உள்ளடக்கத்துக்குச் செல்

மகோபா

ஆள்கூறுகள்: 25°16′48″N 79°52′22″E / 25.28°N 79.872885°E / 25.28; 79.872885
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகோபா
நகரம்
இடிபாடுகளுடன் காணப்படும் சூரியக்கோயில், மகோபா
இடிபாடுகளுடன் காணப்படும் சூரியக்கோயில், மகோபா
மகோபா is located in உத்தரப் பிரதேசம்
மகோபா
மகோபா
உத்தரப் பிரதேசத்தில் மகோபாவின் அமைவிடம்
மகோபா is located in இந்தியா
மகோபா
மகோபா
மகோபா (இந்தியா)
ஆள்கூறுகள்: 25°16′48″N 79°52′22″E / 25.28°N 79.872885°E / 25.28; 79.872885
நாடு இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்மகோபா
அரசு
 • மாவட்ட ஆட்சித் தலைவர்மனோஜ் குமார் சௌகான்
ஏற்றம்
214 m (702 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்95,216
மொழி
 • அலுவல் மொழிஇந்தி[1]
 • கூடுதல் அலுவல் மொழிஉருது[1]
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
210 427
தொலைபேசி இணைப்புக் குறியீடு91-5281
பாலின விகிதம்922 /
கல்வியறிவு76.91%[2]
இணையதளம்www.mahoba.nic.in

மகோபா (Mahoba) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் மகோபா மாவட்டத்திலுள்ள ஒரு நகரமாகும்.[3] புந்தேல்கண்ட் பிராந்தியத்தில், கூர்ஜர-பிரதிகார பாணியில் கட்டப்பட்ட ஒன்பதாம் நூற்றாண்டு சூரியக் கோயிலுக்கு இந்நகரம் நன்கு அறியப்பட்டதாகும். இது கோகர் மலையில் உள்ள 24 பாறைகளால் வெட்டப்பட்ட சைனத் தீர்த்தங்கரர் சிலைக்கும் நன்கு அறியப்பட்ட இடமாகும்.[4] மகோபா கஜுராஹோ, இலவகுசா நகர் மற்றும் குல்பகார், சரகாரி, கலிஞ்சர் கோட்டை, ஓர்ச்சா மற்றும் ஜான்சி போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கு அதன் நெருக்கத்திற்காக அறியப்படுகிறது . இந்த நகரம் இருப்புப்பாதைப் போக்குவரத்து மற்றும் மாநில நெடுஞ்சாலைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.

மக்கள்தொகை

[தொகு]

2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, மகோபாவில் 95,216 மக்கள் இருப்பதாக கூறுகிறது. இதன் சராசரி கல்வியறிவு விகிதம் 74.91% ஆகும். இது மாநில சராசரியான 67.68% ஐ விட அதிகமாக உள்ளது: ஆண்களின் கல்வியறிவு 82.03% எனவும் பெண்களின் கல்வியறிவு 66.88% எனவும் உள்ளது. மக்கள் தொகையில் 12.68% 6 வயதுக்குட்பட்டவர்கள்.

மகோபாவின் மொத்த மக்கள் தொகையில் 14.93% மற்றும் 0.42% பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினத்தவரும்) உள்ளனர். மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மொத்த மக்கள் தொகையில் 75.21% இந்துக்கள், 23.64% முஸ்லிம்கள் மற்றும் மீதமுள்ளவர்கள் பிற மதத்தினராக அறியப்படுகிறார்கள்.[5]

குறிப்பிடத்தக்கவர்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "52nd Report of the Commissioner for Linguistic Minorities in India" (PDF). nclm.nic.in. சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம். Archived from the original (PDF) on 25 May 2017. பார்க்கப்பட்ட நாள் 17 March 2019.
  2. "Mahoba Religion Data 2011". Census 2011 - Census of India.
  3. "Mahoba Population Census 2011". Census 2011 - Census of India.
  4. UP Tourism, ப. 193.
  5. "Mahoba Population Census 2011". Census 2011 - Census of India.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகோபா&oldid=3816576" இலிருந்து மீள்விக்கப்பட்டது