகச் செல்கிறது. தனியார் பேருந்துகள் மற்றும் அரசாங்கத்தால் இயக்கப்படும் பேருந்துகள் மஞ்சர் குந்து கிராமத்திற்குச் செல்கின்றன. சாசாராமிலிருந்து 100 கி.மீ. தொலைவில் வாரணாசியும் 148 கி.மீ. தொலைவில் பாட்னாவும் உள்ளன. அருகிலுள்ள விமான நிலையம் பாட்னாவில் உள்ளது.

கோடை காலத்தில் அதிக வெப்பமும் பருவகாலமும் என்பதால் மார்ச்சு மாதம் இங்கு செல்வதற்கான சிறந்த காலமாகும். நீர்வீழ்ச்சிக்கு அருகில் தங்கும் விடுதிகள் எதுவும் இல்லை, சாசாராம் மற்றும் பாட்னா நகரங்களில்தான் தங்க வேண்டும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Manjhar Kund Sasaram". beautyspotsofindia.com. Archived from the original on 2016-09-27. பார்க்கப்பட்ட நாள் 2016-09-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சர்_குந்து&oldid=3846356" இலிருந்து மீள்விக்கப்பட்டது