மகாகவி பாரதியார் நினைவு அருங்காட்சியகம் ஆய்வுமையம், புதுச்சேரி
மகாகவி பாரதியார் நினைவு அருங்காட்சியகம் ஆய்வுமையம் என்பது இந்தியாவின் புதுச்சேரி ஈஸ்வரன் கோயில் தெருவில் பாரதியார் ஏறக்குறைய பத்து ஆண்டுகள் வாழ்ந்த இல்லமாகும்.
வரலாறு
[தொகு]இந்திய விடுதலைப் போராட்டத்தின்போது, பாரதியார் ஆங்கிலேயரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்ப பிரான்சின் வசமிருந்த புதுச்சேரிக்கு வந்து 1908 இல் இருந்து 1910 வரை இந்த வீட்டில் வசித்தார். இங்கிருந்துதான் குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு உள்ளிட்ட பல படைப்புகளை அவர் தந்தார்.
புதுப்பிப்பு
[தொகு]மிகப் பழமையான இந்த இல்லம் பராமரிப்புப் பணிகளுக்காக 2009 இல் தற்காலிகமாக மூடப்பட்டது. புனரமைப்புப் பணிகள் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக முற்றுப் பெறாமல் இருந்த நிலையில் 2016 இல் பணிகள் முடிக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது. இந்த வீடு சுண்ணாம்புக் காரைக் கொண்டும், மெட்ராஸ் டைல்ஸ் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களைக் கொண்டும் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இல்லத்தின் முகப்புத் தோற்றம் பிரெஞ்சு கட்டிடக் கலையைப் பிரதிபலிப்பது போல் இருந்தாலும் உள்புறத்தில் தமிழர் மரபுப்படி நடை, முற்றம், அறைகள், முதல் தளம் ஆகியவை உள்ளன.
நினைவு இல்லமாக
[தொகு]இந்த வீட்டை புதுச்சேரி அரசு மகாகவி பாரதியார் நினைவு ஆருங்காட்சியகம் ஆய்வுமையம் என்ற பெயரில் பராமரித்து வருகிறது. இங்கே, ஆயிரக் கணக்கில் பாரதியின் கையெழுத்துப்பிரதி படைப்புகளும், அவர் பயன்படுத்திய பெஞ்ச் உள்ளிட்ட பொருட்களும் அரிய பொருட்களாக பாதுகாக்கப்படுகின்றன. பாரதியாரின் அபூர்வமான ஒளிப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இங்கு ஒரு சிறப்பு நூலகமும் உள்ளது. இங்கு பாரதியின் கையெழுத்துப் பிரதி படைப்புகள் உள்பட சுமார் 3,000 நூல்கள் இல்லத்தின் தரைத்தளத்தில் உள்ளன. இதர சுமார் 17 ஆயிரம் நூல்கள் முதல் தளத்தில் வைக்கப்பட்டுள்ளன. [1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ செ.ஞானபிரகாஷ் (9 செப்டம்பர் 2017). "இது பாரதி அமர்ந்த பெஞ்ச்.. '- சிலாகிப்பு தரும் புதுச்சேரி பாரதி இல்லம்!". கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 9 செப்டம்பர் 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)