மகாமகக்குளக் கோயில்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காசிவிஸ்வநாதர் கோயில் கோபுரத்திற்கு எதிரில் பிரம்மதீர்த்தேஸ்வரர், முகுந்தேஸ்வரர் மண்டபங்கள்

மகாமகக்குளக் கோயில்கள் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள மகாமகக்குளத்தைச் சுற்றி அமைந்துள்ள கோயில்களாகும்.

வரலாறு[தொகு]

மகாமகக்குள மண்டபங்கள் அனைத்தும் விஜயரகுநாத மன்னர் அளித்த சோடச மகாதானத்தின் வாயிலாகக் கட்டப்பட்டன. இப்பணியை முன்னின்று நடத்தியவர் அவருடைய மந்திரியான கோவிந்த தீட்சிதர் ஆவார். சோடசம் என்பது 16ஐக் குறிக்கும்.

16 கோயில்கள்[தொகு]

Thulabaramandapam1.jpg
Thulabaramandapam2.jpg
முகுந்தேஸ்வரர் மண்டப சிற்ப வேலைப்பாடு

இக்குளக்கரையில் 16 வகையான தானங்களை வலியுறுத்தும் வகையில் 16 கோயில்கள் (மண்டபங்கள்) காணப்படுகின்றன. ஒவ்வொரு கோயிலிலும் பிரம்மதீர்த்தேஸ்வரர், முகுந்தேஸ்வரர், தானேஸ்வரர், இடபேஸ்வரர், பாணேஸ்வரர், கோணேஸ்வரர், பக்திகேஸ்வரர், பைரவேஸ்வரர், அகஸ்தீஸ்வரர், வியாசகேஸ்வரர், உமாபகேஸ்வரர், நிருதீஸ்வரர், பிரம்மேஸ்வரர், கங்காதேஸ்வரர், முக்தேஸ்வரர், ஷேத்ரபாலேஸ்வரர் என மொத்தம் 16 வகையான சிவலிங்கங்கள் குளத்தைச் சுற்றி அமைந்துள்ள மண்படங்களில் காணப்படுகின்றன. [1] இந்த குளத்தின் நடுவே அமைந்துள்ள தீர்த்தக் கிணறுகள் புனிதத்தன்மை வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன. முகுந்தேஸ்வரர் மண்டபத்தில் சிற்ப வேலைப்பாடுகள் அதிகமாக காணப்படுகின்றன.

திசைகள்[தொகு]

குளத்தைச் சுற்றிலும் கீழ்க்கண்ட திசையில் கோயில்களும், மண்டபங்களும் அமைந்துள்ளன. இவற்றில் எட்டுக் கோயில்கள் கிழக்கு மேற்காகவும், நான்கு கோயில்கள் தெற்கு வடக்காகவும், இரண்டு கோயில்கள் தென்மேற்கு வடகிழக்காகவும், வடகிழக்கு தென்மேற்கு, தென்கிழக்கு வடமேற்கு நோக்கி முறையே ஒன்றொன்றாகவும் அமைந்துள்ளன. தெற்கு நோக்கிய நிலையில் கோயில் அமைக்கப்படவில்லை. [2]

கோயில்கள் மண்டபங்கள்
தென்மேற்கு வடகிழக்கு
கிழக்கு மேற்கு
கிழக்கு மேற்கு
கிழக்கு மேற்கு
தெற்கு வடக்கு
வடகிழக்கு தென்மேற்கு
கிழக்கு மேற்கு
கிழக்கு மேற்கு
தென்கிழக்கு வடமேற்கு
தெற்கு வடக்கு
தெற்கு வடக்கு
தெற்கு வடக்கு
தென்மேற்கு வடகிழக்கு
கிழக்கு மேற்கு
கிழக்கு மேற்கு
கிழக்கு மேற்கு

சோடச மகாலிங்க சுவாமிகள்[தொகு]

குளத்தைச் சுற்றி அமைந்துள்ள கோயில்களில் உள்ள லிங்கங்களை ஒன்றாகச் சேர்த்து சோடசமகாலிங்க சுவாமிகள் என்பர். இவை காசி விஸ்வநாதர் கோயிலின் பராமரிப்பில் உள்ளன.

குடமுழுக்கு[தொகு]

இதன் திருப்பணிக்கான பாலாலயம் காசி விஸ்வநாதர்கோயில் வளாகத்தில் 11 பிப்ரவரி 2015இல் நடைபெற்றது. [3] குடமுழுக்கிற்கான ஆயத்தமாக பந்தக்கால் முகூர்த்தம் 18 நவம்பர் 2015இல் நடைபெற்றது. [4] இக்கோயில்களின் குடமுழுக்கு 29 நவம்பர் 2015இல் நடைபெற்றது. [5]

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

மகாமகக்குளத்தைச் சுற்றியுள்ள சோடச (16) மண்டபங்கள்[தொகு]