உள்ளடக்கத்துக்குச் செல்

போகதா அருவி

ஆள்கூறுகள்: 18°28′34″N 80°30′00″E / 18.476135°N 80.500027°E / 18.476135; 80.500027
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போகதா அருவி
போகதாநீர்வீழ்ச்சி
Map
அமைவிடம்சீக்குபள்ளி, தெலங்காணா
ஆள்கூறு18°28′34″N 80°30′00″E / 18.476135°N 80.500027°E / 18.476135; 80.500027
வகைஅருவி

போகதா அருவி (Bogatha Water Falls) என்பது தெலுங்கானா மாநிலத்தில் முலுகு என்னும் நகரத்தில் உள்ள சீக்கு பள்ளி ஓடையில் அமைந்த ஒரு அருவியாகும். இது பத்ராசலத்திலிருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது . இந்த அருவி முலுகு என்னும் ஊரில் இருந்த 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அதேபோல வாரங்கலில் இருந்து 140 கிலோ மீட்டர் தொலைவிலும், ஐதராபாத்திலிருந்து 129 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது . தேசிய நெடுஞ்சாலை 202 இல் புதிதாக கட்டமைக்கப்பட்ட பாலத்தால், ஹைதராபாத்துக்கும் அருவிக்குமான தொலைவு 440 கிலோ மீட்டரிலிருந்து 329 கிலோமீட்டராக குறைந்துள்ளது. இது தெலுங்கானா மாநிலத்தில் உள்ள இரண்டாவது மிகப்பெரிய அருவியாக கருதப்படுகிறது.[1] [2]

சுற்றுலா

[தொகு]

இந்த அருவியில் எப்போதும் நீர் இருந்து கொண்டே இருந்தாலும், அருவியை ந கண்டுகளிக்க சரியான சரியான காலம் ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையே. காரணம் என்னவென்றால் இக்காலகட்டத்தில் இந்த அருவியில் நீரின் பாய்ச்சல் மிக அதிகமாக இருக்கும். [1] இதற்கு சரியான சாலை வசதி இல்லாததால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இம்மலை மீது சிறிது தூரம் ஏற வேண்டும்.[1]

போகதா அருவி “தெலுங்கானாவின் நயாகரா” என்று அழைக்கப்படுகிறது.[1][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 "Bogatha waterfalls: The Telangana Niagara". Telanganastateofficial.com.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Breathtaking view Bogatha waterfalls". Thehindu.com.
  3. "Telangana Nayagara Waterfalls -- Most Beautiful 'Bogatha Waterfall' at Vajedu in Khammam District". யூடியூப். பார்க்கப்பட்ட நாள் 5 January 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போகதா_அருவி&oldid=2955313" இலிருந்து மீள்விக்கப்பட்டது