மகோபாவின் உதால்
உதால் (Udal) என்பது உத்தரப் பிரதேசத்தில் சொல்லப்படும் அல்கா-காண்ட் என்ற காவியத்தில் வரும் 12 ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற தளபதியின் பெயராகும்.[1] காவியத்தில், உதாலும் இவரது சகோதரர் அல்காவும் மகோபாவின் சந்தேல மன்னன் பரமார்த்தி தேவனின் இராணுவத்தில் பணியாற்றுகின்றனர். இவர்கள் இராஜ்புத் மற்றும் அகிர் வம்சாவளியைச் சேர்ந்த பனாபர் குலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் பல்வேறு போர்களை நிகழ்த்தினர்.[2][3]
காவியத்தின்படி, உதால் ஒரு தளபதியாக இருந்த தனது தந்தை தாஸ்ராஜ் இறந்த பிறகு பிறந்தார். மேலும் அவர் பரமார்த்தி மன்னர் நடத்திய போரில் பங்கு கொண்டு கொல்லப்பட்டார். மன்னன் அதைத் தொடர்ந்து உதாலை தனது சொந்த மகனாக வளர்த்தான்.[4] மகோபாவில் நடந்த ஒரு பெரிய போரில் இராசபுத்திர மன்னன் பிருத்திவிராச் சௌகானின் படையுடன் போரிடும் போது உதால் எப்படி கொல்லப்பட்டான் என்பதை காவியம் விவரிக்கிறது; மதன்பூரில் உள்ள கல்வெட்டுகள் மூலம் இதனை அறிய முடிகிறது. மேலும் கி.பி.1182-1183 ஆம் ஆண்டு ஒரு கட்டத்தில் இது நடந்திருக்கலாம்.[5]
இவர்களின் பெயரில் நகரத்தில் சந்தைகள் உள்ளன. பல கோயில்கள் மற்றும் கட்டிடங்கள் இருவரும் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Schomer, Karine (1990). "The "Ālhā" Epic in Contemporary Performance". The World of Music 32 (2): 58–80. http://www.jstor.org/stable/43561259..
- ↑ Hiltebeitel, Alf (2009). Rethinking India's Oral and Classical Epics: Draupadi among Rajputs, Muslims, and Dalits. University of Chicago Press. p. 163. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-226-34050-0.
Ūdal (and the rest of the Banāphars) is susceptible to "mean caste" slurs and slights because of his combined Kṣatriya (Rajput) and cowherd (Ahir) background.
- ↑ Crowley, Thomas (7 September 2020). Fractured Forest, Quartzite City: A History of Delhi and its Ridge. p. 277. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789353885564.
The Banaphars also identify themselves as Rajputs. Throughout this epic, though, they have various caste slurs hurled at them by higher-status Rajputs who claim that the Banaphar line is contaminated with the blood of Ahirs, a nomadic pastoral community.
- ↑ Mishra, Pt. Lalita Prasad (2007). Alhakhand (in Hindi) (15 ed.). Lucknow (India): Tejkumar Book Depot (Pvt) Ltd. pp. 1–11 (History of Mahoba).
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Mitra, Sisir Kumar (1977). The Early Rulers of Khajurāho. Motilal Banarsidass. p. 123. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788120819979.