அன்னா கரேனினா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அன்னா கரேனினா
அன்னா கரேனினாவின் முதல் தொகுப்பின் முகப்புப் பக்கம். மாசுக்கோ, 1878.
நூலாசிரியர்லியோ டால்ஸ்டாய்
உண்மையான தலைப்புАнна Каренина
மொழிபெயர்ப்பாளர்கான்சுடன்சு கார்னெட் (முதல்)
நாடுஉருசியா
மொழிஉருசியா
வகைநிகழ்நிலை புதினம்
வெளியீட்டாளர்த உருசியன் மெசஞ்சர்
வெளியிடப்பட்ட நாள்
1877
ஊடக வகைஅச்சு (தொடர்)
பக்கங்கள்864
ISBN978-1-84749-059-9
OCLC220005468

அன்னா கரேனினா (Anna Karenina, உருசியம்: «Анна Каренина»)[1] உருசிய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாயால், 1873 முதல் 1877 வரை த உருசியன் மெசஞ்சர் இதழில் தொடர்கதையாக எழுதி, பதிப்பிக்கப்பட்ட புதினம் ஆகும். தொடர் வெளிவந்தபோது இதழாசிரியர் மிக்கைல் காட்கோவுடன் அரசியல் பார்வைகளால் பிணக்கு கொண்டதால் தடைபட்ட இந்தப் புதினத்தின் முதல் முழுமையான வடிவம் நூல் வடிவத்தில் 1878ஆம் ஆண்டில் வெளியானது.

அன்னா கரேனினா நிகழ்நிலை புனைவுகளில் மிகச் சிறந்ததாகக் கருதப்படுகின்றது. முதலில் எழுதிய போரும் அமைதியும் ஆக்கத்தை டால்ஸ்டாய் புதினத்திற்கும் மேலானதாகக் கருதியதால் இதனையே தம்முடைய முதல் உண்மையான புதினமாக கருதினார்.

மேற்சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

ஆங்கிலத்தில் அன்னா கரேனினா[தொகு]

உருசியத்தில் அன்னா கரேனினா[தொகு]

தொடர்புடைய ஆக்கங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்னா_கரேனினா&oldid=3864227" இலிருந்து மீள்விக்கப்பட்டது