உள்ளடக்கத்துக்குச் செல்

மகியோலே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அவாய் இறகுத் தொப்பி
Man Wearing Feather Cloak and Helmit (sic) attributed to Rembrandt Peale.[1]
செய்பொருள்இறகுகளும் தாவர நார்களும்
உருவாக்கம்18ம் நூற்றாண்டு
தற்போதைய இடம்இலண்டன் பிரித்தானிய அருங்காட்சியகம் உள்ளிட்ட பல அருங்காட்சியகங்கள்

அவாய் மொழியில் மகியோலே எனப்படும்[2] அவாய் இறகுத் தொப்பி, இறகு ஆடையுடன் அணியப்படுகிறது. உயர் தகுதியின் குறியீடான இது அவாயின் தலைமை வகுப்பினருருள் ஆண்களுக்கு உரியது.[3] உலகம் முழுவதிலும் காணப்படும் அருங்காட்சியகங்களில் இத்தொப்பிகள் காணப்படுகின்றன. கப்டன் குக்கின் பயணங்களின்போது குறைந்தது பதினாறு இதுபோன்ற தொப்பிகள் சேகரிக்கப்பட்டன.[4] இத்தொப்பிகள் பறவை இறகுகளால் அலங்கரிக்கப்பட்ட பின்னல் சட்டக அமைப்பிலிருந்து உருவாக்கப்படுகின்றன. இவை சிறந்த இறகுவேலைக்கான எடுத்துக்காட்டுக்களாக உள்ளன. யொகான் சொபானி என்பவர் வரைந்த கப்டன் யோன் குக்கின் இறப்பு என்னும் ஓவியத்தில் இவ்வாறான ஒரு தொப்பியும் உள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Spoked Feathered Helmet, British Museum, accessed September 2010
  2. Mary Kawena Pukui and Samuel Hoyt Elbert (2003). "lookup of mahiole". IN: Hawaiian Dictionary. Ulukau, the Hawaiian Electronic Library, University of Hawaii Press.
  3. Mary Kawena Pukui and Samuel Hoyt Elbert (2003). "lookup of aliʻi ". IN: Hawaiian Dictionary. Ulukau, the Hawaiian Electronic Library, University of Hawaii Press.
  4. To attempt some new discoveries in that vast unknown tract பரணிடப்பட்டது 2011-06-11 at the வந்தவழி இயந்திரம், Adrienne Kaeppler, Smithsonian Museum of Natural History, Washington DC Cook’s Pacific Encounters symposium, National Museum of Australia, 28 July 2006

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகியோலே&oldid=3590513" இலிருந்து மீள்விக்கப்பட்டது