போர்க் கலை (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(போர்க் கலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
போர்க்கலை (The Art of War)
Inscribed bamboo-slips of Art of War.jpg
மூங்கில் கீற்றுக்களில் எழுதப்பட்ட போர்க்கலை நூல். சான்டோங்கில் லின்யி பகுதியில் உள்ள யிங்க் மலையில் 1972 ஆம் ஆண்டில் அகழ்ந்தெடுக்கப்பட்டது. கிமு 2 ஆம் நூற்றாண்டைக் சேர்ந்தது எனக் கருதப்படுகிறது.
நூலாசிரியர் சுன் த்சு
நாடு சீனா
மொழி சீனம்
வகை போரியல் நூல்

போர்க்கலை (The Art of War) என்பது கிமு 5 ஆம் நூற்றாண்டு அளவில் சீன போரியல் மேதை சுன் த்சு அவர்களால் எழுதப்பட்ட நூல் ஆகும். போர்க் கலையில் பயன்படும் மூல உபாயங்களையும் உத்திகளையும் சிறப்பாக விபரிக்கிறது. உலகின் முக முக்கிய போர் நுட்ப நூல்களில் இதுவும் ஒன்று. இது "சுன் த்சு" காலத்தில் முற்றுப் பெறாமல், தொடர்ந்து வந்த போரிடும் நாடுகள் காலம்[1]) என்று அறியப்படும் காலத்திலேயே முற்றுப்பெற்றது என்பது சில அறிஞர்களின் கருத்து. இது 13 பிரிவுகளைக் கொண்டது. ஒவ்வொரு பிரிவும் போரின் வெவ்வேறு அம்சங்களைக் குறித்து எழுதப்பட்டுள்ளது. இதன் காலத்தில் போர் வியூகம், உத்தி என்பன தொடர்பில் அடிப்படையான நூலாக விளங்கிய இந்நூலை, இன்றும் அதன் போரியல் உள்நோக்குக்காக வாசிக்கின்றனர்.

போர்க்கலை நூல் உலகின் மிகப் பழையதும், வெற்றிகரமானதுமான போரியல் நூல்களுள் ஒன்று. சீனாவின் ஏழு போர்க்கலை நூல்கள் என வழங்கப்படுவனவற்றுள் மிகவும் புகழ் பெற்றதும், செல்வாக்கு மிக்கதுமான நூலும் இதுவே. கடந்த 2000 ஆண்டுகளுக்கு மேலாக, ஆசியாவின் மிகச் சிறந்த போர்க்கலை நூலாக இது விளங்கியது. சாதாரண மக்கள் கூட அதன் பெயரை அறிந்திருந்தனர்.[2] கிழக்கத்திய போரியல் சிந்தனை, வணிக உத்தி என்பவற்றை உள்ளடக்கிய மேலும் பல விடயங்களில் இந்நூலின் செல்வாக்குக் காணப்படுகின்றது.

போர் உத்தியில் நிலைஎடுத்தலின் முக்கியத்துவத்தை "சுன் த்சு" இந்த நூலில் வலியுறுத்திக் கூறுகிறார். ஒரு போர்ப்படையின் நிலையம் குறித்து முடிவு எடுக்கும்போது, இயற்பியச் சூழலின் புறநிலை சார்ந்த நிலைமைகளையும், சூழலில் உள்ள பிற போட்டியாளரின் அகநிலை சார்ந்த நம்பிக்கைகளையும் அடிப்படையாகக் கொள்ள வேண்டும். உத்தி என்பது ஏற்கனவே தீர்மானிக்கபட்ட ஒரு பட்டியலின் அடிப்படையில் செயலாற்றுவது அல்ல என்றும், மாறும் நிலைமைகளுக்கு ஏற்ப விரைவானதும் உகந்ததுமான எதிர்வினையே முக்கியமானது என்றும் "சுன் த்சு" கருதினார். திட்டம் ஒரு கட்டுப்பாடான சூழலில் செயற்படும், ஆனால் மாறும் சூழலில் போட்டித் திட்டங்கள் மோதுவதால், எதிர்பாராத நிலைமைகள் ஏற்படுகின்றன.

இந்நூல் முதன் முதலாக 1772 ஆம் ஆண்டில் பிரெஞ்சு யேசு சபையைச் சேர்ந்த யோன் யோசேப் மாரி அமியட் (Jean Joseph Marie Amiot) என்பவரால் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. பின்னர் 1905ல், பிரித்தானிய அலுவலர் எவரார்ட் பெர்கூசன் கல்தார்ப் (Everard Ferguson Calthrop) என்பவர் இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். மாவோ சேடொங், தளபதி வே ங்குயேன் கியாப், பாரன் ஆன்டொவின்-என்றி யொமினி (Antoine-Henri Jomini), தளபதி டக்ளசு மக்ஆர்தர், சப்பானியப் பேரரசின் தலைவர்கள் போன்றோர் உட்படப் பலர் இந்த நூலிலிருந்து அகத்தூண்டல் பெற்றுள்ளனர். இந்த நூல், வணிகம், நிர்வாகம் ஆகியவற்றுக்கான உத்திகளிலும் பயன்பட்டுள்ளது.[2][3]

நூலின் 13 பிரிவுகள்[தொகு]

பேரரசர் கியான்லோங்கின் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த, மூங்கில் கீற்றுக்களால் ஆன "போர்க்கலை நூலின் தொடக்கப் பகுதி

போர்க்கலை நூல் 13 பிரிவுகள் அல்லது அத்தியாயங்களாப் பிரிக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழக் கடந்த ஒரு நூற்றாண்டில் மொழிபெயர்த்த பலரும் வெவ்வேறு விதமாகத் தலைப்புக்களைக் கொடுத்துள்ளனர். "சோ-ஹூ வீ" என்பவர் 2003 ஆம் ஆண்டில் கொடுத்த தலைப்புக்கள் பின்வருமாறு:

 1. விவரமான மதிப்பீடும் திட்டமிடலும்
 2. போர் தொடுத்தல்
 3. போர்த்தந்திரத் தாக்குதல்
 4. படை நிலையெடுப்பு
 5. ஆற்றல்
 6. வலிமையும் வலிமைக் குறைவும்
 7. இராணுவ திட்டங்கள்
 8. வேறுபாடுகளும் நெகிழ்வுத்திறனும்
 9. நகர்வும் படை வளர்ச்சியும்
 10. நிலவகை
 11. ஒன்பது வகைப் போர்க்களங்கள்
 12. தீயினால் தாக்குதல்
 13. புலனாய்வும் ஒற்றாடலும்

பிரிவுச் சுருக்கங்கள்[தொகு]

 1. விவரமான மதிப்பீடும் திட்டமிடலும் என்னும் தலைப்பின் கீழ், வழி, பருவகாலம், நிலம், தலைமை, நிர்வாகம் ஆகிய ஐந்து அடிப்படையான காரணிகள் குறித்தும், போரின் முடிவைத் தீர்மானிக்கும் ஏழு விடயங்கள் குறித்தும் நூல் ஆராய்கிறது. இவ்விடயங்கள் குறித்துச் சிந்தித்து, மதிப்பீடு செய்து, ஒப்பிடுவதன் மூலம் ஒரு தளபதி வெற்றிக்கான வாய்ப்புக்களைக் கணித்துக்கொள்ள முடியும். இந்தக் கணிப்புக்களிலிருந்து விலகுவது முறையற்ற செயற்பாடுகள் மூலம் தோல்வியை உறுதிப்படுத்திவிடும்.
 2. போர் தொடுத்தல் என்னும் பிரிவு, போர் தொடர்பான பொருளியலை எவ்வாறு புரிந்து கொள்வது என்பது குறித்தும், சண்டைகளில் தீர்மானமான வெற்றிபெறுவது இறுதி வெற்றிக்கு எப்படி அவசியம் என்பது குறித்தும் விளக்குகிறது. போட்டிகளுக்கும் முரண்பாடுகளுக்குமான செலவைக் குறைப்பது, வெற்றிகரமான படை நடவடிக்கைகளுக்கு இன்றையமையாதது என்பது குறித்தும் இந்தப் பிரிவு ஆலோசனை கூறுகிறது.
 3. போர்த்தந்திரத் தாக்குதல் என்னும் மூன்றாம் பிரிவு வலிமைக்கான மூலம், படை எண்ணிக்கை அல்ல ஒற்றுமையே என்று வலியுறுத்துவதுடன், எந்தவொரு போர் வெற்றிக்கும் தேவையான ஐந்து காரணிகள் பற்றியும் ஆராய்கிறது. முக்கியத்துவ ஒழுங்கில் இந்த ஐந்து காரணிகள் தாக்குதல், உத்தி, கூட்டணி, படை, நகரங்கள் என்பன ஆகும்.
 4. படை நிலையெடுப்பு என்னும் பிரிவு, படைகளைப் பாதுகாப்பான முறையில் முன்னே நடத்திச் செல்வதற்கு முடியுமான நிலை ஏற்படும் வரை ஏற்கனவே உள்ள நிலைகளைப் பாதுகாப்பதன் இன்றியமையாமை குறித்து விளக்குகிறது. இது வாய்ப்புக்களை எவ்வாறு அடையாளம் காண்பது என்பது குறித்துத் தளபதிகளுக்குக் கற்பிப்பதுடன், எதிரிகளுக்கு வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கக்கூடாது என்று எடுத்துக் கூறுகிறது.
 5. ஆற்றல் என்னும் ஐந்தாம் பிரிவின் கீழ், படைகளுக்கு உந்து சக்தியைக் கொடுப்பதற்கு, ஆக்கத் திறனையும், காலத் தெரிவையும் பயன்படுத்துவது குறித்து விளக்குகிறது.
 6. வலிமையும் வலிமைக் குறைவும் என்னும் பிரிவு, எதிரியின் பலவினத்தைப் பயன்பபடுத்தி போர் சூழலை எப்படி தனக்கு சாதகமாய் பயன்பபடுத்துவது என்பதை பற்றியும் , மாறும் தன்மைக் கொண்ட போர்களத்தில் எப்படி மாற்றிக் கொள்வது என்பதை பற்றியும் உள்ளது.
 7. இராணுவ திட்டங்கள் நேரடி மோதல் ஆபத்துகளையும் மற்றும் எப்படி அவர்கள் தளபதி மீது நேரிடும் போது அந்த மோதல்களையும் வெற்றி பெறுவது என்பதையும் கூறுகிறது.
 8. வேறுபாடுகளும் நெகிழ்வுத்திறனும் ஒரு இராணுவத்தில் பதிலளிப்புகளுக்கிடையேயான நெகிழ்வு தேவை கவனம் செலுத்துகிறது. அது வெற்றிகரமாக சூழ்நிலையில் மாற்றம் பதிலளிக்கும் என்பதை பற்றி விளக்குகிறது.
 9. நகர்வும் படை வளர்ச்சியும் என்னும் பிரிவில் புதிய எதிரி பிரதேசங்கள் மூலம் நகர்தல், மற்றும் இந்த சூழ்நிலைகளில் எவ்வாறு செயற்படுதல் என இதில் வெவ்வேறு சூழ்நிலைகளில் விவரிக்கிறது. இந்த பிரிவில் பெரும்பங்கு பிறரிடமிருந்து நோக்கங்கள் மதிப்பீடு கவனம் செலுத்துகிறது.
 10. நிலவகை என்னும் பிரிவில் எதிர்ப்புத் தன்மையுடைய 3 பொது பகுதிகள் தெரிகிறது (தொலைவு, ஆபத்து, தடைகள்). அவர்களிடம் இருந்து எழும் நிலப் படைகளைத் ஆறு வகையான நிலங்கள் உள்ளது மற்றும் இந்த ஆறு வகையான நில அமைப்பில் நன்மையும் உண்டு தீமையும் உண்டு.

மூன்று முக்கிய கட்டளைகள்[தொகு]

 • எதிரியையும், உன்னையும் அறி, நூறு போர்களில் நீ ஒருபோதும் ஆபத்தில் இருக்காய்.
 • நூறு போர்களை வெல்வது போரின் உயர்ந்த கலையல்லை, போரிடாமல் எதிரியை அடக்குவதுவதே அக்கலை.
 • பலமானதை தவிர், பலவீனமானத்தை தாக்கு.

குறிப்புகள்[தொகு]

 1. Griffith, Illustrated Art of War, p. 17–18
 2. 2.0 2.1 Sawyer, Ralph D. The Seven Military Classics of Ancient China. New York: Basic Books. 2007. p. 149.
 3. Floyd, Raymond E. http://www.allbusiness.com/management/benchmarking-strategic-planning/338250-1.html

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=போர்க்_கலை_(நூல்)&oldid=2296699" இருந்து மீள்விக்கப்பட்டது