உள்ளடக்கத்துக்குச் செல்

மக்கள் தொகைக்கோட்பாடு பற்றிய கட்டுரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மக்கள் தொகைக்கோட்பாடு பற்றிய கட்டுரை (An Essay on the Principle of Population) எனும் நூல் 1798 ம் ஆண்டில் வண பிதா.தோமஸ் ரொபர்ட் மால்தஸினால் எழுதப்பட்டு வெளியிடப்பட்டது.அக்காலகட்டத்தில் மக்கள் தொகை பற்றி ஆராய்ந்து பல நூல்கள் வெளியிடப்பட்டபோதும், மக்கள்தொகைப்பெருக்கமும் அதனால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்த கணிதரீதியான எதிர்வு கூறலினால் இந்நூல் பலரது கவனத்தை பெற்றுக்கொண்டது.

இக் கட்டுரை நூல் பிரித்தானியாவில் மக்கள்தொகைபெருக்கம் குறித்த சர்ச்சைகள் விவாதங்களைக் தோற்றுவித்ததுடன்,மக்கள்தொகைக் கணக்கெடுப்புச் சட்டமும் (Census Act 1800) நிறைவேறுவதற்கு வழிகோலியது.இச்சட்டதின் பயனாக இங்கிலாந்தினில் 1801 ம் ஆண்டு தொடங்கி இன்றுவரை ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுக்கப்பட்டு வருகின்றது.

மக்கள்தொகையின் அளவானது பெருக்கல் விருத்தியின் அடிப்படையினில் (உ+ம்:2,4,8,16,32,64) அதிகரித்துச் செல்லும் போக்கு உடையது அதே சமயம் உணவு உற்பத்தியின் அளவு கூட்டல் விருத்தியின் அடிப்படையில்(உ+ம்:1,2,3,4,5,6) அதிகரிக்கும் தன்மையினை கொண்டது இதன் காரணமாக எதிர்காலத்தில் உணவு பற்றாக்குறை தோன்றும் என்றும் நாட்டினில் பலவிதமான குழப்பங்கள்,வறுமை,போர் போன்ற அழிவுஅபாயங்கள் ஏற்படும் என்ற மால்தஸ் எதிர்வுகூறலே இந் நூலின் அடிப்படைக் கருத்தாகும்.

மால்தசுக்கு எதிரான விவாதங்கள்

[தொகு]
  1. ௧ மால்தஸ் கூறுவதைப் போல மக்கள்தொகை பெருக்கல் விகிதத்திலும் உணவு உற்பத்தி கூட்டல் விகிதத்திலும் அதிகரிக்கின்றன என்பதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை
  2. 2 உலகத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் வாயுடன் மட்டும் பிறப்பதில்லை.உலகில் உணவு மற்றும் பிறவற்றின் உற்பத்தியை அதிகரிப்பதில் தங்களின் பங்கை அளிக்க ஏதுவாக அவை இரண்டு கைகள் மற்றும் கால்களுடன்தான் பிறக்கின்றன

பதிப்பு

[தொகு]

1798ல் வெளியிடப்பட்ட 1ம் பதிப்பினை தொடர்ந்து 1803 1806, 1807, 1817, மற்றும் 1826ல் தொடர்ச்சியாக 6 பதிப்புக்கள்வரை புதிய விபரங்களுடன் வெளியீட்டார்.1830 ம் ஆண்டில் இவ் 6 பதிப்புக்களின் சாரம்சத்தினை தொகுத்து A Summary View on the Principle of Population எனும் நூலாக வெளியீட்டார்.

1834ம் ஆண்டில் மால்தஸ் இறந்தார்.

இவற்றினையும் பர்க்க

[தொகு]

வெளி இணைப்புக்கள்

[தொகு]
  • An Essay on the Principle of Population, 1st edition, 1798. Library of Economics and Liberty. Free online, full-text searchable.(ஆங்கில மொழியில்)
  • An Essay on the Principle of Population, 6th edition, 1826. Library of Economics and Liberty. Free online, full-text searchable. Malthus published a major revision to his first edition—his second edition—in 1803. His 6th edition, published 1826, and revising his various 2nd-5th editions, became his widely-cited 6th and final revision.(ஆங்கில மொழியில்)