மகேசு காலே
மகேசு காலே | |
---|---|
![]() | |
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | மகேசு காலே |
பிறப்பு | 12 சனவரி 1976 புனே, மகாராட்டிரம், இந்தியா |
பிறப்பிடம் | புனே, மகாராட்டிரம், இந்தியா |
இசை வடிவங்கள் | இந்திய பாரம்பரிய இசை, இந்துஸ்தானி இசை, அரை-பாரம்பரிய இசை, பக்தி பாடல்கள், சங்கீத நாடகம் |
தொழில்(கள்) | பாடகர், கலைஞர், இசை ஆசிரியர் |
மகேசு காலே (Mahesh Kale) (பிறப்பு 12 சனவரி 1976) இந்திய பாரம்பரிய இசைப் பாடகராவார். இந்துஸ்தானி இசை, அரைப் பாரம்பரியம், பக்தி பாடல்கள், சங்கீத நாடகம் போன்றவற்றில் தனது நிபுணத்துவத்திற்கு புகழ்பெற்றவர். கத்யார் கல்ஜாத் குஸ்லி என்ற படத்தில் பாடியதற்காக, சிறந்த ஆண் பின்னணி பாடகராக 63 வது தேசியத் திரைப்பட விருதை வென்ற இவர், புதிய தலைமுறையின் இந்தியப் பாரம்பரிய இசையின் முகமாக தன்னை உறுதியாக நிலைநிறுத்திக் கொண்டார். இவர் பண்டிட் சிதேந்திர அபிசேகியின் சீடராவார்.
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் பின்னணி
[தொகு]இவர், இந்தியாவின் மகாராட்டிராவின் புனேவில் ஒரு இசைக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார். இவர் தனது ஆரம்பகால இசைக் கல்வியை தனது தாயார் திருமதி. மீனாள் காலேவிடம் பெற்றார். இந்திய பாரம்பரிய இசையில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர் வீணா சகசுரபுத்தேவிடம் சீடராக இருந்தார்.
தனது 3வது வயதில் பிரம்மா சைதன்யா கோண்டவாலேகர் மகாராஜின் சமாதியில் (சன்னதி) தனது முதல் தனி நிகழ்ச்சியை வழங்கினார். பின்னர், புருசோத்தம் கங்குர்தேவிடம் கற்றுக்கொண்டார். புகழ்பெற்ற பண்டிட் சிதேந்திர அபிசேக்கியின் சீடராக 1991 இல் சேர்ந்தார். குருகுலம் போன்ற அமைப்பில் அவரது பயிற்சியின் கீழ், இவர் 8 ஆண்டுகளுக்கும் மேலாக தும்ரி, தாத்ரா, தப்பா, பஜனைகள் மற்றும் மராத்தி நாட்டிய சங்கீதம் ஆகியவற்றில் விரிவாக பயிற்சி பெற்றார். இந்தியா முழுவதிலும் உள்ள மதிப்புமிக்க இசை நிகழ்ச்சிகளில் தனது குருவுடன் சென்று கலந்து கொண்டார்.
புனே, சாவித்ரிபாய் புலே பல்கலைக்கழகத்துடன் இணைந்த விசுவகர்மா தொழில்நுட்பக் கழகத்தில் மின்னணுவியலில் இளங்கலை பொறியியல் பட்டமும், அமெரிக்காவின் சாண்டா கிலாரா பல்கலைக்கழகத்தில் பொறியியல் நிர்வாகத்தில் முதுகலை பட்டமும் பெற்றார். இவர் பூர்வா குஜார் என்பவரை 2005இல் மணந்தார். மேலும் இவர்கள் சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில் இலாப நோக்கற்ற இந்திய பாரம்பரிய இசை மற்றும் கலை அறக்கட்டளையை] நடத்துகின்றனர். [1]
விருதுகள்
[தொகு]- 63 வது தேசிய திரைப்பட விருதுகள் 2015 இல் கதார் கல்ஜத் குசாலி படத்திற்காக "சிறந்த ஆண் பின்னணி பாடகருக்கான தேசிய திரைப்பட விருது" [2]
- ஏபிபி மஜா 2016 வழங்கிய "மஜா சன்மான் விருது" [3]
- "இந்தியாவின் பெருமை விருது" 2016
- ஸ்டார் பிரவா 2016 வழங்கிய "பிரவா ரத்னா" விருது
- "சமசுகிருதி கலாதர்பன் விருது" - சிறந்த பாடகர் 2016
- "மானிக் வர்மா புரஸ்கார்" - 2016
- "ரேடியோ மிர்ச்சி இசை விருது" - சிறந்த பாடல் 2016
- "ரேடியோ மிர்ச்சி இசை விருது" - சிறந்த வரவிருக்கும் பாடகர் (ஆண்) 2016
- "ரேடியோ மிர்ச்சி இசை விருது" - சிறந்த ஆல்பம் கத்யார் கல்ஜாத் குசாலி 2016
- "ஜீ சினி கௌரவ் புரஸ்கார்" - சிறப்பு நடுவர் விருது 2016
- கதியர் கல்ஜாத் குசாலி (2015) திரைப்படத்தில் நடித்ததற்காக அகில் பாரதிய மராத்தி நாட்டிய பரிசத் விருது
- இந்தியா சமூக மையத்தின் "ஐ.சி.சி இன்ஸ்பயர் விருது" சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதி (2019)
குறிப்புகள்
[தொகு]- ↑ http://www.icmafoundation.org/
- ↑ "Vocalist Mahesh Kale brings National Award to Pune". 29 March 2016. பார்க்கப்பட்ட நாள் 23 July 2016.
- ↑ "MSP". majhasanmanpuraskar.abpmajha.in. Archived from the original on 11 ஜூலை 2016. பார்க்கப்பட்ட நாள் 23 July 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)
வெளி இணைப்புகள்
[தொகு]- Official website
- In Conversation With Mahesh Kale, Lokvani
- अमेरिकेत संगीत रूजविणारा मराठी तरूण कलावंत महेश काळे, Global Marathi
- Let passion be your driving force, Times of India
- Time-Trip Through Indian Classical Music, San Francisco Classical Voice
- Mahesh Kale with Singapore Events பரணிடப்பட்டது 2013-11-09 at the வந்தவழி இயந்திரம்
- वसंतरावांच्या सुरील्या कट्यारीला नाविन्याची धार, Sakal
- Sawai Gandharva Music Festival featuring Mahesh Kale பரணிடப்பட்டது 2017-11-09 at the வந்தவழி இயந்திரம்
- Song of the Divine, Stanford University பரணிடப்பட்டது 2016-03-10 at the வந்தவழி இயந்திரம்
- Artist in Profile – Mahesh Kale, Harvard Sangeet
- Story of Indian Classical Music by Mahesh Kale at Commonwealth Club, San Francisco
- INKTalks featuring Mahesh Kale