மக்களின் துணையோடு மரணத்தை வென்றேன் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மக்களின் துணையோடு மரணத்தை வென்றேன் (நூல்)
ஆசிரியர்(கள்):புலவர் கு.கலியபெருமாள்
வகை:தன்வரலாறு
துறை:வரலாறு
இடம்:பெண்ணாடம் 606105
மொழி:தமிழ்
பக்கங்கள்:168
பதிப்பகர்:செந்தீ பதிப்பகம்
பதிப்பு:முதற் பதிப்பு 2006

மக்களின் துணையோடு மரணத்தை வென்றேன் என்பது தமிழில் வெளிவந்த ஒரு சுயசரிதை நூலாகும். இது தமிழகத்தில் நக்சலைட் இயக்கத்தை நிறுவியவர்களில் ஒருவரான புலவர் கலிய பெருமாள் எழுதிய சுயசரிதை நூலாகும்.

நூல்பற்றி[தொகு]

இந்நூலின் அணிந்துரையில் கோவை ஈஸ்வரனின் சில வரிகள்:
"சாவுக்கஞ்சாது பல சாகசங்கள் புரிந்த மாவீரனின் வரலாறு ஒரு புரட்சிகர நெடும்பயணமாகும். தனது வியத்தகு வாழ்வியல் அனுபவங்களை அவர் இந்த நூலில் பதிவு செய்துள்ளார். அவர்பட்ட பாடுகளை, அனுபவித்த துன்பங்களை வரலாற்றின் இரத்த வரிகளாக நாம் காணும்போது நமது விழிகள் கோபத்தால் சிவக்கின்றன. கண்ணீரால் குளமாகின்றன. சில நேரங்களில் இப்படிபட்ட வீர வாழ்வா என வியப்பில் நம் விழி புருவங்கள் உயர்கின்றன."

உசாத்துணை[தொகு]

மக்களின் துணையோடு மரணத்தை வென்றேன், புலவர் கலிய பெருமாள், முதல் பதிப்பு 2006, செந்தீ பதிப்பகம், 80,முதன்மைச் சாலை, பெண்ணாடம்-606105, திட்டக்குடி வட்டம், கடலூர் மாவட்டம்.