உள்ளடக்கத்துக்குச் செல்

போரும் அமைதியும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
War and Peace
போரும் அமைதியும் நூலின் முகப்பு, 1869 (உருசிய மொழி)
நூலாசிரியர்லியோ டால்ஸ்டாய்
உண்மையான தலைப்புВойна и миръ
நாடுஉருசியா
மொழிஉருசிய மொழி, சில பிரான்சியச் சொற்களுடன்
வகைவரலாற்றுப் புதினம், காதல் புதினம், போர் புனைவு, மெய்யியல் புனைவு
வெளியீட்டாளர்த உருசியன் மெசஞ்சர் (தொடர்)
வெளியிடப்பட்ட நாள்
1869
ஊடக வகைஅச்சு (கடின அட்டை & நூல் அட்டை) & ஒலிநூல்
பக்கங்கள்1,225 (முதல் பதிப்பிக்கப்பட்ட பதிப்பு)

போரும் அமைதியும் (War and Peace, உருசிய மொழி: Война и миръ, வொய்னா இ மீர்) உருசிய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் எழுதிய புதினம் ஆகும். இந்த நூல் முழுமையாக 1869ஆம் ஆண்டு முதன்முதலாகப் பதிப்பிக்கப்பட்டது. இதிகாச அளவிலான இந்நூல் உலக இலக்கியத்தில் மிகவும் முதன்மையானதாகக் கருதப்படுகின்றது. [1][2][3] இதுவும் டால்ஸ்டாயின் மற்றொரு படைப்பான அன்னா கரேனினாவும் (1873–1877) அவரது சிறந்த இலக்கியச் சாதனையாகக் கருதப்படுகின்றன.

போரும் அமைதியும் ஐந்து உருசிய அரச குடும்பங்களின் பார்வையில், உருசியா மீதான பிரான்சியப் படையெடுப்பை அடுத்த நிகழ்வுகளையும் சார்மன்னர் சமூகத்தில் நெப்போலிய காலத்தின் தாக்கத்தையும் விரிவாக விவரிக்கின்றது. 1805 ஆண்டு என அறியப்பட்ட இப்புதினத்தின் முந்தைய பதிப்பு[4] த உருசியன் மெசஞ்சர் என்ற உருசிய இதழில் 1865க்கும் 1867க்கும் இடையே தொடராக வெளியாயிற்று. இப்புதினம் முழுமையாக 1869இல் பதிக்கப்பட்டது.[5] 2009இல் நியூஸ்வீக் வெளியிட்ட முதல் 100 நூல்களில் முதலிடத்தைப் பிடித்தது.[6] 2003 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பிபிசியின் கருத்துக்கணிப்பொன்றில் 20 இடம் பெற்றிருந்தது. [7]

டால்ஸ்டாய், போரும் அமைதியும் "புதினமல்ல, கவிதையுமல்ல, வரலாற்று பதிவேடுமல்ல" எனக் கூறியுள்ளார். படைப்பின் பெரும்பகுதி, குறிப்பாக பிந்தைய அத்தியாயங்களில், கதை விவரிப்பாக இல்லாமல் மெய்யியல் விவாதமாக உள்ளன.[8] உருசியாவின் சிறந்த இலக்கியப் படைப்பு எந்தவொரு சீர்தரத்திலும் சிக்கிக் கொள்ளக்கூடாது என்றார். எனவே போரும் அமைதியும் நூலை டால்ஸ்டாய் "புதினம்" என அழைக்கத் தயங்கினார். அவரது கூற்றுப்படி அவரது முதல் புதினம் அன்னா கரேனினா ஆகும்.

தமிழில் மொழிபெயர்ப்பு

[தொகு]

டி. எஸ். சொக்கலிங்கம் இப்புதினத்தை தமிழில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.

மேற்சான்றுகள்

[தொகு]
  1. Moser, Charles. 1992. Encyclopedia of Russian Literature. Cambridge University Press. pp. 298–300.
  2. Thirlwell, Adam "A masterpiece in miniature." The Guardian (London, UK) October 8, 2005
  3. Briggs, Anthony. 2005. "Introduction" to War and Peace. Penguin Classics.
  4. Pevear, Richard (2008). "Introduction". War and Peace. Trans. Pevear; Volokhonsky, Larissa. நியூயார்க் நகரம், நியூ யோர்க் மாநிலம்: Vintage Books. pp. VIII–IX. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4000-7998-8.
  5. Knowles, A.V. Leo Tolstoy, Routledge 1997.
  6. Newsweek's Top 100 Books: The Meta-List, retrieved on 07 July 2009
  7. "BBC - The Big Read". BBC. April 2003, Retrieved October 27, 2012
  8. "Introduction?". War and Peace. Wordsworth Editions. 1993. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-85326-062-9. பார்க்கப்பட்ட நாள் 2009-03-24.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
War and Peace
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போரும்_அமைதியும்&oldid=3583282" இலிருந்து மீள்விக்கப்பட்டது