போர்ச்சுக்கல் காட்டுத்தீ 2017
போர்ச்சுக்கல் காட்டுத்தீ 2017 | |
---|---|
சூன் 18 அன்று போர்த்துக்கல் காட்டுத்தீ மற்றும் தொடர்புடைய புகைப்பகுதிகளை காட்டும் நாசாவின் செயற்கைக்கோள் படம். | |
அமைவிடம் | போர்த்துகல், லிரியா மாவட்டம், பெட்ரோகா கிராண்டே |
Coordinates | 39°57′N 8°14′W / 39.950°N 8.233°W |
புள்ளிவிவரங்கள் | |
மொத்தத் தீ | மொத்தம் 156 total, 11 நிகழ்நிலை |
நாள்(கள்) | 17 சூன் 2017 – தொடர்வு |
காரணம் | உலர் இடியுடன் கூடிய மழை |
காயங்கள் | 135 (உறுதியாக) (7 ஆபத்தான நிலை)[1] |
உயிரிழப்புகள் | 62 (உறுதியாக) |
போர்ச்சுக்கல் காட்டுத்தீ 2017 (2017 Portugal wildfires) என்ற நிகழ்வு 2017 சூன் 17-18 இரவு நடு போர்ச்சுக்கல்லில் ஏற்பட்ட காட்டுத்தீ ஆகும். இவ்விபத்தில் குறைந்தது 62 பேர் இறந்து, 62 பேர் காயம் அடைந்தனர்.[1][2] பெடரோகோ கிராண்டேவில் பெரும் எண்ணிக்கையிலான இறப்புக்கள் நிகழ்ந்தன, காட்டுவழியே சாலையில் மகிழுந்துகளில் சென்றவர்கள் தீ விபத்தில் சிக்கிக்கொண்டனர். போர்த்துகீசிய அதிகாரிகளும் 1,700 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும் காட்டுத்தீயை எதிர்த்துப் போராடினர்; ஜூன் 18 முதல் மூன்று நாட்களைத் தேசிய துக்கநாட்களாக பிரதமர் அன்டோனியோ கோஸ்டா அறிவித்தார்.
பின்னணி
[தொகு]காட்டுத்தீ உருவாகும் முன்பு, போர்ச்சுக்கலின் பல பகுதிகளில் கடும் வெப்பஅலை வீசய காரணத்தால் மிகுதியான வெப்ப நிலை நிலவியது (40 °C (104 °F)).[3] ஜூன் 17-18 இரவின் போது, லிஸ்பனின் வட-வடகிழக்கில் 200 கிலோமீட்டர் (120 மைல்) மலைப்பகுதியின் பல இடங்களில் 156 தீ விபத்துகள் ஏற்பட்டன.[4] மிகவும் அதிகமாகப் பரவுவதற்கு முன்னர் தீயானது தீபகாரோ கிராண்டி நகராட்சி பகுதியில் தோன்றியது.[5] இந்நிகழ்விற்கு முன்னர் ஏற்பட்ட உலர் இடி நிகழ்வினால் தீப்பிடித்திருக்கலாம்:[6] காவல் துறை தேசிய ஆணையர் அல்மேடா ரோட்ரிக்ஸ் தலைமையிலான காவல்துறையினரும், தேசிய குடியரசுக் காவலரும் சேர்ந்து, மின்னல் தாக்கித் தீ தொடங்கிய மரத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.[7]
நிகழ்வுகள்
[தொகு]தீவிபத்தில் நாடு முழுவதும் குறைந்தபட்சம் 62 பேர் உயிரிழந்தனர் [8][3] - போர்ச்சுகலின் வரலாற்றில் காட்டுத்தீயின் காரணமாக மிகுதியானவர்கள் இறந்த நிகழ்வு இதுவேயாகும். [9][10] எட்டு தீயணைப்பு வீரர்கள் உட்பட 54 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்; [11] நான்கு தீயணைப்பு வீரர்களும், ஒரு குழந்தையும்-மோசமான நிலையில் உள்ளனர். [5] இரண்டு தீயணைப்பு வீரர்கள் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டது. [3] பெடரோகோ கிராண்டே கிராமப்புற சாலையில் வாகனங்களுக்குள் அல்லது வாகனங்களுக்கருகிலுமாக, 47 பேர் இத்தீயில் சிக்கி உயிரிழந்தனர். இவர்களுள் 30 பேர் தங்கள் வாகனங்களுக்குள் சிக்கியும், மீதம் 17 பேர் தப்பித்து ஓடும்போதும் தீயில் சிக்கி மாண்டனர். மற்றோரு நிகழ்வாக ஐசி 8 நெடுஞ்சாலைக்கு அருகே நோடிரினோஹோவில் 11 பேர் இறந்தனர். [3] நெடுஞ்சாலை அருகே உள்ள ஒரு பெரிய நீர் தொட்டியில் இறங்கியதால் மோவோ கிராண்டிற்கு அருகில் பன்னிரண்டு பேர் தப்பிப்ன்பிழைத்தனர். [12] டசன் கணக்கான சிறு சமூகங்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். [13][14][15]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Público (19 June 2017). "Ao minuto: Situação em Pedrógão ainda é "preocupante", diz Protecção Civil. Número de mortos mantém-se em 62" (in Portuguese). Público. https://www.publico.pt/sociedade/noticia/ao-minuto-o-que-se-passou-para-morrerem-19-pessoas-num-incendio-1776047. பார்த்த நாள்: 19 June 2017.
- ↑ BBC News (19 June 2017). "Portugal forest fires kill 62 near Coimbra". BBC News. http://www.bbc.com/news/world-europe-40316934. பார்த்த நாள்: 19 June 2017.
- ↑ 3.0 3.1 3.2 3.3 "Portugal forest fires kill 61 near Coimbra". BBC. 18 June 2017. http://www.bbc.com/news/world-europe-40316934. பார்த்த நாள்: 18 June 2017.
- ↑ "Portugal forest fires: three days of mourning for 61 victims". BBC. 18 June 2017. http://www.bbc.com/news/world-europe-40320411. பார்த்த நாள்: 18 June 2017.
- ↑ 5.0 5.1 Jones, Sam (18 June 2017). "Huge forest fires in Portugal kill more than 60 people". The Guardian. https://www.theguardian.com/world/2017/jun/18/portugal-more-than-20-people-killed-in-forest-fires. பார்த்த நாள்: 18 June 2017.
- ↑ "Portugal: Staatstrauer wegen verheerenden Waldbrands [Portugal: state-run because of devastating forest fires]" (in de-DE). Die Zeit. 2017-06-18. பன்னாட்டுத் தர தொடர் எண்:0044-2070. http://www.zeit.de/gesellschaft/zeitgeschehen/2017-06/portugal-waldbrand-opfer-blitzschlag-feuer. பார்த்த நாள்: 2017-06-18.
- ↑ "Polícia Judiciária afasta origem criminosa de incêndio. Um raio atingiu uma árvore" (in pt). Visão (Sapo). 18 June 2017. http://visao.sapo.pt/actualidade/portugal/2017-06-18-Policia-Judiciaria-afasta-origem-criminosa-de-incendio.-Um-raio-atingiu-uma-arvore. பார்த்த நாள்: 18 June 2017.
- ↑ "The Latest: Portugal raises death toll back to 62". The Miami Herald. The Associated Press. பார்க்கப்பட்ட நாள் 19 June 2017.
- ↑ Phippen, Weston. "A Deadly Forest Fire in Portugal". The Atlantic. பார்க்கப்பட்ட நாள் 18 June 2017.
- ↑ "Portugal forest fires kill 57 near Coimbra". BBC. 18 June 2017. http://www.bbc.co.uk/news/world-europe-40316934.
- ↑ Jones, Julia; Chavez, Nicole; Narayan, Chandrika (18 June 2017). "Portugal fire victims burned in cars as they fled; 61 killed". CNN. பார்க்கப்பட்ட நாள் 18 June 2017.
- ↑ "Portugal forest fire: 12 survive by hiding in a water tank". BBC. 19 June 2017. http://www.bbc.com/news/world-europe-40324006. பார்த்த நாள்: 19 June 2017.
- ↑ "Incêndio em Pedrógão ao minuto: Número de mortos aumenta para 57. Trovoadas secas na origem do fogo" [Fire at Pedrogão grande by the minute: number of deaths rises to 57. Dry lightning at the fire origin]. Público (in போர்ச்சுகீஸ்). 17 June 2017. பார்க்கப்பட்ட நாள் 18 June 2017.
- ↑ "Pelo menos 57 pessoas morrem no incêndio em Pedrógão Grande" [Até least 57 deaths at the fire in Pedrógão grande]. Observador (in போர்ச்சுகீஸ்). 17 June 2017. பார்க்கப்பட்ட நாள் 18 June 2017.
- ↑ "57 mortos no incêndio em Pedrógão Grande" [57 dead in the Pedrógão Grande fire]. Diário de Notícias (in போர்ச்சுகீஸ்). 17 June 2017. பார்க்கப்பட்ட நாள் 18 June 2017.