போத்தன்னா
போத்தன்னா | |
---|---|
பம்மேரா கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள போத்தன்னாவின் உருவச் சிலை | |
பிறப்பு | 1450 பம்மேரா கிராமம் |
இறப்பு | 1510 (அகவை 59–60) |
தொழில் | கவிஞர், உழவர் |
வகை | சமயம் |
பம்மேரா போத்தனா (Bammera Pothana) (1450-1510) பாகவத்தை சமசுகிருதத்திலிருந்து தெலுங்கிற்கு மொழிபெயர்த்ததற்காக அறியப்பட்ட மிகவும் பிரபலமான ஒரு தெலுங்குக் கவிஞர் ஆவார். இவர் சமசுகிருத அறிஞரும் ஆவார்.[1] இவரது படைப்பான சிறீமத்பாகவதமு, தெலுங்கில் போத்தன்னா பாகவதம் என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது.[2]
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]போத்தன்னா பம்மேரா கிராமத்தில் ஒரு நியோகி பிராமணக் குடும்பத்தில்[3] பிறந்தார்.
இலக்கிய வாழ்க்கை
[தொகு]சிறுவயதிலேயே மன்னன் சிறீசிங்க பூபாலனின் துணைவியான போகினியைப் புகழ்ந்து எழுதப்பட்ட போகினி தண்டகம் என்ற கவிதையை எழுதினார்.[4] வீரபத்ர விஜயமு என்ற இவரது இரண்டாவது படைப்பு சிவபெருமானின் அங்கமான வீரபத்திரரின் சாகசங்களை விவரிக்கிறது. தட்சனின் யாகத்தை அழித்ததே முக்கிய கருப்பொருள்.
துன்புறுத்தல்
[தொகு]இராசகொண்டாவின் (இன்றைய நல்கொண்டா மாவட்டம்) பத்ம நாயக்க மன்னன் போத்தன்னாவை தனக்கு 'ஆந்திர மகா பாகவதத்தை' அர்ப்பணிக்கக் கேட்டுக்கொண்டான். மன்னரே ஒரு அறிஞர் மற்றும் நன்கு அறியப்பட்ட சமசுகிருத நாடகமான உருத்ரநவசுதாகரா உட்பட பல படைப்புகளை எழுதியவர்.[5] ஆனால், போத்தன்னா மன்னனின் கட்டளைக்குக் கீழ்ப்படிய மறுத்து, இராமனுக்கு பாகவதத்தை அர்ப்பணித்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "A literary colossus". தி இந்து (Chennai, India). 7 July 2003 இம் மூலத்தில் இருந்து 23 October 2003 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20031023155708/http://www.hindu.com/thehindu/mp/2003/07/07/stories/2003070701000400.htm.
- ↑ "TTD to release Pothana Bhagavatham". தி இந்து (Chennai, India). 20 January 2007 இம் மூலத்தில் இருந்து 22 January 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070122135510/http://www.hindu.com/2007/01/20/stories/2007012003650200.htm.
- ↑ Sruti, Issues 148-159. 1997.
Potana was born in a Niyogi brahmin family; his father was Kesana and his mother was Lakkama.
- ↑ P.T, Raju; Rao. A Telugu Literature. India: Onal Book House.
- ↑ P.T, Raju; Rao. A Telugu Literature. India: Onal Book House.
மேலும் படிக்க
[தொகு]- P, Chenchiah; Raja Bhujanga Rao. A History of Telugu Literature. India: Oxford University press.