மகூதி ஜெயின் கோயில்
மகூதி ஜெயின் கோயில் | |
---|---|
மகூதி ஜெயின் கோயில் தெரு | |
அடிப்படைத் தகவல்கள் | |
புவியியல் ஆள்கூறுகள் | 23°29′36″N 72°47′00″E / 23.49333°N 72.78333°E |
சமயம் | சைனம் |
இணையத் தளம் | mahuditemple |
குஜராத் காந்திநகர் மாவட்டத்தின் மன்சா தாலுகாவில் உள்ள மஹுதி நகரில் மகூதி ஜெயின் கோயில் (Mahudi Jain Temple) அமைந்துள்ளது. இது சமண தெய்வமான காந்தகர்ண மகாவீர் மற்றும் பத்மாபிரபு சமண கோயில் ஆகியவற்றிற்கு வருகை தரும் சமணர்கள் மற்றும் பிற சமூகங்களின் புனித யாத்திரை மையமாகும். இது வரலாற்று ரீதியாக மதுபுரி என்று அழைக்கப்பட்டது.[1]
வரலாறு
[தொகு]மகூதி ஜெயின் கோயில் கிபி 1917 இல் புத்திஸகரசுரி என்ற சமணத் துறவியால் நிறுவப்பட்டது (மகசர் சுதி 6, விக்ரம் சம்வாத் 1974). இது குறித்து பிராமி எழுத்து ஒரு கல்வெட்டு உள்ளது. 1916ஆம் ஆண்டில், வதிலால் காளிதாஸ் வோரா நன்கொடை அளித்த நிலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. புனம்சந்த் லல்லுபாய் ஷா, காங்குச்சந்த் நரசிதாஸ் மேத்தா மற்றும் ஹிம்மதலால் ஹக்கம்சந்த் மேத்தா ஆகியோருடன் சேர்ந்து கோயிலை நிர்வகிக்க நிறுவப்பட்ட அறக்கட்டளையின் அறங்காவலர்களாக ஆனார். இந்தக் கோயிலின் மைய தெய்வம் 22 அங்குல பளிங்கு சிலை பத்மபிரபா ஆகும். காப்பாளர் தெய்வமான காந்தகர்ண மகாவீருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தனி ஆலயம் உள்ளது. புத்திசகரசுரி கோயிலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட குரு மந்திர் பின்னர் நிறுவப்பட்டது.
கலாச்சாரம்
[தொகு]பக்தர்கள் கந்தகர்ண மகாவீருக்கு சுகாத்தா என்ற இனிப்பை வழங்குகிறார்கள். பிரசாதம் படைக்கப்பட்ட பிறகு, கோயில் வளாகத்திற்குள்ளேயே பக்தர்களால் எடுத்துக்கொள்ளப்படுகிறது. இத்தகைய காணிக்கைகளை வளாகத்திற்கு வெளியே எடுத்துச் செல்வதை பாரம்பரியம் தடை செய்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் காளி சௌதாஸ் அன்று (அசோ மாதத்தின் இருண்ட பாதியின் பதினான்காம் நாள்) ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஹவான் என்ற மத விழாவில் கலந்து கொள்ள கோயிலுக்கு வருகிறார்கள்.
படக்காட்சியகம்
[தொகு]-
சமணக் கோவிலில் பத்மபிரபா
-
காந்தகர்ண மகாவீரர்
-
கோயிலுக்கான இடத்தை நன்கொடையாக வழங்கிய வதிலால் காளிதாஸ்
-
காந்தகர்ண மகாவீரருக்குப் படைக்கப்படும் சுக்தி என்றழைக்கப்படும் இனிப்பு
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Dave, Pranav (2013-11-02). "Kali Chaudas havan revered by all faiths". The Times of India (Ahmedabad: timesofindia.com). https://timesofindia.indiatimes.com/city/ahmedabad/Kali-Chaudas-havan-revered-by-all-faiths/articleshow/25078317.cms.