போரிசு நெம்த்சோவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போரிசு நெம்த்சோவ்
Борис Немцов
உருசியக் கூட்டமைப்பின் துணைப் பிரதமர்
பதவியில்
28 ஏப்ரல் 1998 – 28 ஆகத்து 1998
குடியரசுத் தலைவர் போரிசு எல்ட்சின்
பிரதமர் செர்கே கிரியென்கோ
விக்டர் செர்னோமீர்தின் (பொறுப்பு)
உருசியக் கூட்டமைப்பின் முதல் துணைப் பிரதமர்
பதவியில்
17 மார்ச் 1997 – 28 ஏப்ரல் 1998
உடன் பணியாற்றுபவர் அனத்தோலி சுபாய்சு
குடியரசுத் தலைவர் போரிசு எல்ட்சின்
பிரதமர் விக்டர் சென்னோமீர்தின்
முன்னவர் விளாதிமிர் பொட்டனின்
அலெக்சி போல்ஷகோவ்
விக்டர் இலியூசின்
பின்வந்தவர் யூரி மாசுலியுக்கோவ்
வாதிம் குஸ்தோவ்
தனிநபர் தகவல்
பிறப்பு போரிசு யெஃபிமோவிச் நெம்த்சோவ்
அக்டோபர் 9, 1959(1959-10-09)
சோச்சி, உருசிய சோவியத் கூட்டமைப்பு சோசலிச குடியரசு, சோவியத் ஒன்றியம்
இறப்பு 27 பெப்ரவரி 2015(2015-02-27) (அகவை 55)
மாஸ்கோ, உருசியா
அரசியல் கட்சி வலது படைகளின் ஒன்றியம் (1999–08)
சொலிதார்னொசுத்து (2008 முதல்)
சட்டமின்மையும் ஊழலும் இல்லாத உருசியாவிற்கான மக்கள் விடுதலைக் கட்சி (PARNAS) (2010-12)
உருசியக் குடியரசுக் கட்சி - பர்னாசு (2012 முதல்)
சமயம் உருசிய மரபுவழித் திருச்சபை

போரிசு இயெஃபிமோவிச் நெம்த்சோவ் (Boris Yefimovich Nemtsov, உருசியம்: Борис Ефимович Немцóв; 9 அக்டோபர் 1959 – 27 பெப்ரவரி 2015) உருசிய அறிவியலாளரும் தாராளமயவாத அரசியல்வாதியும் ஆவார். 1990களில் அப்போதைய அரசுத்தலைவர் போரிசு எல்ட்சின் தலைமையில் வெற்றிகரமான அரசியல் வாழ்க்கை அமையப் பெற்றிருந்தார். 2000 முதல் விளாதிமிர் பூட்டினின் ஆட்சியை விமரிசித்து வந்தவர். 2015 பெப்ரவரி 27 அன்று உக்ரைனில் உருசியாவின் பங்கேற்பு குறித்தும் நாட்டில் நிலவும் நிதி நெருக்கடி குறித்தும் பூட்டினின் கொள்கைகளுக்கு எதிராக மாஸ்கோவில் பேரணி ஒன்றை ஒழுங்குபடுத்தும்போது கிரெம்லின் சுவர்கள் மற்றும் செஞ்சதுக்கத்திற்கு 200 மீட்டர்கள் தொலைவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.[1]

இறக்கும் வரை நெம்த்சோவ் யாரோசுலாவ் வட்ட பிராந்திய நாடாளுமன்ற உறுப்பினராகவும், உருசியக் குடியரசுக் கட்சி, சொலிதார்னொஸ்த் என்ற எதிர்க்கட்சி இயக்கம் ஆகியவற்றின் தலைவர்களில் ஒருவராகவும் இருந்து வந்தார்.[2][3] விளாதிமிர் பூட்டினின் அரசை விமரிசித்து இவர் பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

கல்வியும் ஆய்வும்[தொகு]

கார்க்கி அரசுப் பல்கலைக்கழகத்தில் பயின்று 1981 இல் இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர், தனது 25வது அகவையில் இயற்பியலிலும், கணிதவியலிலும் முனைவர் பட்டம் பெற்றார். 1990 வரை இவர் கார்க்கி வானொலி-இயற்பியல் கல்விக் கழகத்தில் பணியாற்றி வந்தார்.[4] குவாண்டம் விசையியல், வெப்ப இயக்கவியல், ஒலியியல் ஆகியவற்றில் 60 இற்கும் மேற்பட்ட ஆக்கங்களை வெளியிட்டுள்ளார். ஒளியியல் சீரொளி ஒன்றை இவர் கண்டுபிடித்துள்ளார்.[5][6]

மேற்சான்றுகள்[தொகு]

  1. Amos, Howard; Millward, David (27 பெப்ரவரி 2015). "Leading Putin critic gunned down outside Kremlin". The Telegraph (London). http://www.telegraph.co.uk/news/worldnews/europe/russia/11441466/Veteran-Russian-opposition-politician-shot-dead-in-Moscow.html. பார்த்த நாள்: 28 பெப்ரவரி 2015. 
  2. "Ñîïðåäñåäàòåëè". Svobodanaroda. http://www.svobodanaroda.org/co_chairs/. பார்த்த நாள்: 28 பெப்ரவரி 2015. 
  3. "Áîðèñ Íåìöîâ". Svobodanaroda. http://www.svobodanaroda.org/co_chairs/3334/. பார்த்த நாள்: 28 பெப்ரவரி 2015. 
  4. "Profile of Boris Nemtsov: Russia's newest first deputy premier". Jamestown Foundation Prism. 18 April 1997. http://www.jamestown.org/publications_details.php?search=1&volume_id=4&issue_id=189&article_id=2244. 
  5. "Борис Немцов: биография убитого оппозиционера". http://www.imenno.ru/2015/02/28/296517/. 
  6. Nemtsov, Boris (January 1996). "Coherent Mechanism of Sound Generation in Vapour Condensation". Acta Acustica united with Acustica 82 (1). 

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=போரிசு_நெம்த்சோவ்&oldid=3590427" இருந்து மீள்விக்கப்பட்டது